Translated by Sandhya Raju
“உலர் கழிவு மேலாண்மை பணியில் நீண்ட காலமாக உள்ளோம் ஆனால் எங்களுக்கு ஊதியமோ மரியாதையோ இல்லை” என்கிறார் வேளாச்சேரியில் கழிவுகளை சேகரிக்கும் நயன் முஹமத். அந்தந்த பகுதிகளில் கழிவு அப்புறப்படுத்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். எந்தவொரு பாதுகாப்புமின்றி அவர்கள் பணி முறைபடுத்த வாய்ப்புகளின்றி தொடர்ந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தோ-ஸ்பானிஷ் கூட்டு முயற்சியில் “அர்பேசர்-சுமீத்” நிறுவனம் கழிவு மேலாண்மை ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து, இந்த முறையும், நகரத்தின் பல பகுதிகளில் உள்ள கழிவு சேகரிப்பவர்கள் நிராகரிப்பை எதிர்கொள்கின்றனர்.
புதிய கழிவு மேலாண்மை ஒப்பந்தம்
பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை என்ற அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஏழு மண்டலங்களில் கழிவு மேலாண்மையை இந்த நிறுவனம் பெற்றது. மக்கும் கழிவுகள் (காய்கள், மீந்த உணவு போன்றவை), மக்காத கழிவுகள் (பிளாஸ்டிக், பால் கவர், பேனா போன்றவை) மற்றும் அபாயகரமான வீட்டு கழிவுகள் (மருந்து, ரேசர், ஸ்பிரே பாட்டில்) ஆகியவை சேகரிக்கும் போதே பிரிக்கப்பட வேண்டும். இது தவிர, சாலைகளை துப்புறவு செய்யும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். வீடு வீடாக சென்று கழிவுகளை சேகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு ஈ-ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
Read more: Where does the waste generated in your home go?
ஒப்பந்தப்படி முதன்மை கழிவு சேகரித்தலின் போது மூன்று பிரிவுகளாக பிரித்து தனி தொட்டிகளில் சேகரிக்க வேண்டும் மற்றும் இரண்டாம் நிலை பிரித்தல் முறைக்கு மக்கும், மக்காத, தெரு குப்பைகள் ஆகியவற்றிற்கு மூன்று வண்ணங்களில் ஆர் சி தொட்டிகள் ஒவ்வொரு இடத்திலும் வைத்திருக்க வேண்டும்.
எனினும், பெரும்பாலும் கழிவுகள் சேகரிக்கப்படும் போது கலந்து விடுகின்றன, இவை பின்னர் ஈ-ரிஷ்காக்களில் தான் பிரிக்கப்படுகின்றன. “பிரிப்பதற்கு சவாலாக இருந்தால், அவற்றை தெருவில் உள்ள குப்பை தொட்டியில் சேர்த்து விடுவோம், இவை நிலப்பரப்பில் கொட்டப்படும் போது பிரிக்கப்படும்.” என்கிறார் அர்பேசர்-சுமீத் நிறுவனத்தில் வேளாச்சேரியில் பணி புரியும் தூய்மை பணியாளர் துரை.
ஒப்பந்தப்படி, சாலைகளில் உள்ள குப்பைத்தொட்டியில் உள்ள கழிவுகளை பிரித்தல் குறித்து கேட்ட போது, “இங்கு குப்பைகள் பிரிக்கப்படுவதில்லை, நாங்கள் சாலைகளில் அள்ளும் குப்பைகள் அனைத்து குப்பைகளுடன் ஒன்றாக தான் கொட்டப்படுகின்றன. பெரிய நில பரப்பில் தான் அவை பிரிக்கப்படுகின்றன” என்கிறார் அர்பேசர்-சுமீத் நிறுவனத்தின் தூய்மை பணியாணர் ஆர். கற்பகம்.
Read more: How the coronavirus pandemic has slowed down Chennai’s waste management efforts
குப்பைகளை மூல பிரித்தல் செய்ய வேண்டும் என மாநகராட்சி தெரிவித்தாலும், வீடுகளில் அது செயல்படுத்தப்படுவதில்லை. “இது குறித்து குடியிருப்புவாசிகளுடன் அதிகாரிகள் இன்னும் பேசவில்லை. இது செயல்படுத்தப்பட்டால் தான், எங்கள் வேலையை நாங்கள் சரிவர செய்ய முடியும்.” என்கிறார் துரை.
