Translated by Sandhya Raju
சைக்கிள் ஓட்டும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மேலும் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. சைக்கிள் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த, பிரத்யேக சைக்கிள் ஓட்டும் பாதைகள் நகரின் சில பகுதிகளில் சோதனை முறையில் செய்யப்பட்டுள்ளன. இது எதிர்காலத்திற்கு உதவும் என்றாலும், சைக்கிள் ஓட்டுதலை பரவலாக ஊக்கப்படுத்த மேலும் பல நடவடிக்கைகள் தேவை.
ECR-இல் சைக்கிள் பாதை
மகிச்சியான தெருக்களுக்கான பரிந்துரை – தெருக்களில் தேவயற்ற நடவடிக்களுகு தடை – சைக்கிள் ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த கோரிக்கைகள் வெற்றிக்கரமாக பெசன்ட் நகரில் அமல்படுத்தப்பட்டது. ECR-இல் சைக்கிள் பாதை அமைக்க இது உந்துதலாக அமைந்ததா என தெரியவில்லை, ஆனால் காவல்துறையிடமிருந்து இதற்காக அழைப்பு வந்த்து.
இந்த சிந்தனையை முன்னெடுத்து, சென்னையில் சைக்கிள் ஓட்டுதலை ஆணையர் சங்கர் ஊக்கப்படுத்துகிறார். சைக்கிள் ரோந்து படை மூலம் மேலும் இதை ஊக்கப்படுத்த திட்டமிட்டுள்ளார். காவல்துறை மற்றும் பொதுமக்களை சைக்கிள் ஓட்ட மேலும் எவ்வாறு ஊக்கப்படுத்துவது என்ற உரையாடலில் ஈடுபட்டோம்.
சைக்கிள் பாதையை உருவாக்க முனைந்த போது, போக்குவரத்து தடுப்பை மேற்கொள்ள சிறந்த நேரம் எது என்று சைக்கிள் ஓட்டும் சமூகத்திடம் ஆலோசிக்கப்பட்டது. காலை 5 மணி மற்றும் 8 மணி உகந்தது என பரிந்துரைத்தோம்.
ஒரே இரவில், டிசம்பர் 25, 26 தேதிகளில் சைக்கிள் பாதை உபயோகத்திற்கு திறக்கப்பட்டது. சோதனை ஒட்ட முடிவில், ஒவ்வொரு வார இறுதியிலும் இதை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. ஞாயிறு ஊரடங்கால், சனிக்கிழமைகளில் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முனைப்புடன் உள்ளோம். அதிகாரிகளின் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.
தொலைநோக்கு பார்வை அவசியம்
அமைதியான போக்குவரத்து, சுற்றுப்புற வசிக்கும் இடங்களில் மெதுவாக செல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஒரு பகுதியில் தொடங்கி பின்னர் நகரின் அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும். சைக்கிள் செல்ல கார்கள் நிறுத்தப்படுவது சிறப்பான உணர்வை தருகிறது. சைக்கிள் ஓட்டுதலுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை மோட்டர் வாகன ஓட்டுனர்களிடம் இது நேர்மறையான எண்ணத்தை உருவாக்குகிறது. அண்ணா சாலை, பூந்தமல்லி போன்ற முக்கிய சாலைகளில் இது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை.
பிற நகரங்களில் “மகிழ்ச்சியான தெருக்கள்” உருவாக்கும் நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது. பல தரப்பட்ட மக்களை சைக்கிள் ஓட்டும் சமூகத்தில் இணைக்க வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், கணவன் மனைவிகள் இருவரும் என வாரத்தில் ஒரு நாள் இவர்களை சைக்கிள் ஓட்ட அழைப்பது நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும். சமுதாயத்தின் உள்ள அனவரின் பங்கை ஊக்குவிக்காமல், சாலை போக்குவரத்து தடையை அமல்படுத்துவது சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் பிற வாகன ஒட்டுனர்களிடையே பிளவையே ஏற்படுத்தும்.
பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிப்பதை நாங்கள் கண்டோம், ஆகையால் இது பெரிய சவால் இல்லை. சில நிகழ்வுகள் நேர்ந்தாலும், இது போன்ற மோதல்கள் பரவலாக இல்லை. சைக்கிள் ஓட்டுவர்களின் கை சமிக்ஞைகளையும், ஓட்டும் நிலையையும் பலர் புரிந்து கொள்வதை பார்க்கிறோம்.
Read more: Speeding vehicles, traffic biggest barriers: Chennai cyclists
சைக்கிள் ஓட்டுதல் குறித்த விழிப்புணர்வு அவசியம்
இந்த பிரச்சாரங்களை நிலையானதாக மாற்றுவதற்கு விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும். தலைக்கவசம் அணிதல் குறித்து சாலை பாதுகாப்பு பிராச்சாரம் போல், மோட்டாரில்லா வாகனத்திற்கும் தீவிர பிராச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பொது போக்குவரத்து மற்றும் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்க இதுவே சரியான தருணம்.
நடத்தை மாற்றம் மற்றும் சிந்தனை செயல்பாட்டில் மாற்றம் தேவை. முதல் ஊரடங்கின் போது, பலர் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றை மேற்கொள்ளவில்லை. அருகாமையில் மளிகை பொருட்களை வாங்க சைக்கிள் உபயோகிக்க தொடங்கினேன். பின்னர், நிறைய பேர் சைக்கிள் உபயோகிக்க தொடங்கியதை காண முடிந்தது. பொது மக்களுக்கு சைக்கிள் மற்றும் பொது போக்குவரத்து உபயோயகம் ஆகியவற்றை கவர்ச்சிகரமானதாக ஆக்க வேண்டும். முதல் தொடங்கி இறுதி கட்ட பயண தொடர்ச்சி இதில் மிக முக்கியம்.
