Articles by Vadivu Mahendran

Vadivu Mahendran is a resident of Mogappair, Chennai. She has been largely involved in working with children and adolescents, and also translates program materials for their study. Occasionally, she enjoys writing Tamil poetry about human qualities and preservation of nature.

இனி, இந்த பரபரப்பான சென்னை வாழ்விலும் குடும்ப உறுப்பினர்களுடன் பரஸ்பரம் முகம் பார்த்து பேச நேரம் ஒதுக்கப் போகிறார்கள். இனி,  படோபட வெளியுணவை இயன்றவரைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவையே குடும்பங்களில் சமைத்து உண்ணப் போகிறார்கள்.  இனி, குடும்பம் மற்றும் சமூக விழாக்கள் அளவுக்கதிக ஆடம்பரமின்றி பொருள்வளம் வீணாக்கப்படாமல் நடைபெறப்போகிறது. இனி, தனிநபர் ஒவ்வொருவரும் ஓர் ஒழுங்கு மற்றும் புறசுத்தத்தை தன்னளவிலும் சமூகத்தொடர்பிலும் கடைபிடிப்பார். இனி, கூட்டம் கூடும் இடங்களில் மக்கள் முண்டியடிக்காமல் தன் முறைக்காக பொறுமையாக வரிசையில் காத்திருக்கப் போகிறார்கள். இனி, எல்லோரும் உள்ளுணர்வுடன் வாய் மூடி தான் இருமவோ தும்மவோ போகிறார்கள். இனி, சென்னை வீதிகளில், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் யாரும் எச்சில், சளி உமிழ மாட்டார்கள் இனி, ரூபாய் நோட்டுகளும் பேருந்து பயணச்சீட்டுகளும் எச்சில் தொட்டு தரப்படாது இனி, பொதுக்கழிவறைகளை அசூசையோ அச்சமோ இல்லாது நாம் பயன்படுத்தும் அளவிற்கு சுத்தமாக இருக்கப் போகிறது இனி, ஒவ்வொருவரும் தனது…

Read more

ஆம். இனி கொரோனாத் தடுப்பு என்பது ஒவ்வொரு தனிநபர் கைக்கும் வருகிறது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டியுள்ளது. அதுவும் நோய்த் தொற்று குறிப்பாக சென்னையில் அச்சமூட்டும் வகையில் உச்சநிலையைத் தொட்டு வரும் இந்த சூழலில் இக்கூற்று நம் மூளையை உசுப்புகிறது. மே 25 இல் தொற்று எண்ணிக்கை 11,131 (இது தமிழகத்தின் எண்ணிக்கையான 17,082 இல் பாதிக்கும் மேல்). சென்னையில் மட்டும் தினமும் இப்போது 400, 500 என உயர்ந்து வருவதை இங்கு நினைவில் கொள்ளலாம். ஊரடங்கு 4.0 இல் சென்னை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலத்துக்கான சில தளர்வுகளுடன் இயங்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், நமது உயிரின் பாதுகாப்பு இதோ இப்போது நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன முடிவுகளிலும் தான் என்ற நிதர்சனம் நமக்கு மேலும் ஒரு புதிய விழிப்பைத் தருகிறது. வைரஸின் பரவல் வேகமெடுக்கும் ஒரு அபாய தருணத்தில் வருகின்ற இந்தத் தளர்வின்…

Read more

சென்னையில் கொரோனா தோற்றால் மாய்ந்த மருத்துவர்களின் உடல்களை புதைக்க மற்றும் எரிக்க விடாது செய்த மக்களின் மூர்க்கத்தனம் தொடர்ந்து இருமுறை நடந்தேறியதானது சமீபத்தில் எல்லோரின் மனதிலும் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியதும், அது பரபரப்பான செய்தியாகி அரசு நேரடியாக தலையிட்டு அதற்காக அவசர சட்டமியற்றும் அளவிற்கு சென்றதும் அனைவரும் அறிந்ததே. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வரும் தற்போதைய சூழ்நிலையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் சேவைச் செயல்பாட்டின் முன்னணியிலிருந்து தம் உயிரைப் பணயம் வைத்து தம் சக மனித உயிர்களைக் காக்கும் அரும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  குடிமக்கள் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிகளின் ஊரடங்கு விதிகளுக்குட்பட்டு வீட்டுக்குள்ளேயே இருக்க,  உயிர்காக்கும் உன்னத களத்தில் உணவு, உறக்கமின்றி, காலநேரம் குறித்த கவலையின்றி, தங்கள் குடும்பத்தினர் குறிப்பாக குழந்தைகளிடம் பேசக்கூட வாய்ப்பின்றி,  கடமையே கண்ணாகக் களமிறங்கி இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்த மகத்தானப் பணியில் ஈடுபட்டு  உலக அளவில் 200 க்கும்…

