தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிய போது அது குறித்து பாராளுமன்றமும் விவாதிக்கவில்லை, தமிழக சட்டமன்றமோ கூடவே இல்லை. பாராளுமன்றம் தமிழக விவசாய்களின் பிரச்சினை தமிழக சட்டமன்றத்தின் பொறுப்பு என்று அவர்கள் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை , தமிழக சட்டமன்றமோ விவசாயிகள் டெல்லியில் தானே போராடுகிறார்கள் , அதனால் நமக்கு என்ன என்று இருந்துவிட்டார்கள்.
நம் கையே நமக்கு உதவி , நம் பிரச்சனைகளை அரசுக்கு வெளிப்படுத்துவதுடன் நின்று விடாது நாமும் நம் பிரச்சினைகள் என்ன,அது எதனால் வந்தது , அதற்கு என்ன தீர்வு என்று ஆராய்ந்து அதற்கான தீர்வுகள் காண வேண்டும் . அதற்கான முதல் முயற்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 50-கும் மேற்பட்டோர் ‘சட்ட பஞ்சாயத்து இயக்கம்’ நடத்திய இளைஞர்களுக்கான ‘மாதிரி சட்டமன்றம்’ என்ற நிகழ்வில் விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசியது வரவேற்கபட வேண்டிய ஒன்றாகும்.
விவசாயிகளின் சிக்கல்கள் மற்றும் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்தும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் . அதே நேரத்தில் விவசாய்களும் ஒன்றாய் இணைந்து சிக்கல்கள் நீங்க அவர்களால் என்ன செய்ய முடியோமோ அவைகளை செய்திட வேண்டும். இன்றைய தலைமுறையினர்கள் நிறைய இடங்களில் தாங்களாகவே அரசினை நம்பி இராது ஒன்றாக கூடி கருவேளை மரங்களை ஒழித்தும் , நீர் நிலைகளை தூர்வாரியும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயன்று வருவது பெரு மகிழ்ச்சிக்கு உரியதாகும் .
விவாதம் நடைபெற்ற போது நடந்த விவாதத்தில், பங்கேற்பாளர்கள் கூறிய புதிய புதிய கருத்துக்களையும், அவர்கள் வாழ்க்கை அனுபவங்களையும் அனைத்து விவசாயிகளும் தெரிந்து பயனடையுமாறு பத்திரிக்கை, வானொலி, காணொளி, பேஸ்புக் மூலமாக தொடர்ந்து வெளியிடவேண்டும் . அதனுடன் சாதனை படைத்த விவசாய்களைப்பற்றியும் இந்த சட்ட பஞ்சாயத்து இயக்கம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரியப்படுத்தி ஊக்கம் அளித்திட வேண்டும்.சட்ட
பஞ்சாயத்து இயக்கத்தின் இந்த முயற்சி விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து ஆக்கம் பெற உதவிடும்.
நான் எத்தனை விதைகள் விதைத்து வளர்த்தாலும் நான் வளரவே இல்லையே என்ற விவசாய்கள், நான் விதைத்திடும் ஒவ்வொரு விதையும் எனக்கு வளர்ச்சியைத் தருகிறது என்ற நாள் வந்திட வேண்டும் . அதற்கான முயற்சிகளை சட்ட பஞ்சாயத்து இயக்கம் செய்திடும் என்ற நம்பிக்கை இந்த மாநாட்டின் போது துளிர் விடுவது தெரிகிறது.