ஸ்மார்ட் பைக் திட்டத்தை எடுத்துக் கொண்டால், நகரம் முழுவதும் ஆங்கேங்கே பைக்குகளை, உபயோகிப்பவர்களின் நலனை கருதாமல் வைத்திருப்பது போல் இருக்கும். இதற்கென பிரத்யேக பிராச்சாரங்கள் இல்லாததால், பெரும் வரவேற்பை பெறவில்லை. செயல்பாட்டு குறித்து கவனம் செலுத்தாமல் கட்டுக்கோப்பான உடல் என்று பிராச்சரம் செய்யப்பட்டது.
சைக்கிள் ஓட்டுதலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான சமீபத்திய முயற்சி “சேர் தி ரோடு, சென்னை” பிரச்சாரம் ஆகும். நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவதற்கு ஏற்ற சாலைகளை டாக் ரோட்ஸ் என்ற செயலி மூலம் பயனர்களுக்கு உதவும் ஒரு முயற்சி இதுவாகும். இது தவிர தங்களது யோசனைகளையும் இந்த செயலி மூலம் தெரிவிக்கலாம். ஒரு தேர்ந்தெடுத்த குழுவிடையே மட்டும் தார்போது இந்த செயலி பயன்பாடு டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இது அனைத்து மக்களின் பயன்பாட்டிற்க்கு வெளியிடப்படும், இது மட்டுமின்றி அருகிலுள்ள பஞ்சர் கடை, போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகள் ஆகியவற்றையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விளம்பரப்படுத்துதல்
எங்கெல்லாம் சைக்கிள் ஓட்டும் திட்டம் தோல்விடைந்துள்ளதோ, அங்கு போதிய விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை எனலாம். சண்டிகரில் சைக்கிள் பாதை உருவாக்கிய போது, அதாற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் சில வாரங்கள் இருக்கும் உற்சாகம் பின்னர் இருப்பதில்லை, சொல்லிக் கொள்ளும்படி வெற்றிக் கதைகளும் இல்லை. விளம்பரம் இல்லாதது பெரிய பின்னடைவு, ஒரு கார் அல்லது வணிக திட்டத்தை விளம்பரப்படுத்த அணுகுவது போல் இந்த திட்டங்களை அணுக வேண்டும்.
பாதுகாப்பு அம்சங்கள், வசதிகளை முன்னிறுத்தி கார்கள் விளம்பரப்படுத்துவதை போல் சைக்கிள் ஓட்டுதளின் நன்மைகாள் குறித்தும் அதற்கென வகுக்கப்பட்டுள்ள பிரத்யேக பாதையை உபயோகப்படுத்துவது குறித்தும் விளம்பரப்படுத்த வேண்டும். சைக்கிளுக்கென தனிப்பாதை இருப்பது இன்னும் பலருக்கு தெரியவில்லை.
ஸ்மார்ட் பைக்கோடு, ஸ்மார் ஃபோன், செயலி, டிஜிட்டல் வாலட் ஆகியவற்றை ஒப்பிடுகிறோம். இதே போல் எதற்காக சைக்கிள் ஓட்டுதலை விளம்பரப்படுத்த வேண்டும் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும்.
Read more: How friendly is Chennai towards women cyclists?
தடைகள்
சைக்கிள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் உள்ள தடைகளை முதலில் அகற்ற வேண்டும். சைக்கிள்களுக்கென தனி பார்க்கிங் ஏற்பாடு இல்லை. தெருக்களில் நிறுத்துவது பாதுகாப்பனது அல்ல. சைக்கிள்களுக்கு பாதுகப்பான பார்க்கிங் அவசியமில்லை என சிந்தனை உள்ளது. ஒரு காருக்கு தேவையான பார்க்கிங்கில் பத்து சைக்கிள்களை நிறுத்தலாம். பூட்டுகளைத் தாழ்ப்பதற்காக ஒரு இரும்பு கம்பம் (டாக்கிங் ஸ்டேஷன்) தான் தேவை.
இங்கிலாந்தில் இரண்டாவது ஊரடங்கின் போது, சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் விளைவாக அதிகமான மக்கள் சைக்கிள் ஓட்டத் தொடங்கினர். இது உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த உதவியது. சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிப்பதன் மூலம், மக்கள் அக்கம்பக்கத்தில் எளிதாகச் செல்ல முடியும். சைக்கிள் ஓட்டுதலால் சமூக மற்றும் பொருளாதார நன்மைகள் உள்ளன.
சமூகம் மற்றும் அரசியல் வட்டத்திலும் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்க வேண்டும். அவசியமான பத்து உரையாடல்களில் சைக்கிள் ஓட்டுதலும் இடம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் தெருவில் சிறிது இடம் தான் உள்ளது என்றாலும், அதில் முடிந்த வரை அதிக சைக்கிள்களை கொண்டு வர ஆர்வமாக உள்ளோம். கோவிட்-19 காரணமாக, இதில் பெரும்பாலான வண்டிகள் ஒருவர் செல்லக்கூடிய வண்டிகள்.
சைக்கிள் ஓட்டுதல் ஒரு அன்றாட நிகழ்வாக மாற்ற, அரசியல்வாதிகள், மாநகராட்சி மற்றும் மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். சைக்கிள் ஓட்டுதல் அதிகரித்தால் தான், அதற்கான கட்டமைப்பு தேவையை வலியுறுத்த முடியும்.
சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக பெங்களூருவில் மசோதா நிறைவேற்றியது போல், சென்னையில் விரைவில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்.
[Read the original article in English here.]
Also read
- K K Nagar a perfect example of what puts off cyclists in Chennai
- Here’s an ideal way to commute in the post-COVID world; will Chennai take the opportunity?