நாம் பெருந்தொற்றோடு வாழப்பழகி ஆண்டுகள் இரண்டு ஓடி விட்டன. நம்மில் பலரும் பல இழப்புகளைச் சந்தித்திருக்கிறோம். எனினும், மீண்டெழுந்து இன்னும் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். மானுடம் இத்தகைய பெருந்தொற்றுகளையும் பேரிடர்களையும் தொன்றுதொட்டே சந்தித்து வந்திருக்கிறது. அந்த அனுபவங்கள் தந்த ஆற்றலைக் கொண்டு அடுத்த நிலைக்குத் தன்னைக் கொண்டு சென்றிருக்கிறது. பெருந்தொற்றின் பாதிப்புகள் குறித்த பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த அந்த பரபரப்பான நேரத்தில்தான் நம்மையும் தொற்றியது, கொரோனா. சற்றே அசட்டையாக இருந்ததின் விளைவே அது. அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும், எச்சரிக்கையானோம். ஆனால், அடுத்த ஓரிரு நாளில் தொற்று தன்னிருப்பைத் தெளிவாக உணர்த்த ஆரம்பித்ததும், பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு அதன் முடிவு வருவதற்கு முன்னரே, மருத்துவரிடம் கலந்தாலோசித்து வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு நம்மை உட்படுத்திக்கொண்டோம். அந்த நேரடி அனுபவத்தையும் அதைக் கடக்க உதவிய நல் உள்ளங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். இதன் மூலம் நாம் கற்றுக்கொண்டவற்றையும்…
Read moreகொரோனா தொற்றின் 2வது அலை ஒரு வித தீவிரத் தன்மையுடன் பரவி அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மீண்டும் ஒருமுறை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றின் தீவிரம் சற்றே குறைந்து, ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, ஒரு புதிய இயல்புக்குத் திரும்பிய சிறிது காலத்தில் அசுர வேகத்தில் பரவி, அதிகளவில் உயிர்பலியையும் ஏற்படுத்திவருகிறது கொரோனா என்னும் இக்கொடிய தொற்று. இந்த சவாலான காலகட்டத்தின் போது சேவைக்களத்தில் முன் நிற்பவர்களில் இந்தக் கட்டுரைக்குரியவர்களும் அடங்குவர். நாம் ஆர்டர் செய்யும் உணவினை நம் இருப்பிடத்திற்கே குறித்த நேரத்திற்குள் கொண்டு வந்து தரும் இவர்கள் நகரவாசிகளின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறார்கள். ஸோமாடோ (Zomato) மற்றும் ஸ்விக்கி (Swiggy) போன்ற நிறுவனங்களைச் சார்ந்த ‘டெலிவரி பார்ட்னர்கள்' என்றழைக்கப்படும் உணவு விநியோகிப்பவர்களின் நிலை குறித்த ஒரு சிறிய ஆய்வுதான் இது. இவர்களில் இளைஞர்கள் மட்டுமன்றி, நடுத்தர வயதுடையர்களும், பெண்களும் கூட இருக்கின்றனர். Read more: Meet the…
Read moreதமிழ்நாட்டில் தற்போதைய தேர்தல் நிலவரத்தில் வாரி வழங்கப்பட்டு பேசுபொருளாகி இருக்கும் வாக்குறுதிகளில் பெரும் பரபரப்பை உருவாக்கிக் கொண்டிருப்பது இல்லத்தரசிகளின் பணியை அங்கீகரித்து அவர்களுக்கு ஊதியம் வழங்குதல் என்ற வாக்குறுதி தான். கருத்தியல் ரீதியாக இதை பார்த்தோமானால் இந்த விஷயம் இன்று பேசுபொருளானதே மனித மனங்கள் அடைந்துவரும் முதிர்ச்சியின் பயணத்தில் ஒரு முன்னேற்றம் எனலாம். ஏனெனில் இதற்கு முன்பு