TAMIL

நாம் பெருந்தொற்றோடு வாழப்பழகி ஆண்டுகள் இரண்டு ஓடி விட்டன. நம்மில் பலரும் பல இழப்புகளைச் சந்தித்திருக்கிறோம்.  எனினும், மீண்டெழுந்து இன்னும் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.  மானுடம் இத்தகைய பெருந்தொற்றுகளையும் பேரிடர்களையும் தொன்றுதொட்டே சந்தித்து வந்திருக்கிறது. அந்த அனுபவங்கள் தந்த ஆற்றலைக் கொண்டு அடுத்த நிலைக்குத் தன்னைக் கொண்டு சென்றிருக்கிறது.  பெருந்தொற்றின் பாதிப்புகள் குறித்த பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த அந்த பரபரப்பான நேரத்தில்தான் நம்மையும் தொற்றியது, கொரோனா.  சற்றே அசட்டையாக இருந்ததின் விளைவே அது. அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும், எச்சரிக்கையானோம்.  ஆனால், அடுத்த ஓரிரு நாளில் தொற்று தன்னிருப்பைத் தெளிவாக உணர்த்த ஆரம்பித்ததும், பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு அதன் முடிவு வருவதற்கு முன்னரே, மருத்துவரிடம் கலந்தாலோசித்து வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு நம்மை உட்படுத்திக்கொண்டோம். அந்த நேரடி அனுபவத்தையும் அதைக் கடக்க உதவிய நல் உள்ளங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். இதன் மூலம் நாம் கற்றுக்கொண்டவற்றையும்…

Read more

Translated by Sandhya Raju கடந்த 6 வருடங்களாக காரப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள வைகுண்ட் சுந்தரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். தண்ணீர் லாரியை நம்பி தான் நாங்கள் உள்ளோம், அதுவும் கோடை காலத்தில் தண்ணீருக்காக நிறைய செலவிழப்போம். அதனால், தண்ணீர் உபயோகத்தை கண்காணிக்கவும், அதை பொறுத்து செலவை பகிரவும், வீணாக்கலை தடுக்கவும் எண்ணினோம். இதற்கான நல்ல நிலையான தீர்வாக நீர் மீட்டர் வழியை கண்டறிந்தோம். நீர் துயரங்கள் நகரம் விரிவாகும் போது, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இது ஓ.எம்.ஆர் சாலையில் வசிப்பவர்களுக்கு வெகுவாக பொருந்தும். பெரு நகர எல்லைக்கு உட்பட்டிருந்தாலும் குழாய் வழி தண்ணீர் இன்னும் இல்லாத நிலையில், நாங்கள் இன்றும் தண்ணீர் லாரியை நம்பியே உள்ளோம். Read more: Why more Chennaiites should have water meters in their home பருவ காலம் பொறுத்து நீர் வினியோகம் வேறுபடும், மேலும்…

Read more

Translated by Sandhya Raju தினந்தோறும் காலையில் நம் வீட்டு வாசலில் போடப்படும் செய்தித்தாளை எடுக்கையில், அது எவ்வாறு நம்மை வந்தடைகிறது என சிந்திப்பதில்லை. உலகின் நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள, பத்திரிக்கை விநியோகிஸ்தர்கள் மற்றும் அதைச்சுற்றி இயங்கும் சங்கலித்தொடர் பெரும் பங்கு வகிக்கின்றன. புயல், மழை, வெய்யில் எதையும் பொருட்படுத்தாமல் , ஏன் இந்த பெருந்தொற்று காலத்திலும் செய்த்தித்தாள் விநியோகம் தொடர்ந்தது. செய்தியை தரும் பத்திரிக்கையாளர்களுக்கு நிகராக விநியோகிஸ்தர்களும் முக்கியம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, செய்தி விநியோகத் துறையில் உள்ளவர்களுக்கு எப்போதுமே அரசாங்க நலன்கள் அல்லது அங்கீகாரம் கிடைப்பதில்லை. 2500 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், துணை முகவர்கள்/விநியோகஸ்தர் மற்றும் விநியோக பணியாளர்கள் பலவீனமான சமூக பாதுகாப்பு வலையில் உள்ளனர். எந்தவொரு நலவாரியத்திலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை, அல்லது தமிழக அரசாங்கத்தால் எந்தவொரு திட்டத்திற்கும் கருதப்படவில்லை. "ஐந்து வருடம் முன், விநியோக பணியாளர் பணியில் இருக்கும் போது சாலை விபத்தில் இறந்தார். ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட ஏற்பாடு…

