TAMIL

At a recent All India conference for senior police officials in the capital city, best performing police stations across the country were recognised and honoured. K4 Police station, Annanagar, Chennai bagged the 5th position in the country for its speedy disposal of cases, zero incidence of murder and the way visitors are handled. Citizen Matters spoke to officials at K4 to understand the distinct functioning of the police station. வண்டிகள் நேர்த்தியாக நிறுத்தி வைக்கப்பட்ட பார்கிங் ஏரியா, வரவேற்பாளர் அறை, பார்வையாளர்கள் காத்திருக்கும் பகுதி, குடிநீர் என ஒரு ஹோட்டல் போன்ற அமைப்பு கொண்டிருக்கிறது கே4 காவல் நிலையம். ஆனால் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இதுவல்ல காரணம். ஜனவரி ஏழாம் தேதி…

Read more

For our English readers: Mandram is a global platform for like-minded people with interests in Tamil language and literature. It marks the coming together of people from different backgrounds to share their perspectives, journey and success stories for everyone to be inspired. Despite the Internet binding us all together, we still stay polarised. Mandram looks forward to be a TED in Tamil. The first ever Mandram was organised in Chennai which had speakers from varied backgrounds like science, art and culture sharing their perspectives. தமிழ் மரபை பறைசாற்றும் பொங்கல் திருநாள் ஒரு புறம் நகரத்தில் களைகட்ட, தமிழ் இலக்கியம், எழுத்து மேல் உண்டான ஆர்வம் காரணமாக…

Read more

For our English readers: A few days ago, scores of dead fish washed up onto the beaches of Adyar, and it is believed that the contamination of sea water with untreated sewage, was the primary reason for this. Once your sewage leaves your house (if within the limits of Chennai Corporation) it is pumped to the nearest sewage treatment plant (STP), where it must be treated before the water is released into the Adyar and Cooum rivers, and Buckingham Canal. Where the drainage system does not exist, the sewage is collected in septic tanks, and transported by lorries to the…

Read more

சமீப காலமாக நாம் அதிகம் எதிர்கொள்ளும் காதல் நிராகரிப்பு கொலைகள் ஆண் சமுதாயத்தின் மீதான நம்பிக்கையையே புரட்டிப் போடுவதாக உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடக்க என்ன காரணம் என்று உங்களின் பலரைப் போலவே எங்களுக்குள்ளும் ஆதங்கம் மேலோங்கியது. இது போன்ற நிலைமை அமைவதை பற்றியும், எதிர்கொள்வது பற்றியும் பிரபல மனநல நிபுணரிடமும், முண்ணணி திரைப்பட இயக்குனரிடமும் அறிந்து கொள்ள முற்பட்டோம். நம் உடலில் ஏற்படும் வலிக்கு எவ்வாறு நம் மூளை செயல்படுகிறதோ அதே போன்று தான் நிராகரிப்பு ஏற்படும் பொழுது செயல்படுகிறது எனக் கூறுகிறார் பிரபல மனநல வல்லுநர் மினி ராவ். ஆனால் உடல் வலியை மறப்பது போல் எளிதில் நிராகரிப்பு ஏற்படுத்தும் வலியை மறக்க இயலாது. அந்த உணர்ச்சி வடுக்கள் நீண்ட நேரம் ஆழப் பதிந்திருக்கும். இதுவே சுய மரியாதை, தன்னம்பிக்கை ஆகியவற்றை கேள்விக்குறியாக்கும். எதிர்கொள்வது எப்படி? சாதுவான பெண் முதல் நம்மிடம் மிகவும் நட்பாக…

Read more

முதல் பாகத்திலே, எனக்கு Bala Vidyalaya பள்ளியை நடத்திடும் அந்த மூன்று பெண்மணிகளைக்  காண வேண்டும் என்று சொல்லி இருந்தது ஞாபகம் இருக்கிறதா? நான் கேட்டவுடனேயே பள்ளியை நடத்திடும்  ஒருவரான திருமதி டாக்டர் வள்ளி அண்ணாமலை அவர்கள், என்னை  அவர்கள்  இல்லத்திற்க்கே அன்புடன் அழைத்து,  திருமதி சரஸ்வதி  நாராயணஸ்வாமி உடன் இருக்க , மிக பொறுமையாக, செவித் திறன் குறைபாடு உடையவர்களுக்காக அவர்கள் செய்து வரும் தொண்டினை பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். திருமதி சரஸ்வதி  நாராயணஸ்வாமி, அவர்களுக்கு தெரிந்த மூன்று குழந்தைகளுக்கு இந்த குறை பாடு உள்ளதை பார்த்து , இவர்களுக்கும், இவர்களைப் போன்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று  48 வருடங்களுக்கு முன் நினைத்தார்.  USIS  நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், இவற்றில் இது பற்றி வெளி வந்த புத்தகங்கள் அனைத்தையும் படித்து, இவர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றார்கள் . அவர்கள் நம்பிக்கை வீணாகவில்லை. அந்த முயற்சி இன்று ஆல மரமாக வளர்ந்து நூற்றுக்கும்   மேற்பட்ட…

