TAMIL

Translated by Sandhya Raju மிகுந்த கலந்துரையாடல்களுக்கு பின், செப்டம்பர் 30-ம் தேதியன்று உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு, 150 மில்லியன் டாலர் நிதியுதவியை தமிழக அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்தது. சென்னை நகரை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான தமிழக அரசின் தொலை நோக்கு திட்டத்திற்கு இந்த நிதி உதவும். "பசுமையான, வாழக்கூடிய, பிற நகரங்களுக்கு போட்டியாக, கால நிலை மாற்றம் மற்றும் பிற சவால்களை எதிர்கொள்ள" சென்னை நகர கூட்டுத்திட்டம் முனையும் என உலக வங்கியின் அதிகாரபூர்வ செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. இது என்ன திட்டம்? உலக வங்கி ஏன் தமிழக அரசுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது? தமிழக அரசுடன் இணைந்து உலக வங்கி செயல்படுவது இது முதல் முறை அல்ல. நகர்ப்புற வளர்ச்சி, சாலை வசதி மற்றும் போக்குவரத்து, பொது சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி என பல்வேறு நலத்திட்டங்களுக்காக உலக வங்கியுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டுள்ளது.…

Read more

Translated by Sandhya Raju தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை 2185 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), தரவு தெரிவிக்கிறது. கூடுதலாக, சென்னை மாநகராட்சியின் தரவுகள் படி, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சென்னையில் 100 பேரும், செப்டம்பர் மாதத்தில் 129 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இருந்த 2410 (MoHFW) என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. மாநிலத்தில் மழைக்காலம் தொடங்கியதும் இந்த நிலை வரும் என்பதால் இது ஒன்றும் புதிதல்ல. 2020 ஆண்டு முன்பு வரை மாநிலத்தில் அதிக அளவு பாதிப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போதைய பெருந்தொற்று காலத்தில் சுகாதார மற்றும் நிரவாகத் துறையின் முழு கவனமும் தொற்று பரவலை தடுப்பதில் உள்ளதால், டெங்கு காய்ச்சல் கவலை அளிப்பதாக உள்ளது. சென்னைவாசிகள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகர்களிடம் கொசுக்கள்…

Read more

Translated by Sandhya Raju செப்டம்பர் 12, 2021 அன்று பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் அங்கீகாரமற்ற பதாகை சாய்ந்ததில் அவ்வழியாக தனது வாகனத்தில் சென்ற 23 வயது ஆர் சுபஸ்ரீ பலியாகி இரண்டாண்டுகள் கடந்து விட்டன. சென்னை உயர்நீதிமன்றம் அப்போதைய அதிமுக ஆட்சியை கடுமையாக சாடியது. இரண்டு ஆண்டுகள் பிறகு, ஓஎம்ஆர், ஜிஎஸ்டி, தாம்பரம், வேளாச்சேரி என பல பகுதிகளில் மீண்டும் விளம்பர பதாகைகள் சாலை நடுவிலும், நடை பாதைகளிலும் முளைத்திருப்பதை காண முடிகிறது. "இன்னும் எத்தனை லிட்டர் இரத்தத்தை சாலைகள் பார்க்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?" என கடுமையான கேள்வியை உயர்நீதி மன்றம் அப்போது எழுப்பியது. அங்கீகாரமற்ற பதாகைகள், பானர்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பல முறை கூறியுள்ளது எங்களுக்கு அலுத்து விட்டது எனவும் குறிப்பிட்டிருந்தது. வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் பதாகைகள் வைக்கக்கூடாது என டிசம்பர் 2018 அன்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. நகராட்சியும், காவல்…

Read more

Translated by Sandhya Raju இம்மாத தொடக்கத்தில், அண்ணாநகரில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பில் தன்னை முன்பின் அறிந்திறாத நபர் ஒருவர் பின் தொடர்ந்ததாக சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிரீஷ்மா குத்தார், தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். தன்னை இடைமறித்து பேச முயன்றவரை கண்டு கொள்ளாமல் சென்றதாகவும், ஆனால் வேகமாக பின் தொடர்ந்து மீண்டும் இடையூறு செய்ததாகவும் தெரிவித்திருந்தார். காவலர்களிடம் புகார் அளித்ததை அடுத்து அந்த நபரை காவலர்கள் பிடித்து விசாரித்தனர். அதன் முழு விவரமும் கீழே: படம்: கிரீஷ்மா குத்தார் தன்னுடைய தோழிகள் பலருக்கு இது போன்று இடையூறு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். பொது முடக்கத்திற்க்கு பின் அலுவலகம் செல்ல ஆரம்பித்த மடிப்பாக்கத்தை சேர்ந்த 25 வயது ஆர். ரெஜினா தனது அனுபவத்தை பகிர்ந்தார், "என் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி வசிக்கும் ஒருவர், சில வாரங்களாக பின் தொடர்கிறார், எப்படி அதை தடுப்பது என தெரியவில்லை" என கூறினார்.…