Read more

Translated by Sandhya Raju அரசு தலைமை மாற்றம் பல மாற்றங்களையுயும் அதனுடன் கொண்டு வருகிறது. 90-ம் ஆண்டு மத்தியில் ஐடி புரட்சி பெருமளவில் நிகழ்ந்தாலும், மெட்ராஸ் என்று அப்போது அழைக்கப்பட்ட தமிழகத்தின் தலைநகரமான சென்னை, அதற்குறிய பொலிவை பெற்றிருக்கவில்லை. இந்தியாவின் பிற தலைநகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களை ஒப்பிடுகையில் சென்னை பின் தங்கியிருந்தது. மே 1990 நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அப்போதைய முதல்வர் எம் கருணாநிதி, நகரத்திற்கு சென்னை என பெயர் மாற்றி, "சிங்கார சென்னை" என்ற பெயரில் பல திட்டங்களை அறிவித்தார். சிங்காரம் என்ற சொல்லுக்கு தமிழில் அழகான / அலங்கார / அழகுபடுத்தப்பட்ட என்று பொருள். நகரத்தை அழகுபடுத்துவதோடு, சாலைகளில் குவிந்த குப்பைகளை அகற்றுவது, போக்குரவத்தையும் சீராக்கும் திட்டத்தை அடக்கி இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. நகரத்தை வாழக்கூடியதாகவும் பயண நட்பாகவும் மாற்ற, இது தான் முதல் படி. முந்தைய மெகா திட்டங்கள் 1990-ம் ஆண்டு…

Read more

[Translated by Sandhya Raju] சென்னை பள்ளிகளில் நடந்த முந்தைய மற்றும் சமீபத்திய பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள், பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளன. பாதுகாப்பான இடமாக பள்ளிகள் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. ஆனால், ஒரு சில ஆசிரியர்கள் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு பள்ளிகள் பொறுப்பேற்க முடியுமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க கல்வி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும். முக்கியமாக, இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 படி, குழந்தைகளுக்கு அருகாமையில் இருந்து, தேவைப்படும் கல்வி அல்லது பயிற்சியை வழங்குவதில் எந்தவொரு பள்ளி, நிறுவனம் அல்லது தனிநபர்கள் ஈடுபட்டுள்ளனரோ, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொறுப்புணர்வு மற்றும் சொந்த பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறுகிறது. பள்ளி வளாகத்திற்குள், பள்ளி பேருந்தில், ஆன்லைன் அமர்வுகளின் போது அல்லது மாணவர்களுடன் பள்ளி ஊழியர்களின் எந்தவொரு ஈடுபாட்டிலும்,…

Read more

Translated by Sandhya Raju கோடை காலம் தொடங்கும் முன்னரே, ஏப்ரல் மாதத்தில் சேலையூரில் உள்ள எஸ். வேலு வீட்டிலுள்ள இரண்டு ஆழ்துளை கிணறு வற்றிப்போனது. மூன்றாவதாக, 600 அடி ஆழத்தில் மற்றொரு கிணறு தோண்டியதில், அதிலும் தண்ணீர் ஊற்றெடுக்கவில்லை. தற்போது தண்ணீர் லாரி மற்றும் நகராட்சி நீர் வழங்கலை நம்பி உள்ளார் வேலு. 2019-ம் ஆண்டு போல் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லையென்றாலும், நகரத்தின் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் வற்றிப்போக தொடங்கியுள்ளது. இதனால், குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரையே பெரும்பாலான வீடுகளும், தொழிற்சாலைகளும் நம்பியுள்ளன. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூடுதல் நீர் தேவையை பூர்த்தி செய்வதில் நிலத்தடி நீருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், இதன் தொடர் உபயோகத்தால், சென்னயின் நீர் அட்டவணை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 1970-ம் ஆண்டு வரை, சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் திறந்தவெளி கிணறுகளிலிருந்து கைகளால் இறைக்கப்பட்டதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. 70ம்…

Read more

Translated by Sandhya Raju கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வெல்ல தடுப்பூசி மிக அவசியம் என தற்போது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மந்த நிலையே காணப்படுகிறது. எட்டப்பட வேண்டிய இலக்கை விட தினந்தோறும் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மற்ற நகரங்களைப் போன்று சென்னையிலும் கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள், பின்னர் மூத்த குடிமக்கள், பின் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு கட்டங்களில் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மே மாதம் முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நோக்கம் சரியாக இருந்தாலும், கள நிலவரம் வேறாக உள்ளது. தடுப்பூசி இருப்பு மற்றும் நிலை கோவிஷீல்ட், கோவேக்சின் என இரு பிரதான தடுப்பூசிகள் தற்போது போடப்படுகின்றன. மூன்றாவதாக, ரஷ்ய தயாரிப்பான ஸ்பட்னிக் சில தனியார் மருத்துவமனைகளில், ஒரு டோஸ்…