இல்லத்தரசிகள் அதிகாலை முதல் பின்னிரவுவரை அனைவரின் நலனுக்காகவும் ஓயாத இயந்திரமாக இயங்கி என்னதான் தியாகங்களை செய்தாலும், துரதிஷ்டவசமாக அவை கணக்கில் எடுத்துக் கொள்ளாதும், அதன் முக்கியத்துவம் மதித்து உணராதததுமான ஒரு நிலையே நிலவி வந்தது. பதிலாக அது அவர்களின் படைப்பின் விதி என்ற ஒரு மனோபாவமும் கூட பலரது மனங்களில் குடிகொண்டிருந்தது எனலாம். ஒவ்வொரு இல்லத்தையும் நிலைநிறுத்தும் இவர்களது வேலையை அங்கீகரிப்பதற்காக அவ்வப்போது பெண்ணிய அமைப்புகளிலிருந்தும் சமூக அக்கறை கொண்ட அமைப்புகளிலிருந்தும் குரல்கள் எதிரொலித்துக் கொண்டு வந்த போதும் சமீப காலங்களில்…
Read moreமாநகரின் ஒரு பரபரப்பான சாலையில் நீங்கள் பயணித்துக் கொண்டோ அல்லது பேருந்திற்காக காத்திருக்கும் போதோ மின்னல் வேகத்தில் அச்சுறுத்தும் அலறல் சத்தத்துடன் உங்களை பயமுறுத்திக் கடந்து செல்லும் வித்தியாசமான தோற்றம் கொண்ட இரு சக்கர வாகனங்களைப் பார்த்ததும் உங்களுக்குள் என்ன உணர்வு உண்டாகிறது? எதற்கு இத்தனை அவசரம் என்கிற எரிச்சலும் அதே சமயம் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதே என்கிற பதைபதைப்பும் ஒரு சேர தோன்றி ஒரு உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றால் அதுதான் அந்த நிகழ்வை காணும் எல்லோருக்குமானதாக இருக்கிறது. இந்த அசுரவேக ஓட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் யார் ? எந்த நோக்கத்திற்காக இவ்வாறு ஓட்டுகிறார்கள் ? இதனால் இவர்களுக்கோ எதிர்ப்படுபவருக்கோ எதுவும் ஆபத்து ஏற்படுகிறதா ? இது ஏதாவது ஒருங்கிணைப்பிற்கு கீழ் நடக்கும் பந்தயமா? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடக் கிளம்பினால் அங்கு பல பூதாகரமான உண்மைகள் புலனாகி நம்மை பயம் அப்பிக் கொள்கிறது. பதைபதைக்க வைக்கும் பைக் மற்றும்…
Read moreவெள்ளிக்கிழமை என்றவுடன் கோயில், பூஜை என உங்கள் மனதிற்குத் தோன்றினால் நீங்கள் ஒரு பக்தர், வாரத்தின் இறுதி வேலை நாள் என்று தோன்றினால் நீங்கள் ஒரு வேளை ஒரு ஐ.டி. நிறுவன ஊழியராக இருக்கலாம். ஆனால், புதுப்பட ரிலீஸ் பற்றிய சிந்தனையில் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு சினிமா ரசிகர்தான். ஒரு தீவிர சினிமா ரசிகனுக்கு வெள்ளிக்கிழமை என்பது புதுப்படங்கள் ரிலீசாகும் நாள் என்றுதான் தெரியும், அவ்வாறு வெளியாகும் புதுப்படங்களைத் தன் நண்பர்களுடன் தியேட்டருக்குச் சென்று ஆரவாரத்துடன் கண்டுகளிப்பதில் அலாதி இன்பம். அதுவும் தன்னுடைய ஆதர்ச நாயகன் நடித்த படமென்றால், கேட்கவே வேண்டாம். தோரணம், பட்டாசு, கட்அவுட்டுகள் பாலாபிஷேகம் என களைகட்டும். பெரிய கதாநாயகர்களின் படங்கள் பெரும்பாலும் முக்கியமான பண்டிகைகளையொட்டியே வெளியிடப்படும் என்பதும் அது பண்டிகைக்கால உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் அம்சமாகவும் இருந்து வருகிறது. இத்தகைய பண்டிகை நாள்களில், குடும்பங்களாகவும், நண்பர்கள் கூட்டமாகவும் தியேட்டர்களை நோக்கி படையெடுப்பதும், அந்நிகழ்வு பண்டிகைக்…