உள்ளூர் கழிவு சேகரிப்பாளர்கள் இதற்கான தீர்வை அளிக்க முடியுமா?
மூலப் பிரித்தலை வழக்கத்தில் கொண்டு வர, “குப்பைகளை வகை பிரித்தல்” என்பதற்கு பதிலாக “குப்பைகளை எவ்வாறு பிரிக்க வேண்டும்” என வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
“விழிப்புணர்வு அளிப்பதில் அரசு சாரா அமைப்புகளும், அதிகாரிகளும் பெரும் பங்கு வகிக்க முடியாது. மக்காத கழிவுகள் என்றால் மறுசுழற்சி மட்டும் தான் என மக்கள் நினைக்கிறார்கள். இது குறித்து விழிப்புணர்வு தர உள்ளூர் கழிவு சேகரிப்பாளர்கள் தான் பொருத்தமானவர்கள். ஆனால் நாங்கள் கழிவு மேலாண்மையில் சேர்க்கப்படுவதில்லை,” என்கிறார் முஹமத்.
மூலப் பிரித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை திணறி வரும் நிலையில், இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, அடுத்த கட்டத்திற்கும் புனே நகரம் சென்று விட்டது. சுவச் (SWaCH Pune Seva Sahakari Sanstha) மற்றும் ககட் கச் கஷ்டகாரி பஞ்சாயத் (KKPKP) ஆகியவற்றை உள்ளூர் சேகரிப்பாளர்களுக்கான கூட்டுறுவை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, இதில் உள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
இவர்கள் வீடு வீடாகவோ அல்லது குடியிருப்பில் உள்ள சங்கத்துடன் உரையாடி, உலர்ந்த மற்றும் மறுசுழற்சி கழிவுகள் குறித்து விழிப்புண்ர்வு ஏற்படுத்துவதோடு அவை பல்வேறு நிலைகளில் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகின்றன என்றும் விளக்குகின்றனர்.
“நாங்கள் வசிக்கும் இது போன்ற பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில், ஒவ்வொரு தளத்திற்கும் கழிவுகளை சேகரிக்க, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வருகின்றனர். நாங்கள் அளிக்கும் கழிவுகள் சரியாக பிரிக்கப்படவில்லை, என்றால் இவற்றை வாங்க மறுக்கின்றனர். இது போல் பெரும்பாலானோர் செய்தால், எங்கள் குடியுருப்பில் உள்ள பெரிய தொட்டியை மாநகராட்சி அகற்றி விடும். பின் எங்கள் வீட்டு கழிவுகளை அப்புறப்படுத்த சரியான வசதி இருக்காது.” என்கிறார் பூனேவின் லோகேகான் பகுதியில் வசிக்கும் சினேகா உப்பல்.
பூனேவைப் போல் சென்னையும் முறைசாரா கழிவு சேகரிப்பவர்களை ஒன்றிணைத்து, இவரகள் மூலம் கழிவு மூலப்பிரித்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
“கழிவு பிரிக்கப்பட வேண்டும் என மக்கள் அறிந்திருந்தாலும், அவை எவ்வாறு செய்ய வஏண்டும் என அறிந்திருக்கவில்லை. இது மிக அவசியம் என்றாலும், புதிய ஒப்பந்தப்படி இது வரை சென்னை மாநகராட்சி இந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. இதனால் எங்கள் பணி மேலும் கடினமாகிறது.” என்கிறார் துரை.
குடிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவிக் நடவடிக்கை மற்றும் குழு (சிஏஜி) அமைப்பின் வம்சி ஷங்கர் இது குறித்து வலியுறுத்துகையில் “பருவ நிலை மாற்றம், நிலையான வளர்ச்சி ஆகியவை குறித்து நாம் அதிகம் பேசி வரும் இந்த தருணத்தில், கழிவுகளை மூலப்பிரித்தல் என்பதை கடந்து வள நிர்வாகமாக மக்கள் பார்க்க வேண்டும். கழிவுகளின் மிக சிறிய பகுதியே ஆற்றலாக மாற்ற இயலாது. இதை மக்கள் புரிந்து கொண்டால், மூலப்பிரித்தல் சிரமமின்றி நிறைவேறும்.” என்றார்.