Read more

Translated by Sandhya Raju தன் தந்தையின் ஆக்சிஜன் செறிவு அளவு 78 ஆக குறைந்தபோது, ஈசிஆர்-ல் வசிக்கும் இந்துலேகாவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டம் தொற்றிக்கொண்டது. தன் 72 வயது தந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் நிலை அவருக்கு இல்லை. "வென்டிலேடர் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் செலவாகும் என்றார்கள். எங்களை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் இதை எப்படி சமாளிக்க முடியும்" என வினவும் இந்துலேகாவிற்கு அரசு மருத்துவமனை தான் ஒரே தீர்வு. மே மாதம் 4-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை வாசலில் மணிக்கணக்காக காத்துக் கிடந்தனர். "104 உதவி மையத்திற்கு தொடர் அழைப்பு பலன் அளிக்கவில்லை. உதவி மைய ஊழியர்கள் பதில் அளித்தாலும், அவர்களால் இந்துலேகாவின் தந்தைக்கு ஆக்சிஜன் படுக்கையை வழங்க முடியவில்லை." என்கிறார் இந்துலேகாவிற்கு உதவி செய்த கோவிட் தன்னார்வ படையை சேர்ந்த தன்னார்வலர் பாரதி ரமணன். ஒரு…

Read more

கொரோனா தொற்றின் 2வது அலை ஒரு வித தீவிரத் தன்மையுடன் பரவி அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மீண்டும் ஒருமுறை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றின் தீவிரம் சற்றே குறைந்து, ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, ஒரு புதிய இயல்புக்குத் திரும்பிய சிறிது காலத்தில் அசுர வேகத்தில் பரவி, அதிகளவில் உயிர்பலியையும் ஏற்படுத்திவருகிறது கொரோனா என்னும் இக்கொடிய தொற்று.  இந்த சவாலான காலகட்டத்தின் போது சேவைக்களத்தில் முன் நிற்பவர்களில் இந்தக் கட்டுரைக்குரியவர்களும் அடங்குவர். நாம் ஆர்டர் செய்யும் உணவினை நம் இருப்பிடத்திற்கே குறித்த நேரத்திற்குள் கொண்டு வந்து தரும் இவர்கள் நகரவாசிகளின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறார்கள்.  ஸோமாடோ (Zomato) மற்றும் ஸ்விக்கி (Swiggy) போன்ற நிறுவனங்களைச் சார்ந்த ‘டெலிவரி பார்ட்னர்கள்'  என்றழைக்கப்படும் உணவு விநியோகிப்பவர்களின் நிலை குறித்த ஒரு சிறிய ஆய்வுதான் இது. இவர்களில் இளைஞர்கள் மட்டுமன்றி, நடுத்தர வயதுடையர்களும், பெண்களும் கூட இருக்கின்றனர். Read more: Meet the…

Read more

Translated by Sandhya Raju இம்மாத துவக்கத்திலிருந்து, இயல்புக்கு அதிகமாகவே தொடர்ந்து ஐந்து நாட்களாக ஆரம்ப வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்ப நிலையாக 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் சென்னையில் பதிவாகியுள்ளது. கடுமையான வெப்பம் சென்னைக்கு ஒன்றும் புதிதல்ல. மக்கள் இதற்கு பழகி இருந்தாலும், மிக கடுமையான அல்லது நீடித்த வெப்ப நிலையை எதிர்கொள்ள ஆயுத்தமாக வேண்டியுள்ளது. பருவ நிலை மாற்றத்தை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை சமாளிக்க தற்செயல் திட்டங்களை உருவாக்க இணை முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காக, வெப்ப நடவடிக்கை திட்டங்களை இந்தியாவிலுள்ள பல நகரங்கள் உருவாக்கி, வெப்ப அலை நிலைகளையும், அதிக வெப்பமான கோடை வெப்பநிலையையும் நிர்வகிக்க நெறிமுறைகளையும் வகுத்துள்ளன. Read more: Why some parts of Chennai felt hotter than others this summer வெப்ப நடவடிக்கை திட்டம் என்பது ஆரம்பகால…

Read more