TAMIL

தூய்மை இந்தியாவின் முதல் படி கழிப்பறை. இன்று இந்தியாவில், படித்தவர்களும் பொது இடங்களில் மலம் கழிக்கிறார்கள். அது எத்தனை அருவருக்கத் தக்க செயல்!, அதனால் இடம் அசிங்கமாகின்றது, துர்நாற்றம் வீசுகின்றது, அதில் உட்க்காரும் ஈக்கள் பின்னர் நாம் உண்ணும் உணவுகளிலும் உட்கார்ந்து நோய்களை பரப்பு கின்றன. சுவரைப் பார்த்து மலம் கழித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டு போகுமா? அவர்களைப் பார்த்து எத்தனை பேர் அருவருப்பில் முகம் சுளிக்கிறார்கள் என்று யோசித்துக் கூட பார்ப்பதில்லை. இது தவறென்று தெரிந்து செய்கின்றார்களோ தெரியாமல் செய்கின்றார்களோ என்றுபுரியவில்லை. அவர்கள் ஈட்டும் பணம் எல்லாம் அவர்களது இச் செயகைகளால் மருந்துக்கும், மருத்துவருக்கும் தான் போகப் போகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளாது இருக்கிறார்கள். சுத்தமே ஆரோக்கியமான வாழ்விற்கு ஆதாரம் என்பதை தெரிந்தும், அதை நடைமுறைக்கு கொண்டு வர மறுக்கிறார்கள். அரசாங்கம் வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்ட உதவுகின்றது . பொது கழிப்பிடங்களும் கட்டி வருகிறார்கள். ஆனால் மக்கள் இன்னும் அதன் முக்கியதுவத்தை உணரவில்லை.…

Read more

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிய போது அது குறித்து பாராளுமன்றமும் விவாதிக்கவில்லை, தமிழக சட்டமன்றமோ கூடவே இல்லை. பாராளுமன்றம் தமிழக விவசாய்களின் பிரச்சினை தமிழக சட்டமன்றத்தின் பொறுப்பு என்று அவர்கள் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை , தமிழக சட்டமன்றமோ விவசாயிகள் டெல்லியில் தானே போராடுகிறார்கள் , அதனால் நமக்கு என்ன என்று இருந்துவிட்டார்கள். நம் கையே நமக்கு உதவி , நம் பிரச்சனைகளை அரசுக்கு வெளிப்படுத்துவதுடன் நின்று விடாது நாமும் நம் பிரச்சினைகள் என்ன,அது எதனால் வந்தது , அதற்கு என்ன தீர்வு என்று ஆராய்ந்து அதற்கான தீர்வுகள் காண வேண்டும் . அதற்கான முதல் முயற்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 50-கும் மேற்பட்டோர் 'சட்ட பஞ்சாயத்து இயக்கம்' நடத்திய இளைஞர்களுக்கான 'மாதிரி சட்டமன்றம்' என்ற நிகழ்வில் விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசியது வரவேற்கபட வேண்டிய ஒன்றாகும். விவசாயிகளின் சிக்கல்கள் மற்றும் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்தும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் . அதே நேரத்தில் விவசாய்களும்…

Read more