தாம்பரம் மக்கள் நல சங்கம் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம்.

Tambaram People's Welfare Association along with 20 groups has opposed the proposed privatisation of drinking water supply in Tambaram.

தாம்பரம் மாநகராட்சியானது, கடந்த 2023 ஆம் ஆண்டு மாநகராட்சி உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் 24×7 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்திருந்தது. அந்தத் திட்ட அறிக்கை செயல்பாட்டுக்கு முழுமையாக வருவதற்கு முன்பே, 2026 -யில் தற்போதைய மக்கள் தொகை, நகர்ப்புற வளர்ச்சி, எதிர்கால குடிநீர் தேவை, தற்போதைய உட்கட்டமைப்பு மற்றும் திட்ட செலவினங்களைக் கருத்தில் கொண்டு குடிநீர் திட்டத்திற்கான மீண்டும் ஒரு விரிவான திட்ட அறிக்கை (DPR) பணி மேற்கொள்ளப்படுவதாகவும், முதற்கட்டமாக செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை, பெருங்குளத்தூர், பீர்க்கங்கரணை ஆகிய ஆறு பகுதிகளை உள்ளடக்கிய குடிநீர் விநியோகத்திற்கு அரசு-தனியார் பங்கேற்பு (PPP) முறையில் ஆய்வு மற்றும் பரிந்துரை பணிகளை மேற்கொள்ளுவதற்கு அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் விட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் விநியோகத் திட்டத்தில் தனியார் பங்களிப்பை இணைப்பது குறித்து பொதுமக்களிடம் போதிய ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு நடத்தப்படாத நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலக் கட்டண முறை, நிர்வாகக் கட்டுப்பாடு, பொதுமக்கள் மீதான பொருளாதாரச் சுமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பொதுமக்களிடையே நியாயமான அச்சமும் ஐயப்பாடுகளும் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, தாம்பரம் மக்கள் நல சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் திரு. வி. ஆர். சிவராமன் தலைமையில், “குடிநீர் தேவைகளும், தீர்வுகளும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கக் கூட்டம் 20.09.2026 அன்று மாலை தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள சந்திரா டவர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் நீரியல் வல்லுநரான பேராசிரியர் ஜனகராஜன் சிறப்புரையாற்றினார். அப்போதைய தாம்பரம் ஊராட்சி/நகராட்சிக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 1964 முதலே மேற்கொள்ளப்பட்ட நீர் விநியோக வரலாற்று நடவடிக்கைகள் பகிரப்பட்டன.

“இத்திட்டத்தைப் பொது-தனியார் பங்களிப்பு (PPP) மாதிரி மூலம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள சூழலில், இத்திட்டத்தின் சாதக, பாதகங்கள் மற்றும் தனியார் பங்களிப்பு இல்லாமல் அரசே இத்திட்டத்தை ஏன் செயல்படுத்தக் கூடாது? என்பது போன்ற விரிவான கருத்துக்களைக் கேட்டறியவும், பொதுமக்களின் நலன் காக்கவும் இக்கூட்டம் அவசியமாகிறது” எனத் தெரிவித்தார் சங்கத் தலைவர் திரு. வி.ஆர். சிவராமன்.


Read more: Water supply in Chennai’s OMR: Two decades of broken promises


சிறப்புரையாளர் பேராசிரியர் ஜனகராஜன், “அரசு முதலில் ஏரிகள், குளங்கள், கோவில் குளங்கள், குட்டைகள், அரசு அலுவலகங்கள், பள்ளி/கல்லூரி விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேமிப்பை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். அதன் தொடர்ச்சியாக தனிநபர் குடியிருப்புகளில் மழைநீர் சேமிப்பை வலியுறுத்த வேண்டும். மேலும் தாம்பரம் மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஏரிகளில் நேரடியாகக் கலக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், கழிவுநீர் நன்னீர் ஆதாரங்களை (ஏரிகள்) அடைவதைத் தடுப்பதன் மூலம், குடிநீரின் பாதுகாப்பை அடைய முடியும்,” எனத் தெரிவித்தார்.

மாமன்ற உறுப்பினர் திரு. யாகூப், “அதிகாரிகளிடம் மனு அளிப்பதுடன் நின்றுவிடாமல், பொதுமக்கள் தங்கள் பகுதி மாமன்ற உறுப்பினர்கள் மூலம் தொடர்ந்து முறையீடு செய்து அழுத்தம் கொடுப்பதே விரைவான தீர்வுக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டார்.

speakers at Tambaram meeting
Experts, civil society groups and residents held discussions at a meeting to oppose privatisation of drinking water in Tambaram Municipal Corporation limits. Pic: Tambaram People’s Welfare Association.

இந்தக் கூட்டத்தில் குடியிருப்பு நலச் சங்கங்கள், குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்புகள், குடிமக்கள் குழுக்கள்/அமைப்புகள், அறக்கட்டளைகள், சூழல் அமைப்புகள் என 20-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய 100-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர். இறுதியாகக் கூட்டத்தில் 5 முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக 24×7 மணி நேரக் குடிநீர் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் மாநகராட்சி செயல்படுத்தக் கோருதல்; தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சேமிப்பைக்கட்டாயமாக்குதல்; ஏரிகள், தாங்கல்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து நீர்ப்பிடிப்புப் பகுதியை மேம்படுத்தக் கோருதல்; மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்மஞ்சும் கிணறுகள் (Recharge/Percolation Wells) மற்றும் தேவையான நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை அமைக்கக் கோருதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஐந்து தீர்மானங்களையும் ஒருமனதாக நிறைவேற்றி, தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் உடனடி கவனத்திற்கும் மற்றும் உரிய நடவடிக்கைக்காகவும் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

[This article is based on a press release shared by the Tambaram People’s Welfare Association and has been published here with minimal edits.]

Also read:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Similar Story

Bengaluru’s apartment STPs: How wastewater can transform into a vital resource

Apartments can release half their treated water, yet without pipelines, buyers, or public trust, it goes nowhere. Infrastructure can fix this.

Bengaluru boasts one of the world's largest networks of decentralised sewage treatment plants (STPs). Yet, certificates of compliance are routinely issued without continuous monitoring, and much of the water treated on-site is never reused. In Part 1 of this series, we explored case studies of how three different apartment complexes navigate these issues. Missing pipelines, no buyers, and low trust in recycled water: the reasons why treated water has nowhere to go are numerous. In this second part, we examine these hurdles and what it will take to convert wastewater into a vital resource. Apartment residents often blame builder or…

Similar Story

Treated water down the drain: Bengaluru’s apartment STPs are failing efficient reuse

Apartment STPs aim to prevent sewage pollution and tackle water shortages, but weak monitoring and regulatory gaps raise serious efficiency questions.

In a 400-unit apartment complex in Jakkur, about one-third of treated water is being dumped into a nearby stormwater drain. While National Building Code (NBC) guidelines mandate that a building must have a Sewage Treatment Plant (STP) with a capacity of 210 to 290 Kilolitres per day (KLD), this apartment actually has an STP with around 300 KLD capacity. A resident of the complex, who requested anonymity, said that despite conducting audits, regularly monitoring water quality, and installing aerators, the apartment still struggles to reuse 100 per cent of its treated water. This is not an isolated case. In a…