முறையற்ற மக்கள் ஈடுபாடு
வேளாச்சேரி போன்ற மண்டலத்தில் முழுவதுமாக புதிய ஒப்பந்தப்படி கழிவு மேலாண்மை அமலில் உள்ள பகுதிகளில், கழிவுகளை எவ்வாறு பிரிக்க வேண்டும் என கூறப்படவில்லை. “சில மாதங்கள் முன், தங்கள் புதிய வெள்ளை வாகனங்களில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுகளை சேகரிப்பதை கண்டேன். புதிய வாகனம், புதிய உடை, அவ்வளவு தான். இது வரையில் மூலப்பிரித்தல் குறித்து எதுவும் கூறவில்லை,” என்கிறார் வேளாச்சேரி ஏஜிஎஸ் காலனியில் வசிக்கும் எஸ். ரத்தினம்.
ஈ-ரிக்ஷா புழக்கத்தில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் மருந்து கடை நடத்தும் கே. மணி கூறுகையில் “ஊசிகள், காலாவதியான மருந்துகள் போன்ற ஆபத்தான கழிவுகளை முறையே அகற்றுவது குறித்து நாங்களே முன்வந்து மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுகிறோம். 99% மக்கள் ஆபத்தான கழிவுகள் குறித்து அறிந்திருக்கவில்லை. மறுசுழற்சி கழிவுகள் பற்றி கூறாவிட்டாலும் அபாய கழிவுகள் குறித்து புதிய பணியாளர்கள் நிச்சயம் எடுத்துரைக்க வேண்டும்” என்கிறார்.
புழுதிவாக்கத்திலும் இதே நிலை தான். இங்கு வணிக நிறுவனங்களிடமிருந்து கழிவுகளை இன்னும் பெற தொடங்கவில்லை. “எங்கள் உணவகத்தில் தினமும் நிறைய கழிவுகள் உள்ளன. அருகாமையில் உள்ள வீடுகளில் கழிவுகள் சேகரிக்கப்பட்டாலும், எங்களிடம் பெறப்படுவதில்லை, நாங்கள் தினமும் இவற்றை முறையாக அருகில் உள்ள தொட்டியில் போடுகிறோம்.” என்கிறார் ஒரியன் உணவகத்தின் உரிமையாளர் சர்தக் நாயர்.
ஆனால், அர்பேசர்-சுமித் ஒப்பந்தப்படி, “ஈ-ரிக்ஷாக்கள் வீடுகள்/வணிக நிறுவனங்களிடம் மட்டும் கழிவுகளை பெற வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலப் பிரித்தலில் குடியிருப்பு சங்கங்களின் அணுகுமுறை குறித்து கேட்கையில் “வேளாச்சேரி உள்பட நகரின் பல பகுதிகளில் குடியிருப்பு சங்கங்கள் பேருக்கு தான் உள்ளது. நகரின் பல பகுதிகளில் தனி அல்லது சிறு குடியிருப்புகள் தான் பெரும்பாலும் உள்ளன. பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் மிக குறைவே. ஆகையால், வீடு வீடாக சென்று மூலப் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த என் போன்ற சிறு சேகரிப்பாளர்களை ஈடுபடுத்தலாம்.” என்கிறார் முஹமத்.
Read more: What will it take to make Chennai’s new waste management system a success?
நகரின் பல்வேறு பகுதிகளில் அரசு சார அமைப்புகளுடன் இணைந்து மூலப் பிரித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி சிறு முயற்சிகளை தொடங்கியுள்ளது. திருவெல்லிக்கேணி போன்ற பகுதிகளில் சில குடியிருப்பு சங்கங்களின் உதவியையும் மாநகராட்சி நாடியுள்ளது.
“ஒவ்வொரு தெருவிலிருந்தும் குறைந்தது ஒருவர் மாநகராட்சி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வர். இதில் கழிவு பிரித்தல் குறித்து விளக்கப்பட்டதோடு, துப்புரவு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தெருவுக்கு ஒருவர் என ஒவ்வொரு தெருவிலும் தூய்மை பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டனர்” என்கிறார், திருவெல்லிக்கேணி அசாரி முட்டு தெருவில் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜே. ரமா.
திட்டத்தை இறுதி படுத்தாத மாநகராட்சி
இது வரை, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி இறுதிபடுத்தவில்லை. “ஆம், நாங்கள் இன்னும் மக்களிடம் இது குறித்து பேச தொடங்கவில்லை. தற்போது திட்ட வடிவ நிலையில் உள்ளது, புதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிக்கான திட்டம் குறித்து மாநகராட்சி வலைதளத்தில் விரைவில் பகிரப்படும்.” என்றார் ஆதம்பாக்கம் அலுவலகத்தை சேர்ந்த அருள் மணி.