Read more

Translated by Sandhya Raju வரதா புயல் ஏற்படுத்திய சேதத்தில், சென்னையில் பசுமை போர்வை பெரும் பாதிப்படைந்தது. புயல் சேதத்தை கடந்து நின்ற மரங்களும், போதிய பராமரிப்பு இல்லாததால் அச்சுறுத்தலில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமில்லாமல், பொது மக்களுக்கும் ஆபத்தாக இது மாறியுள்ளது. மரம் நடுதலை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், இருக்கும் மரங்களை பாதுகாப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும். சென்னை மரங்களை பாதுகாத்தல் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையோர மரங்களின் தாழ்வான கிளைகள் செப்பனிடப்படுவதை சென்னை மாநகராட்சி கண்காணிக்க வேண்டும். பல வருடங்களாக சென்னையின் பல பகுதிகளில் இந்த பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இந்த மரங்கள் மழைக் காலத்தின் போது முறிந்து விழுகிறது. பருவ மழை காலம் தொடங்கும் முன் மழை நீர் வடிகால் சுத்தம் செய்யப்படுவது போல் தாழ்வான மரக்கிளைகளும் வெட்டி பராமரிக்கப்பட வேண்டும். என் குடியிருப்பு பகுதியில் உள்ள நிலை இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. பட்டேல் சாலை,…

Read more

Translated by Sandhya Raju நீங்கள் அன்றாடம் செல்லும் இடங்களான கடைகள், பள்ளி கல்லூரிகள், வேலையிடம், மருத்துவமனை மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு வெறும் 15 நிமிடத்தில் நடந்தோ அல்லது வண்டியிலோ செல்வதை கற்பனை செய்து பாருங்கள். இதுவே 15 நிமிட நகரம் என அழைக்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இது செயல்படுத்தப்பட்டு, வெற்றி பெற்றதை அடுத்து, உலகில் உள்ள பல நகரங்கள் இந்த அமைப்பை பின்பற்ற பரீசலித்து வருகிறது. சென்னையும் இது போன்று 15 நிமிட நகரமாக மாற முடியுமா? பாரிஸ் 1 பாந்தியன்-சார்போன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் கார்லோஸ் மோரீனோ என்பவரால் 2016 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இந்த யோசனை, குறிப்பாக கோவிட் -19 தொற்றின் போது நிறைய ஈர்ப்பைப் பெற்றுள்ளது. நிலையான நகரங்களை உருவாக்க இது முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது, உலகமெங்கும் நிலவிய பொது முடக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது. பலர் வேலை…

Read more

Translated by Sandhya Raju சென்னையின் சூழலியலில் முக்கிய பங்கு வகிக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பல ஆண்டுகளாக,அதிகாரிகளின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது; பரவலான ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகள் மற்றும் கழிவுநீரை கொட்டுவது போன்ற நடவடிக்கைகாளால் அதன் ஆதார இருப்பை அச்சுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில், பல்வேறு அரசு துறைகள், கால்வாயை மீட்கும் திட்டத்தை பற்றி பேசி வந்தாலும், இது வரை எந்தவொரு மாற்றமும் இல்லை. ஆளும் திமுக அரசும், தங்களின் தேர்தல் அறிக்கையில், பக்கிங்ஹாம் கால்வாய் உள்பட அனைத்து நதிகளும் சுத்தப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஐடி எக்ஸ்பிரஸ்வேஅகழுபடுத்தப்படும் என்ற அறிவிப்பால், அதனோரம் அமைந்துள்ள கால்வாயும் புத்துயிர் பெறும் என மீண்டும் நம்பிக்கை எழுந்துள்ளது. இப்போது கழிவுநீருக்கான ஒரு வழித்தடமாக உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை இப்படி சித்தரித்து பாருங்கள்: ஒரு மியாவாக்கி காடு, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, ஒரு சிற்பக் கூடம் மற்றும் ஒரு பாதசாரி பிளாசா. ஏட்டில் உள்ள…

