செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களில், இயற்கையாக அமைந்துள்ள கழுவேலி, உப்பங்கழி நீர்நிலையில், புதிய குடிநீர் நீர்த்தேக்கம் அமைக்க CRZ அனுமதி வழங்கியுள்ளது மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் நெம்மேலி, கிருஷ்ணகாரனை, தண்டலம், பட்டிபுலம், திருப்போரூர், மாமல்லபுரம், சலுவான்குப்பம், பையனூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 4375 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த்துறை, நீர்வளத்துறைக்குச் சொந்தமான இடங்களில் நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 1.655TMC கொள்ளளவு கொண்ட இந்நீர்த்தேக்கம் மேற்கூறிய கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் எனவும் அருகாமை கிராமங்களின் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் எனவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. Map showing components of the Kovalam reservoir. Pic courtesy: Tamil Nadu Water Resources Department. இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை 17.11.2025 அன்று தொழில் நுட்ப வல்லுநர் குழு பரிசீலித்தது. 20.11.2025 அன்று மாநில கடற்கரை மண்டல ஆணையம் விண்ணப்பத்தைை பரிசீலித்து CRZ அனுமதிக்கு பரிந்துரைக்கிறது.…
Similar Story
Chennai
முதல்வர் சீக்கிரம் அடிக்கல் நாட்ட வேண்டும் என்பதற்காக அறிவியல் ஆய்வுகளைப் புறந்தள்ளுவதா?
CRZ clearance has been granted for a new drinking water reservoir in the naturally formed coastal salt marshes in Chengalpattu near Chennai.