Translated by Sandhya Raju
இயந்திர வேகத்தில் சுழலும் கோட்டுர்புரத்தில், அங்கிருக்கும் மியாவாகி காடு ஒரு புதுவித அனுபவத்தையும் புத்துணர்ச்சியும் அளிப்பதாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வருடத்தை எட்டியுள்ள இந்த நகர்புற காடு, 2019 ஆம் ஆண்டு சுமார் 1600 கழிவுகளை அப்புறப்படுத்தப்படுத்தி உருவாக்கப்பட்டது. 2000-த்திற்கும் மேற்பட்ட பல்வேறு மர வகைகள் இங்கு நடப்பட்டன. தற்போது செம்பருத்தி, பப்பாளி, முருங்கை என இந்த 2211.87 சதுர மீட்டர்** பரப்பளவு பசுமை போர்வையாக காட்சி அளிக்கிறது.
மியாவாகி வகை காடுகள் நகரத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கோட்டுர்புரத்தில் முதலில் உருவாக்கப்பட்டு பின், சோளிங்கநல்லூர் , முகலிவாக்கம், ஒமந்தூர், அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கிரீன்வேஸ், மாதவரம் என 20 இடங்களில் சென்னை மாநகராட்சி நகர்புற காடுகளை உருவாக்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள் பொது மக்கள் மற்றும் துவக்கம், இன்னர் வீல் ஆஃப் மெட்ராஸ் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளனர்.
சமீபத்தில், சென்னை தலைமை செயலகம் எதிரே சுமார் 3000 சதுர அடி பரப்பளவில், சென்னை மாநகராட்சி மியாவாகி காடு ஒன்றை துவக்கியுள்ளது.இதில் 30 நாட்டு வகை மரங்கள் கொண்ட 837 மரங்கள் உள்ளன.
Read more: Panel proposes practical and scientific ways to green Chennai
மியாவாகி காடு என்றால் என்ன?
ஜப்பான் நாட்டை சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி அவர்களால் இவ்வகை காடுகள் உருவாக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது. இதில் நாட்டு மரங்கள் நெருக்கமாக நடப்பட்டு காடுகள் போல் உருவாக்கப்படுகிறது. இந்த முறையில், பாரம்பரிய அணுகுமுறையை விட 10 மடங்கு வேகமாக மரங்கள் வளர்வதுடன் 30 மடங்கு அடர்த்தியான பசுமை போர்வையை கொடுக்கிறது.
சென்னையில் காடுகள் அவசியமா?
சென்னையில் உள்ள மொத்த பசுமை 19% ஆகும். நகர்ப்புறத்தில் இருக்க வேண்டிய 33% என்ற குறியீடை விட இது மிகவும் குறைவு.
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நகரத்தில் மரம் நட தேவையான இடம் இல்லை. இந்த சூழலில், நகர்ப்புற எல்லையில் காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மியாவாகி காடுகளை வளர்க்கலாம்.
பசுமை போர்வையை அதிகரிப்பதோடு, உயிரினப் பன்மயத்தை வலுவாக்க நகர்புற காடுகள் உதவுகின்றன.
அசல் காடுகளுக்கு மாற்றாக மியாவாகி காடுகள் அமையாது என்றாலும், நகரமயமாக்கலுக்கு உட்படும் சென்னை போன்ற நகரத்திற்கு இது பெரும்பாலும் நடைமுறை தீர்வாக அமையும். புதுதில்லி போன்று சென்னையில் மாசு இல்லை என்றாலும், இவ்வகை காடுகளால் வாகனங்கள் மற்றும் நகர்ப்புற வெப்ப தீவு விளைவாக ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்த முடியும்.
Read more: Why some parts of Chennai felt hotter than others this summer
மியாவாகி காடுகளுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பரப்பளவு என்ன? பராமரிக்க எவ்வளவு செலவாகும்?
குறைந்தபட்சம் 1000 சதுரடி பரப்பளவு தேவை, இதில் 250 மரக்கன்றுகள் நடலாம். இருப்பினும், 100 சதுரடியில் கூட குறைவான அடர்த்தி கொண்ட காடுகளையும் உருவாக்க முடியும். ஆகவே, ஒருவரின் வீட்டு பின்புறத்தில் கூட மியாவாகி காடுகளை உருவாக்க இயலும்.
ஒரு மரம் நடவும் இரண்டு வருடம் பராமரிக்கவும் சுமார் 300 ரூபாய் செலவாகும்.
மர வகை, மண்ணின் தன்மை பொறுத்து இடத்தை பொறுத்தும் இது மாறும். “உதாரணமாக, திருவான்மியூர் பகுதியில், மண் வகை வேறுபடும் என்பதால் இங்கு ஒரு மரத்திற்கு 100 ரூபாய் செலவாகும்,” என்கிறார் சென்னை டிரெக்கிங் கிளப்பின் ஐந்திணை என்ற பசுமை விங்கை சேர்ந்த பி மனோஜ் குமார்.
மரக்கன்றுகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எப்பொழுதும், நாட்டு மரங்கள்.
சுற்றுச்சூழல், கல்வி மற்றும் இது தொடர்பாக செயல்படும் தொண்டு நிறுவனமான துவக்கம், சில வருடங்களாவே மியாவாகி காடுகளை உருவாக்கி வருகிறது. குறிப்பிட்ட சுற்றுப்புறங்களுக்கான சொந்த தாவர வகைகளை அடையாளம் காணும் பொருட்டு, ஆராய்ச்சிகளை வழக்கமாக நடத்துகின்றன.