Read more

குடும்பத்தார்கள் வீட்டில் இருக்க வேண்டும், அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவதுதான் பெண்களின் பொதுவான மனநிலையென உலகத்தால் பார்க்கப்படுகிறது. அவ்வாறிருக்க, தற்போது கொரோனா  தடுப்பு நடவடிக்கையான இந்த ஊரடங்கினால் முழுநாளும், முழுக்குடும்பமும் ஒரு வீட்டுக்குள் முடங்கிய நிலையில், தேநீர், சிற்றுண்டி, உணவு, மருந்து, இத்யாதி என ஒவ்வொருவருக்கும் வேளா வேளைக்கு தேவைப்படுகின்ற சூழ்நிலையிலும், அவர்களின் மனநிலை அப்படியே தானிருக்குமா அல்லது சலிப்பு மேலிட்டிருக்குமா? அல்லது இந்த யதார்த்தமானது இது சார்பான வேறொரு கண்ணோட்டத்தைத் தந்திருக்குமா? கற்பனையே செய்து பார்த்திருக்க முடியாத ஒரு நிலைமாற்றத்திற்குள் உட்பட்டிருப்பது நாம் மட்டுமல்ல முழு உலகும் தான் என அறிந்து மனங்கள் அதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாலும், உண்மைகளானது ஒவ்வொருவரின் முன்னால் நின்று  முகத்தில் அறைவதால் முதிர்ச்சியும் முரண்பாடும் சேர்ந்தே பிரசவமாகின்றதென பெண்கள் பலரது அனுபவங்களைக் கேட்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.  இந்த வழக்கத்துக்கு மாறான சூழல் வாழ்க்கையில் இதுவரை படிக்காமல் விட்ட பக்கங்களை நமக்கு…

Read more

ஒருபுறம் உயிர்களை பலி கொள்ள வந்த அரக்கன் எனக்கூறி, ஒரு போர்க்கால அறிவிப்புப் பிரகடனத்தப்பட்டிருக்கும் அதேவேளை, அது உலகையே புதுப்பிக்க வந்த ஒன்றெனவும் கொரோனா குறித்து இருவிதமான குரல்கள் ஒலிக்கின்றது. எவ்வாறாயினும் அசுரவேகத்தில் பரவி மரணங்களை நிகழ்த்தி வரும் இந்த பேரபாயத்தை நாம் ஒருசேர நின்று சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதை யாருமிங்கு மறுக்கவே முடியாது. இந்த சூழலானது, உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் தூய்மையாக வைக்கும் அவசியத்தையும், தனது நலமென்பது கூட அடுத்தவர் நலனை சார்ந்ததே என்பதையும் உணர்த்துவதாக பலரும் கூறுகிறார்கள். ’உலகை ஒரே உடலுக்கு ஒப்பிட்டால் அதன் எந்த பகுதி பாதித்தாலும் முழு உடலுக்குமே பாதிப்பு’ என்னும் உயர் கருத்து தற்போது உயிர்பெறுவதையும் இங்கு காணமுடிகிறது. கொரோனாவைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள், முன்னெச்சரிக்கைகள், அறிகுறிகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் குறித்த உண்மையான தகவல்களுடன் பல கட்டுக்கதைகளும் உலகில் உலா வருவதை நாம் ஒதுக்க இயலாது. இந்நிலையில் தனிநபரே…

Read more

சமீப காலமாக சென்னையில், “மாடித்தோட்டம்“என்பது வேகமாக வளர்ந்து வரும் ஒரு கலையாக இருக்கிறது.  ஆகவே, அது குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் தூண்டப்படுவதும் இயல்பே. ஏனெனில், அடுக்குமாடிக் கட்டிடங்களின் செறிவும், தண்ணீர்ப் பற்றாக்குறையும், வீசும் அனலும் இங்கு அவ்வாறிருப்பதாகும். அதற்கிடையிலும் குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் குறைந்த இடத்தில் எப்படி ஒரு பசுமை முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்பது நம் மூளையைக் குடையும் ஒன்று தானே. உள்ளவாறே இந்த விஷயத்துக்குள் நாம் நுழைந்து அறிய முற்படும் போது ஒரு புதிய உலகிற்குள் புகுந்தது போல் ஓர் ஈரவுணர்வும் புத்துணர்ச்சியும் நம்மையும் தொற்றிக் கொண்டு விடமாட்டேனென்கிறது. இதைப் பற்றி அறிந்து கொள்வோர் அனைவரையும் நாமும் இப்படி ஒரு தோட்டம் அமைக்க வேண்டுமென தூண்டும் வண்ணம் அந்த அனுபவங்கள் நெகிழ்ச்சியாக உள்ளது. அதுபோன்றே அதற்கான கட்டமைப்புகளும் பெரிய அளவில் விரிவடைந்து பிரமிப்பையூட்டுகிறது. மாடித்தோட்டத்திற்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும், அதற்கான பயிற்சியும் மட்டுமல்லாது அரசின் மானியமும்…

Read more

கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பால் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.  அது மாணவர்களை மட்டுமல்லாது , அவர்களது பெற்றோர் மற்றும் சமூகத்தின் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அந்த அறிவிப்பானது, அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்பதுதான். பலமுனைகளிலிருந்தும் அதன் சாதக பாதகங்களை வலுவாக முன்வைத்ததை அரசும் நன்கு சீர்தூக்கி பார்த்து தற்போது அதனை ரத்து செய்துள்ளது. என்றாலும் அந்த அறிவிப்பின் பிரதிபலிப்பாக சமூகத்தில் நிகழ்ந்தவைகள் கல்வி சம்மந்தமாக சமூகம் என்ன பார்வையைக் கொண்டுள்ளது என்பது தீவிரமாக விவாதிக்கப்படக் கூடியதாகியுள்ளது. ஒரு முதிர்ச்சியான சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வியளிக்கும் முறை உள்ளதா என்பது வினாவாகித் தொடர்கிறது. அறிவிப்பின் தாக்கங்கள் சமச்சீர் பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக செய்த சில மாற்றங்களால் எழுந்த பரபரப்பே  முற்றிலும் அடங்காத நிலையில் வந்த அந்த அறிவிப்பானது, மறுபடியும் அதைப் பற்றவைத்தது. மாற்றங்களின் சவால்களைச்…

Read more