2020 ஆம் ஆண்டு பெரும்பாலும் பலர் வீட்டினுள்ளே கடந்து விட்ட நிலையில், பொது இடங்களின் பயன்பாடு இந்த வருடம் அவ்வளவாக இல்லை என்றே கூறலாம். அரசும் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் தன் முழு கவனத்தையும் செலுத்தியது. இதனிடையே, நிலைமை சற்றே சீராக தொடங்கியதும், சென்னை நகரில் பல திட்டங்கள் மீண்டும் உயிர் பெற்றன அல்லது கவனம் பெற்றன. இதில் குறிப்பிட்ட சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம். அனைவருக்குமான மெகா தெருக்கள் அகலமான நடைபாதைகள், பிராகசமான தெரு விளக்குகள், சைக்கிளுக்கென தனி பாதை, நியமிக்கப்பட்ட பார்க்கிங் வசதி என நகரின் முக்கிய இடங்களில் 426 கி.மீ தூரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தெருக்களை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மெகா தெருக்கள் ஆக உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இந்த திட்டம் செயல் வடிவம் அடைய நீண்ட காலம் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு, அண்ணாநகர், வேளாச்சேரி, மைலாபூர், அடையாறு, நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை என தேர்ந்தெடுக்கப்பட்ட…
Read moreWe’re at 27 out of 100 donors. Will you be the next to contribute to our civic engagement work?