“நிலத்தை தேர்ந்தெடுத்த பின், 30 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வசிக்கும் பகுதிவாசிகளிடம் என்னென்ன மர வகைகள் இங்கு உள்ளன என கலந்துரையாடுகிறோம். அதன் படி, மரக்கன்றுகளை தேர்ந்தெடுக்கிறோம்,” என்கிறார் துவக்கம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ண குமார் சுரேஷ்.
Also read: Here’s what you must know before you plant another tree in Chennai
நிலம் எவ்வாறு தயார் படுத்தப்படுகிறது?
மியாவாகி காடுகளை உருவாக்க மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன – நில அளவீடு மற்றும் தயார்நிலை, நிலம் தயாரித்தல், மற்றும் நடுதல் மற்றும் தழைக்கூளம்.
நில தயார்நிலை
முதல் கட்டத்தில், நிலத்திலிருந்து மண் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. மண்ணின் pH மதிப்பு 6.3 முதல் 7.2 வரை இருக்க வேண்டும். இதன் பிறகு, தேவையான நில ஊட்டச்சத்து மற்றும் மரக்கன்றுகள் தேர்ந்தெடுக்கபடுகிறது. ஆவணப்படுத்துதல் முடிந்ததும், நிலப்பரப்பு குறிக்கப்பட்டு, இருக்கும் மண் தோண்டப்பட்டு சேமிக்கப்படுகிறது. மண்ணை குறைந்தபட்சம் 3 அடி ஆழத்திற்கு தோண்ட வேண்டும், இந்த மண் இரண்டாம் கட்டத்தில் செறிவூட்டலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
நிலம் தயாரித்தல்
மண் பரிசோதனைக்கு பின், தேவையான அளவு மண் செறிவூட்டப்படுகிறது. குழியில் இருக்கும் மண் அல்லது சிவப்பு மண்ணுடன் இது கலக்கப்படுகிறது, இது அந்த இடத்தில் கிடைக்கும் மணல் / மண்ணின் வகையை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக மண் செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள்:
- துளைப்பான் – நெல் உமி / கோதுமை உமி
- நீர் தக்கவைப்பான் – கோகோ கரி / மரத்தூசி / பாகாஸ்
- உரம் – மாட்டு சாணம், உரம் மற்றும் மண்புழு உரம்
- தழைக்கூளம் பொருள் – வைக்கோல்
இது முடிந்ததும், தோட்டம் வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு மரக்கன்றுக்கான இடங்கள் நடுவதற்கு சரி செய்யப்படுகின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எந்த மரமும் ஒன்றாக நடப்படுவதில்லை, ஏனெனில் மரங்கள் சூரியனுக்காகவும் தண்ணீருக்காகவும் போராடக்கூடும், மேலும் அவை அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கின்றன.
நடுதல் மற்றும் தழைக்கூளம்
புதர்கள் மற்றும் மரங்கள் இரண்டும் மியாவாகி காடுகளில் அமைக்கப்படுகின்றன. 1000 சதுரடி நிலத்தில் 250 முதல் 300 மரங்கள் வரை நட முடியும்,
தோட்டம் அடுக்கு வாரியாக அமைக்கப்படுகிறது:
- புதர் அடுக்கு (6 m உயரம் வரை): 8 to12 %
- துணை மர அடுக்கு (6 முதல் 15 m): 25 to 30%
- மர அடுக்கு(15 முதல் 30 m): 40 to 50%
- விதான அடுக்கு (30 m மேல்): 15 to 20 %
இது கூடவே தழைக்கூளம் அமைக்கப்பட வேண்டும், இதில் வைக்கோல் அல்லது புல் போன்ற கரிம பொருட்கள் கொண்டு மேல்புற மண் மூடப்படுகிறது. இது மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்க உதவுவதோடு, அதை பலப்படுத்தவும் உதவுகிறது. நேரடி சூரிய ஒளி மண்ணை வறட்சியாக்குவதோடு மரக் கன்றுகள் வளர தடையாக அமைகிறது. 5 – 7 அடுக்காக தழைகூளம் சமமாக போடப்பட வேண்டும்.
காடுகளை எப்படி பாதுகாப்பது?
- தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், நகர்புற காடுகளை பராமரிப்பது அவசியம்.
- அடிக்கடி அவற்றை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆவணப்படுத்த வேண்டும்.
- மரங்கள் நேராக வளருவதை உறுதி செய்ய, அவற்றிற்கு துணையாக குச்சிகளை நட வேண்டும்.
- தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மரத்தை சுற்றி நீர் சேராமல் இருக்க தகுந்த வடிகால்களை அமைக்க வேண்டும்.
- குப்பை போடுவது, மனித நடமாட்டம், ஆடு, மாடுகள் மேய்ச்சல் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.
- கனிம உரங்களை பயன்படுத்தக்கூடாது.
- மரங்களை கத்தரித்து வெட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.
மியாவாகி காடுகள் உருவாக்குவதில் யார் வேண்டுமானாலும் தன்னார்வலராக இணையலாமா?
ஆம். இதற்காக பல தொண்டு நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி கை கோர்த்துள்ளது. மியாவாகி காடுகளை உருவாக்கும் தொண்டு நிறுவனங்களின் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், தன்னார்வலராக இணைய பிராந்திய துணை ஆணையர் (ஆர்.டி.சி) அலுவலகத்தை அணுகலாம்:
- RDC North: 044 2520 0025 or rdcnorth@chennaicorporation.gov.in
- RDC Central: 044 2664 0224 or rdccentra@chennaicorporation.gov.in
- RDC South: 044 2442 5981 or rdcsouth@chennaicorporation.gov.in
Also read:
- How you can adopt a park or green space in the city
- Chennai needs a law to save its green lungs
- Why Kolkata’s post-cyclone reforestation spree has failed to cheer environmentalists
[Read the original article in English here.]