முதல் பாகத்திலே, எனக்கு Bala Vidyalaya பள்ளியை நடத்திடும் அந்த மூன்று பெண்மணிகளைக் காண வேண்டும் என்று சொல்லி இருந்தது ஞாபகம் இருக்கிறதா? நான் கேட்டவுடனேயே பள்ளியை நடத்திடும் ஒருவரான திருமதி டாக்டர் வள்ளி அண்ணாமலை அவர்கள், என்னை அவர்கள் இல்லத்திற்க்கே அன்புடன் அழைத்து, திருமதி சரஸ்வதி நாராயணஸ்வாமி உடன் இருக்க , மிக பொறுமையாக, செவித் திறன் குறைபாடு உடையவர்களுக்காக அவர்கள் செய்து வரும் தொண்டினை பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். திருமதி சரஸ்வதி நாராயணஸ்வாமி, அவர்களுக்கு தெரிந்த மூன்று குழந்தைகளுக்கு இந்த குறை பாடு உள்ளதை பார்த்து , இவர்களுக்கும், இவர்களைப் போன்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று 48 வருடங்களுக்கு முன் நினைத்தார். USIS நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், இவற்றில் இது பற்றி வெளி வந்த புத்தகங்கள் அனைத்தையும் படித்து, இவர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றார்கள் . அவர்கள் நம்பிக்கை வீணாகவில்லை. அந்த முயற்சி இன்று ஆல மரமாக வளர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட…
Read moreஎன் பள்ளித் தோழி மும்பையில் இருந்து, தன் ஒரு வயதே ஆன செவித் திறன் குறைந்த மகளுக்கு பேச்சு வருவதற்க்காக, பாலா வித்யாலயா இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி பற்றி கேள்விப் பட்டு சென்னை வந்திருந்தாள். அவர்கள் செவித்திறன் குறைந்த பிள்ளைகளுக்காக ஆற்றிடும் சேவைகளை பற்றி விரிவாக எடுத்து சொன்னாள். 48 வருடங்களுக்கு முன் பாலா வித்யாலயா, இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி தொடஙக்கப்பட்டு, இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பேசும் திறமை பெற்று உள்ளார்கள் என்றும் கேள்விப்பட்டதாக சொன்னாள். அப்பொழுது, நான் 20-2-2016 ல் 'தி டெலிகிராப்' (The Telegraph) பத்திரிக்கையில் வால் நரம்பு உள்வைப்பு (cochlear implant) பற்றி வந்த செய்தியினைப் படித்தது நினைவிற்கு வந்தது . இக் கருவியின் மூலம் பழுது அடைந்த , திறன் குறைந்த செவிகளுக்கு வரும் ஒலியினை மூளைக்கு மின்னணு சமிக்ஞைகள் மூலம் அனுப்ப முடியும், அதனால் பேச இயலாதவர்களையும்…
Read moreதூய்மை இந்தியாவின் முதல் படி கழிப்பறை. இன்று இந்தியாவில், படித்தவர்களும் பொது இடங்களில் மலம் கழிக்கிறார்கள். அது எத்தனை அருவருக்கத் தக்க செயல்!, அதனால் இடம் அசிங்கமாகின்றது, துர்நாற்றம் வீசுகின்றது, அதில் உட்க்காரும் ஈக்கள் பின்னர் நாம் உண்ணும் உணவுகளிலும் உட்கார்ந்து நோய்களை பரப்பு கின்றன. சுவரைப் பார்த்து மலம் கழித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டு போகுமா? அவர்களைப் பார்த்து எத்தனை பேர் அருவருப்பில் முகம் சுளிக்கிறார்கள் என்று யோசித்துக் கூட பார்ப்பதில்லை. இது தவறென்று தெரிந்து செய்கின்றார்களோ தெரியாமல் செய்கின்றார்களோ என்றுபுரியவில்லை. அவர்கள் ஈட்டும் பணம் எல்லாம் அவர்களது இச் செயகைகளால் மருந்துக்கும், மருத்துவருக்கும் தான் போகப் போகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளாது இருக்கிறார்கள். சுத்தமே ஆரோக்கியமான வாழ்விற்கு ஆதாரம் என்பதை தெரிந்தும், அதை நடைமுறைக்கு கொண்டு வர மறுக்கிறார்கள். அரசாங்கம் வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்ட உதவுகின்றது . பொது கழிப்பிடங்களும் கட்டி வருகிறார்கள். ஆனால் மக்கள் இன்னும் அதன் முக்கியதுவத்தை உணரவில்லை.…
Read more