At a recent All India conference for senior police officials in the capital city, best performing police stations across the country were recognised and honoured. K4 Police station, Annanagar, Chennai bagged the 5th position in the country for its speedy disposal of cases, zero incidence of murder and the way visitors are handled. Citizen Matters spoke to officials at K4 to understand the distinct functioning of the police station. |
வண்டிகள் நேர்த்தியாக நிறுத்தி வைக்கப்பட்ட பார்கிங் ஏரியா, வரவேற்பாளர் அறை, பார்வையாளர்கள் காத்திருக்கும் பகுதி, குடிநீர் என ஒரு ஹோட்டல் போன்ற அமைப்பு கொண்டிருக்கிறது கே4 காவல் நிலையம். ஆனால் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இதுவல்ல காரணம்.
ஜனவரி ஏழாம் தேதி நடந்த அனைந்திந்திய காவல் துறை டைரக்டர் ஜெனரல் / இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூன்று நாள் கருத்தரங்கின் தொடக்க விழாவில், 14850 நிலையங்களில் ஐந்தாவது இடத்தை வென்றுள்ளது அண்ணாநகர் கே4 காவல் நிலையம். 2017 ஆம் ஆண்டில் செயல்திறன் மற்றும் முயற்சி ஆகியவற்றிற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நாக்ரோடிக் கட்டுப்பாடு, விரைவாக தீர்த்து முடிக்கப்பட்ட வழக்குகள், குறைவான சாலை விபத்துகள், அடிப்படை வசதிகள் என இருபத்தியோரு முக்கிய அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
“கே4 காவல் நிலையம்
“கே4 காவல் நிலையம் இந்த உயரிய அங்கீகாரம் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பார்வையாளர்களுக்கான வசதிகள் மட்டுமின்றி, கடந்த ஐந்து வருடங்களாக காவல் நிலையதிற்கு உட்பட்ட பகுதிகளில் கொலை குற்றம் எதுவும் நடக்கவில்லை என்ற அடிப்படையில் விருது வழங்கப்பட்டிருக்கிறது” என்கிறார் அண்ணாநகர் பகுதியின் துணைகமிஷனர் குணசேகரன்.
கடமையை தாண்டி
வாரத்தில் இறண்டு நாட்கள், குடியிருப்புகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கே4 காவல் நிலையம். இதைத் தவிர நகைபறிப்பு, கொள்ளை போன்ற செயல்களிலிருந்து மூத்த குடிமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வெளியூர் செல்லும் போது, தகவல் அடிப்படையில் அவர்கள் வீட்டினை கண்காணிக்கவும் செய்கிறார்கள்.
“முறையான ரோந்துப் பணிகள் மூல கொலை சம்பவங்களை கணிசமாக குறைத்துள்ளோம். எங்களிடம் ஏழு ரோந்து வாகனங்கள் உள்ளன. வழக்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதால், அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்படுகின்றன. அவ்வப்பொழுது பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதைப் பற்றி பேசுகிறோம். பிரச்சனைகள் நேறும் பொழுது குடியிருப்பு வாசிகள் 1098 என்ற எண்ணுக்கு அழைக்க வலியிருத்திகிறோம்.” என்று காவல் நிலையத்தின் நடவடிக்கைகள் பற்றி துணை ஆய்வாளர் பெனாசீர் பேகம் பகிர்ந்து கொண்டார்.
ஆண் பெண் சமத்துவத்திறகு எடுத்துக்காட்டு
சவாலான வழக்குகளை பெண்களால் கையாள முடியாது என்ற கூற்று பொதுவாகவே உள்ளது. கே4 காவல் நிலையத்தில் உள்ள நாற்பது காவலர்களில் ஆறு பேர் பெண் காவலர்கள். இவர்கள் ஆண் காவலர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்துள்ளார்கள்.
“எங்களுக்கு எந்த வித பாகுபாடும் காட்டப்படுவத்தில்லை. ஆண் காவலர்களை போன்றே நாங்களும் ரோந்துப் பணி, அசம்பாவித சம்பவங்களின் போது அவசர சேவைகள், கொள்ளை வழக்குகள் என எல்லாவற்றிலும் ஈடுபடுகிறோம். பணியின் போது எந்த வித பாகுபாடையும் நாங்கள் உணர்வதில்லை.” என்கிறார் பெனாசீர்.
எப்பொழுதும் தயார் நிலையில்
பகுதி வாசிகளுடன் சூகுகமான உறவை உருவாக்கியுள்ளனர். ஏதேனும் அசம்பாவித சம்பவம், அறிவிக்கப்படாத கண்டன பேரணி அல்லது வன்முறை நேர்கையில், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
“பள்ளிகள், கல்லூரிகள் அருகில் எங்களுக்கென்று கண்காணிப்பாளர்கள், உளவு சொல்பவர்கள் உள்ளனர். ஆதலால் முளையிலேயே பல சம்பவங்களை தடுக்கின்றோம். சமயங்களில் இவர்கள் உதவியால் பல வாழக்குகளை தீர்த்துள்ளோம்’ என்றார்.
வழக்குகளை கையாளும் நேர்த்தி
வழக்குகள் மீது தாமதான நடவடிக்கை என்பதே காவலர்கள் மீது அதிகமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. விரைவான நடவடிக்கை என்ற முக்கிய அம்சமே கே4 தேசிய அளவில் அங்கீகாரம் பெற முக்கிய காரணம்.
“குழுவாக செயல்பட்டு, தொலைந்து போன மூன்று வயதான குழந்தையை ஒரே நாளில் கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தோம்” என்று விரைவான செயல்பாடு பற்றி பகிந்த்தார் பெனாசீர்.
இந்த அணுகுமுறை பற்றி மேலும் பகிர்கையில் “முதல் தகவல் அறிக்கை சமர்பிக்கப்பட்ட உடன், குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்துவோம் – இதெல்லாமே சிறப்பாக செயல் பட்டு விரைவாக முடிக்கும் எண்ணத்தில் செயல்படுவோம். விபத்தின் பொழுது கால தாமதமின்றி உதவுபவருக்கு தொந்தரவின்றி செயல்படுமாறு பார்த்துக்கொள்வோம். எங்கள் நிலையத்திலிருந்து மருத்துவமனையில் சம்பிரதாயங்களை முடிக்க ஒருவரேனும் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.’ என்கிறார் துணை ஆய்வாளர் பெனாசீர்
பாதுகாப்பான நகரத்திற்காக
“எங்களின் நாள் எப்படி போகும் என்று கணிக்க முடியாது. பகுதி மக்களின் பாதுகாப்பே முதன்மை. அதற்காக எங்களின் சொந்த விருப்பங்களை குடும்ப நிலைகளை சில சமயங்களில் தியாகம் செய்கிறோம். பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்களின் பணி, ஆகையால் மக்கள் அவர்களே முன்வந்து எந்தவித தயக்குமுமின்றி தகுந்த தகவல்களை பகிரவும், எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார் பெனாசீர்.
அண்ணாநகர் கே4 காவல் நிலையம் தொடர்பு எண் – (44) 2345 2719
Read the story in English here.