Read moreஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் நமது கவனத்தை அவ்வளவாக கவராமல் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது கொரோனா தொற்று காரணமாக அவை மூடப்பட்டிருக்கும் வேளையில் தான் அவற்றின் இருப்பும் சேவையும் எவ்வளவு மகத்தானது என்பதை நம்மால் உணர முடிகிறது. இம்மையங்கள் அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் குழந்தைகளின் ஆரம்பக்கல்விக்கான ஒரு அஸ்திவாரத்தை இடுவது மட்டுமின்றி அவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உணவளிப்பதோடு மற்றும் அடிப்படை மருத்துவ தேவைகளையும் அளிக்கும் மையங்களாக செயல்பட்டு வந்துள்ளன.‘ அத்துடன் ஒரு குழந்தைகள் காப்பகமாகவும் அப்பகுதி வாழ் மக்களுக்கு அளப்பரிய சேவை செய்து வந்துள்ளன என்பது கூடுதல் அம்சமாகும். இப்பகுதியில் வாழும் குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்திற்கான முகாம்களும் இந்த மையங்களில் நடைபெறும். இவ்வாறாக, அதன் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களுக்கு அவர்தம் வாழ்க்கையின் ஒரு ஒன்றிணைந்த அங்கமாகவே மாறிவிட்ட அங்கன்வாடிகள் அடைக்கப்பட்டிருந்த காலகட்டம் எத்தகைய ஒரு விளைவினை ஏற்படுத்தியது என்பது குறித்து…
Read moreகொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் வரிசையில் முன்னணியில் இருப்பவர்கள் பூ வியாபாரத்தோடு சம்மந்தப்பட்டவர்கள் தான் என்பதை நாம் அறிய முடிந்தது. ஏனெனில், காய்கறி போன்றவைகள் கூட அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியா பயன்பாட்டுப் பொருட்களானதால் குடியிருப்புகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யவாவது முடிந்தது. ஆனால், பூக்களின் பயன்பாடு இல்லாது போனதால் அதில் ஈடுபட்ட பல நிலைகளில் உள்ளவர்களுக்கும் முற்றிலும் வருவாய் நின்று போனது. இந்த அளவு ஆனதற்கு காரணம் மலரையும் மாலைகளையும் பயன்படுத்தும் ஆலயங்களும் விழாமண்டபங்களும் மூடப்பட்டது மட்டுமின்றி மக்கள் வெளியில் செல்லாத்தால் வீடுகளில் கூட பூ வாங்க தேவையின்றி போனதும் தான். பூக்களின் தேவையை அதிகமாகக் கொண்டிருந்த ஆலயங்கள் ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளதாலும், விழா மண்டபங்கள் ஒரு சில விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையாலும் கூடவே மக்கள் நடமாட்டமும் இயல்பாகி வருவதாலும் இவர்களின் வாழ்வு இயல்புக்கு திரும்புமா என காணலாம். சிறிது…
Read moreஇசை என்பது நம் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சந்தோஷமோ, துக்கமோ அதைப் பரிமாறிக்கொள்ளவும், வெளிப்படுத்தவும் இசை ஒரு முக்கிய பங்கு வகித்து வந்திருக்கிறது. சென்னையிலும் எந்தவொரு விசேட நிகழ்வானாலும் அதில் ஒரு அத்தியாவசிய அம்சமாக மாறிப்போனவை மெல்லிசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள். இதில் ’ஏ’ ‘பி’ ‘சி’ என்று வகைப்படுத்தப்பட்டு ‘ஏ’ பிரிவில் 