உள்ளூர் சேகரிப்பாளர்கள் குறித்து கேட்ட போது “கழிவு பிரித்தல் குறித்து அவர்கள் நன்கு அறிவர், ஆனால் அவர்களை ஈடுபடுத்துவது குறித்து மாநகராட்சி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது, இன்னும் சில மாற்றங்களை அதில் கொண்டு வருவோம். இது மாதிரி ஓட்டம் தான், சரி செய்ய வேண்டியவை குறித்து பொறுத்திருந்து முடிவு எடுக்கப்படும். இதற்கிடையே, பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டு அவற்றைச் சேர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது” என கூறினார் அருள் மணி.
Also read:
- Here is how a Chennai apartment is segregating waste, even during COVID-19
- How this Navi Mumbai residential complex turned ‘zero-waste’
- How RWAs in Gurugram are showing the way out of urban India’s waste crisis
[Read the original article in English here.]
In Sanfracisco, I saw, systematic, most efficient and cost effective way of 100% source segragation and removal with a simple and easily implementable system:
PROCEDURE FOR SEGREGATON AND COLLECTION FROM INDEPENDENT HOUSES
1. In individual houses 3 big syntax like litter bins with lids are kept.
1.a. Black color bin is for garbage or trash
1.b. Green color bin is for kitchen and garden waste
1.c. Blue color bin is for recyclables.
2. In all three bins what items to be thrown are written with pictures in stickers
3. Households segregate and keep waste in above black, green, blue bins
4. Once a week, on prescribed day for the street, these bins are kept on road kerb, early morning or on previous day night. Nobody steals these bins as they are big.
5.a. Blue color Compactor lorry with Hydraulics fork lifts on sides come and lift the blue bin above truck, inverts bin and dumps waste in lorry then compacts inside.
5.b. Similarly green color compactor lorry comes and clears green bin
5.c. Similarly black color compactor lorry comes and clears black bin.
6. The driver then keeps back the emptied bin on same sideway.
7. Only one driver does driving as well as lifting, dumping in lorry, keeping back bin.
7.a. No extra staff accompanies compactor to lift bins
8. Next day, the lorries collect from some other areas in the city.
13. There is huge cost savings with following:
13.a. Since source segragation is done at homes in 3 bins, no much staff required to again sort items in the municipal yard. Savings in yard staff wages 50%
13.b. Since only driver does the work of driving, picking bins, dumping waste, keeping back bins on street kerb, cost of using 4 extra staff with compactor to lift bins is avoided. Savings on lorry staff cost 75%
13.c. Since only once a week comactor comes and picks and empties bins, savings on cost of compactor lorries 85%
13.d. Since no street bins are required, savings on street bins 100%
13.e. Since no mini battery vans are used, savings on garbage carts 100%
SEE SAMPLE YOUTUBE VIDEO
ONLY COMPACTOR LORRY USES ONLY ONE DRIVER AND NO EXTRA STAFF TO LIFT BINS
ONE COLOR COMPACTOR CLEAR ALL SAME COLOR BINS FROM SAME STREET/AREA IN NO TIME.
NO SPILLAGE OF WASTE IN STREETS.
NO STREET BINS.
ALL GARBAGE FROM HOME CLEARED ONCE A WEEK SAVING HUGE MONEY ON LORRIES, STAFF, STREET BINS, CARTS.
https://www.youtube.com/watch?v=KrNAF6aP0qY&ab_channel=ValGerardo
Independent houses also keep compost bins in garden, to compost kitchen waste and fallen dry leaves from garden
PROCEDURE FOR COLLECTION IN APARTMENTS:
1. Each flat keeps 3x2x1 feet small green, blue, green inside flats.
1.a. degradable plastic bags are first kept fitted in above bins
1.b. waste is segregated and kept in above bins
1.c when bin bag is full, they are taken out, tied with tapes in bags, and thrown down through separate chutes with small doors for garbage and recyclables in upper floors
1.d. in ground floor, bags for garbage dropped down are grouped together and handed over to municipal truck. Same way bags with recyclables are collected and handed over.
ALSO SEE
https://constructionexec.com/article/why-garbage-chutes-are-a-must-in-apartments