Read more

Translated by Sandhya Raju வாய்ப்புகள் தேடி மக்கள் நகர்ப்புறம் நோக்கி நகரத் தொடங்கியதில் உலகம் முழுவதும் நகரமயமாக்கல் வெகு விரைவாக முன்னேறியுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நகரத்தின் உள்ளேயேயும், அதனை சுற்றியும் விரிவாக்கம் செய்யும் நிர்பந்தத்திற்க்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், வெப்ப நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, அதிக மாசு என அதன் தாக்கம் பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. 2001 ஆம் ஆண்டு 6.6 மில்லியனாக இருந்த மக்கள் தொகை 2011-ல் 8.6 மில்லியனாக (சென்சஸ் படி) அதிகரிக்க, சென்னையும் இந்த மாற்றத்திற்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் வெளியான ஆய்வின் படி, 1991-2016 ஆண்டில் சென்னையில் கோடை வெப்பம் (மார்ச் - மே) 5.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. மக்கள் தொகை ஏற்றம், சீரற்ற நகரமயமாக்கல் ஆகியவை இதற்கான முக்கிய காரணியாக அமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் இரண்டு இந்திய மெகாசிட்டிகளுக்கான மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அதன் விளைவுகள்:…

Read more

Translated by Sandhya Raju தரமற்ற சாலைகள், மேடு பள்ளங்கள், சீரற்ற ஒட்டு வேலை செய்யப்பட்ட சாலைகள் ஆகியன சென்னையின் ஒரு அங்கம். புது சாலைகள் போடப்பட்டவுடன் அரசு நிறுவனங்களால் அவை தோண்டப்படுகிறது. இதனால், சாலையை சீரமைக்க புகார் அளிக்கப்பட்டாலும், பிற துறைகளின் மீது அதிகாரிகள் பழி சுமத்துகின்றனர். சென்னையில் சாலைகள் அமைப்பதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து பொது மக்களின் அறியாமையே இதற்கு காரணம். சென்னையில் போடப்படும் சாலைகளின் வகைகள், அவற்றைப் பற்றி எங்கு புகார் செய்வது, பொதுமக்கள் எப்படி கண்காணிப்பது என்பது பற்றிய விளக்கங்கள் உங்களுக்காக இங்கே வழங்கியுள்ளோம். சென்னை சாலைகள் மற்றும் மாநகராட்சியின் பங்கு சென்னை மாநகராட்சியின் கீழ் இரண்டு வகையான சாலைகள் வருகின்றன. பேருந்து வழிதடங்கள் சாலைகள் (BRR): இரு சக்கர வாகனங்கள் முதல் கன ரக வாகனங்கள் வரை அனைத்து வகையான வாகனங்களும் செல்லும் சாலை. உதாரணமாக, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, வேளாச்சேரி சாலை(தரமணி…

Read more

Translated by Sandhya Raju 2019-ம் ஆண்டில் சுற்றுச்சூழலை காக்கும் வாகன பயணத்திற்கு உத்வேகும் அளிக்கும் நோக்கில், அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மின்சார பேருந்துகளை சோதனை ஓட்டத்திற்கு விட்டார். ஜூலை 2017-ன் முந்தைய சோதனை ஒட்டம் பிறகு இது இரண்டாவது சோதனை ஓட்டமாக இருந்தது. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் இயக்கப்பட்ட இந்த பேருந்து சென்னை சென்ட்ரலிருந்து திருவான்மியூர் வரையிலும், கோயம்பட்டிலிருந்து பிராட்வே வரையிலும் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு இந்த புது தொழில்நுட்ப உபயோகம் கனவாகவே போனது. மின்சார வாகன பயணத்தை ஊகுவிக்கும் வகையில், தமிழக அரசு 2019-ல் மின்சார வாகனங்களுக்கான (ஈ.வி) கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் படி, போக்குவரத்து கழகம் அதனிடம் உள்ள சுமார் 5% வாகனங்களை மாற்ற முயற்சிக்கும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1000 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அந்த கொள்கை முடிவில் கூறப்பட்டது. இது அறிவிக்கப்பட்டு ஓராண்டு…

Read more