20 குழுக்களும் ‘பி’ வகையில் 60 ம் ‘சி’ வகையில் சுமார் 500க்கு மேலும் என இசைக் கருவிகளின் பயன்பாடு மற்றும் இசைக் கலைஞர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு அதனடிப்படையில் ரூபாய் பத்தாயிரம் முதல் பல லட்சம் வரை அவரவர் தேவைக்கேற்ப இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொள்ளும் நிலை இருந்தது ஆனால், தற்போதைய கட்டுப்பாட்டு சூழலில் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டுமென்ற விதியினால், திருவிழாக்கள் மற்றும் வேறு பல சுப நிகழ்வுகளையும் எளிமையாக நடத்த…
Read moreஉலக வரலாற்றிலேயே கொரோனாவுக்கு முன் (கொ.மு) கொரானாவுக்குப் பின் (கொ.பி) என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமைகளைப் புரட்டிப் போட்ட இந்த வைரஸ் தாக்கம், சென்னையிலும் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய நிலைமாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதன் விளைவாக அதன் அடையாளமான ’வந்தோரை வாழவைக்கும் சென்னை’ என்பதை அது இழந்து கொண்டிருக்கிறதா என்ற ஒரு கேள்வி இன்று நம் முன்னே நிற்கிறது. ’புதிய இயல்பு நிலை’ கொஞ்சம் கொஞ்சமாக உருபெறத் துவங்குகையில் சென்னை இனி முன்பு போல் இருக்கப் போவதில்லை என்ற சமிக்ஞை கிடைக்கிறது. ஆம், அதன் மக்கள் தொகை, பரபரப்பு, ஏதோ ஒன்று செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று இங்கு வந்து சேரும் மக்களின் வரத்து என எல்லாமே மாறிவிட்டிருக்கப் போகிறது. சென்னை என்றாலே அனைத்து வித மக்களையும் பாரபட்சமின்றி அரவணைக்கும் அதன் தன்மைக்குப் பெயர் போனது. அதனால் அதன் ஜனத்திரள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பிழைப்புக்காகவும் பல்வேறு துறைகளிலும் ஒரு உச்சத்திற்கு…
Read moreசென்னையைப் பொருத்த வரை சாதாரண நாட்களில் ஆன்லைன் பயன்பாடு பெரிய அளவில் இருந்திருந்தாலும் இன்றைய அடைப்புக் காலத்தில் கல்வியோ, கலைகளோ வேலையோ, கலந்துரையாடலோ ஏன் குடும்ப, சமூக, வழிபாட்டு வைபவங்கள் கூட ஆன்லைனில் தான் என்ற நிலையில், அது மனமலர்ச்சிக்கு, மகிழ்ச்சிக்கு ஏதேனும் பங்காற்றுகிறதா என்று பார்த்தால் ’ஆம்’ எனும் பதில் நமக்கு ஆறுதலாகிறது. சென்னையில் குறிப்பாக நாளுக்கு நாள் அதிதீவிரமடைந்து அச்சமூட்டி வரும் தொற்று எண்ணிக்கையும் மட்டுமின்றி மரண எண்ணிக்கையும் ஒருபுறம் பீதியைக் கிளறிக் கொண்டிருக்க வேறுபல அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. அது இருப்பிடமும், உணவும், கல்வியும் கேள்விக்குரியதாகி வருவதாலும் தனித்து முடங்கிக் கிடப்பதாலுமென தொற்றைப் போலவே தொடர்ந்து அபாயகரமாக பரவி வருகிறது. இப்படியொரு கற்பனை செய்து பார்க்க முடியாத மனவிரக்தியும் அதன் விளைவும் குறித்து ஏற்கெனவே நமக்கு எச்சரிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டத்துக்குள் நாம் மெல்ல மெல்ல நுழைகிறோமோ என்ற கருத்துகளும் தற்போது பதிவாகத் துவங்கியுள்ளது. எனவே, இவைகளைக்…
Read more