Translated by Krishna Kumar "கிணத்த காணோம், கிணத்த காணோம்!" - கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலு காவல்துறையிடம் ஒரு திறந்த கிணற்றை காணவில்லை என்று பொய் புகார் கொடுத்து நம்மையெல்லாம் வயிறுகுலுங்க சிரிக்கவைத்த நகைச்சுவை காட்சியை யாரால் மறக்க முடியும். கிணறு ஒன்றை காணோம் எனும்பொழுது அவ்வளவு சிரித்தோம், ஆனால் நிஜத்தில் ஒரு நீர்நிலையே காணாமல் போகும் சாத்தியமுண்டா? அதிர்ச்சியூட்டும் விஷயம் தான், அனால் நடக்கிறது. சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 7 குளங்கள் அப்படிதான் காணாமல் போயுள்ளன. பல வருடங்களாவே இந்த குளங்கள் பொது மக்களாலும், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் போன்ற பல்வேறு அரசு துறைகளாலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. ஒரு காலத்தில் [30 வருடங்களுக்கு முன்] குழந்தைகளும் பெரியோர்களும் அல்லி நிறைந்த இந்த குளங்களில் மீன்பிடித்து மகிழ்ந்தனர் ; பெண்கள் அங்கிருந்து தண்ணீர் எடுப்பது சகஜம். பண்டிகைகளுக்கு விளக்கேற்றி, கரையில் மக்கள் கூடிய காட்சிகள்…
Read moreWe’re at 16 out of 100 donors. Will you be the next to contribute to our civic engagement work?