கொரட்டூர் ஏரி 20 ஆண்டுகளுக்கு முன்பாக சமையலுக்கு குடிநீருக்கு பயன்படுத்தி வந்துள்ளனர் ஆனால் தொழிற்சாலை மற்றும் பால்பண்ணை நச்சு கழிவுகளால் ஏரி மாசடைந்தது இதனால் நீரை பயன்படுத்த முடியவில்லை. நிலத்தடி நீர் சுற்றி பாதித்துள்ளது கழிவு நீரால் ஆகாயத்தாமரை அதிகம் வளர்ந்துள்ளதால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது ஏரியைச் சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் வாழ்வாதாரம் ஏரியை நம்பி தான் உள்ளது ஏரி மாசடைந்து மண் மற்றும் தண்ணீர் பாதிப்பால் மீன் இனப்பெருக்கம் குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பால் ஏற்படும் மாசு ஏரியைச் சுற்றிலும் அரசியல் போர்வையில் சமூக விரோதிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. ஓராண்டுக்கு முன்பாக கோர்ட்டு ஏரியில் ஆக்கிரமித்துள்ள 12 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது 21 நாளைக்குள் காலி செய்ய வேண்டும் என்று ஆனால் இதுவரை எந்த…
Read more