Read more

என் பள்ளித் தோழி மும்பையில் இருந்து, தன் ஒரு வயதே ஆன செவித் திறன் குறைந்த மகளுக்கு பேச்சு வருவதற்க்காக, பாலா வித்யாலயா  இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி பற்றி கேள்விப் பட்டு சென்னை வந்திருந்தாள். அவர்கள் செவித்திறன் குறைந்த பிள்ளைகளுக்காக ஆற்றிடும் சேவைகளை பற்றி விரிவாக எடுத்து சொன்னாள். 48 வருடங்களுக்கு முன்  பாலா வித்யாலயா, இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி தொடஙக்கப்பட்டு, இதன் மூலம்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பேசும் திறமை பெற்று உள்ளார்கள் என்றும் கேள்விப்பட்டதாக சொன்னாள். அப்பொழுது, நான்  20-2-2016 ல் 'தி டெலிகிராப்' (The Telegraph) பத்திரிக்கையில்  வால் நரம்பு உள்வைப்பு  (cochlear  implant) பற்றி வந்த செய்தியினைப் படித்தது நினைவிற்கு வந்தது . இக்  கருவியின் மூலம் பழுது அடைந்த ,   திறன் குறைந்த செவிகளுக்கு வரும் ஒலியினை மூளைக்கு மின்னணு  சமிக்ஞைகள் மூலம் அனுப்ப முடியும், அதனால் பேச இயலாதவர்களையும்…

Read more

தூய்மை இந்தியாவின் முதல் படி கழிப்பறை. இன்று இந்தியாவில், படித்தவர்களும் பொது இடங்களில் மலம் கழிக்கிறார்கள். அது எத்தனை அருவருக்கத் தக்க செயல்!, அதனால் இடம் அசிங்கமாகின்றது, துர்நாற்றம் வீசுகின்றது, அதில் உட்க்காரும் ஈக்கள் பின்னர் நாம் உண்ணும் உணவுகளிலும் உட்கார்ந்து நோய்களை பரப்பு கின்றன. சுவரைப் பார்த்து மலம் கழித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டு போகுமா? அவர்களைப் பார்த்து எத்தனை பேர் அருவருப்பில் முகம் சுளிக்கிறார்கள் என்று யோசித்துக் கூட பார்ப்பதில்லை. இது தவறென்று தெரிந்து செய்கின்றார்களோ தெரியாமல் செய்கின்றார்களோ என்றுபுரியவில்லை. அவர்கள் ஈட்டும் பணம் எல்லாம் அவர்களது இச் செயகைகளால் மருந்துக்கும், மருத்துவருக்கும் தான் போகப் போகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளாது இருக்கிறார்கள். சுத்தமே ஆரோக்கியமான வாழ்விற்கு ஆதாரம் என்பதை தெரிந்தும், அதை நடைமுறைக்கு கொண்டு வர மறுக்கிறார்கள். அரசாங்கம் வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்ட உதவுகின்றது . பொது கழிப்பிடங்களும் கட்டி வருகிறார்கள். ஆனால் மக்கள் இன்னும் அதன் முக்கியதுவத்தை உணரவில்லை.…

Read more

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிய போது அது குறித்து பாராளுமன்றமும் விவாதிக்கவில்லை, தமிழக சட்டமன்றமோ கூடவே இல்லை. பாராளுமன்றம் தமிழக விவசாய்களின் பிரச்சினை தமிழக சட்டமன்றத்தின் பொறுப்பு என்று அவர்கள் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை , தமிழக சட்டமன்றமோ விவசாயிகள் டெல்லியில் தானே போராடுகிறார்கள் , அதனால் நமக்கு என்ன என்று இருந்துவிட்டார்கள். நம் கையே நமக்கு உதவி , நம் பிரச்சனைகளை அரசுக்கு வெளிப்படுத்துவதுடன் நின்று விடாது நாமும் நம் பிரச்சினைகள் என்ன,அது எதனால் வந்தது , அதற்கு என்ன தீர்வு என்று ஆராய்ந்து அதற்கான தீர்வுகள் காண வேண்டும் . அதற்கான முதல் முயற்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 50-கும் மேற்பட்டோர் 'சட்ட பஞ்சாயத்து இயக்கம்' நடத்திய இளைஞர்களுக்கான 'மாதிரி சட்டமன்றம்' என்ற நிகழ்வில் விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசியது வரவேற்கபட வேண்டிய ஒன்றாகும். விவசாயிகளின் சிக்கல்கள் மற்றும் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்தும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் . அதே நேரத்தில் விவசாய்களும்…

Read more