Translated by Aruna Natarajan ராமலிங்கம்* என்ற முதியவர், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையிலிருந்து சென்னைக்கு தனியாகப் பயணம் செய்து எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்தார். மெட்ரோ ரெயிலில் செல்வதற்காக ஃபுட் ஓவர் பிரிட்ஜில் நடந்து சென்ற அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அவருக்கு உதவ 108 ஆம்புலன்ஸ் சேவையை டயல் செய்ய முயன்றபோது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலேயே மருத்துவ அவசர சிகிச்சைக்காக பிரத்யேகமாக ஸ்டேஷன் வளாகத்தில் ஒரு அவசர மருத்துவ மையம் உள்ளதை குறித்து பலருக்குத் தெரியாது. கூட்டத்தை கவனித்த ரயில்வே ஊழியர்கள், மையத்தில் இருந்த மருத்துவ ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் செவிலியர் உடனடியாக அவசர உபகரணங்கள் மற்றும் பிற முதலுதவி பொருட்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சில நிமிட கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் (CPR)க்குப் பிறகு, ராமலிங்கம் நிலைபெற்றார். பின்னர் அவர் அவசர சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு…
Read moreWe need 2 min of your time!
Tell us what matters to you—and help make our stories, data, workshops, and civic resources more useful for you and your city—in this short survey.