Translated by Sandhya Raju
அரசு தலைமை மாற்றம் பல மாற்றங்களையுயும் அதனுடன் கொண்டு வருகிறது. 90-ம் ஆண்டு மத்தியில் ஐடி புரட்சி பெருமளவில் நிகழ்ந்தாலும், மெட்ராஸ் என்று அப்போது அழைக்கப்பட்ட தமிழகத்தின் தலைநகரமான சென்னை, அதற்குறிய பொலிவை பெற்றிருக்கவில்லை. இந்தியாவின் பிற தலைநகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களை ஒப்பிடுகையில் சென்னை பின் தங்கியிருந்தது. மே 1990 நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அப்போதைய முதல்வர் எம் கருணாநிதி, நகரத்திற்கு சென்னை என பெயர் மாற்றி, “சிங்கார சென்னை” என்ற பெயரில் பல திட்டங்களை அறிவித்தார்.
சிங்காரம் என்ற சொல்லுக்கு தமிழில் அழகான / அலங்கார / அழகுபடுத்தப்பட்ட என்று பொருள். நகரத்தை அழகுபடுத்துவதோடு, சாலைகளில் குவிந்த குப்பைகளை அகற்றுவது, போக்குரவத்தையும் சீராக்கும் திட்டத்தை அடக்கி இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. நகரத்தை வாழக்கூடியதாகவும் பயண நட்பாகவும் மாற்ற, இது தான் முதல் படி.
முந்தைய மெகா திட்டங்கள்
1990-ம் ஆண்டு வரை, சாலைகள், தெரு விளக்குகள், நடைபாதைகள் போன்ற மேம்பாட்டுப் பணிகள் மவுண்ட் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே நடைபெற்றன. இதனால், சென்னையின் உட்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் வளர்ச்சி அடையாமலேயே இருந்தன.
வீடுகள், உற்பத்தி நிறுவனங்கள், பிற சேவை நிறுவனங்களிலிருந்து குப்பைகளை சேகரித்து அகற்றுவதற்கான கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல் முறை இல்லை. வீட்டுக் கழிவுகள் தெருவில் வீசப்பட்டு, ஒவ்வொரு தெருவிலும் மலை மலையாக குவிந்து காணப்பட்டன. இதனால், அந்த காலகட்டட்த்தில், நகரத்தில் கொசு தொல்லை அதிகமாக இருந்தது. மிகவும் அசுத்தமான நகர பட்டியலில் சென்னை இரண்டாம் இடம் வகித்ததில் வியப்பில்லை.
மாநகராட்சியும் ஆட்கள் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, செயல்படாத நிர்வாகம் என தத்தளித்தது.
Read more: Pending infra projects worth nearly Rs 3000 crore adding to Chennai’s commute woes
தெருவில் குவிந்த குப்பைகளை அகற்றும் பொறுப்பு சிங்கப்பூர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவே “சிங்கார சென்னையின்” முதல் படியாக அமைந்தது. மக்களின் பங்களிப்பையும் குறிக்கும் விதமாக, ஒவ்வொரு குப்பை தொட்டியிலும் “சிங்கார சென்னை” என்று பொறுத்தப்பட்டிருந்தது. இந்த திட்ட செயல்முறை பலனை தந்தது. மக்களின் பங்களிப்புடன், தூய்மை பட்டியலில் சென்னையில் படி உயர்ந்தது.
பூங்காக்கள் புணரமைப்பு இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும். பரமாரிப்பின்றி கிடந்த பூங்காக்கள் புத்துயிர் பெற்றன. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நேரம், சிறந்த தூய்மை விதிமுறைகள் ஆகியன பூங்காக்களுக்கு அதிகமான மக்கள் வருகையை உறுதி செய்தன. நடை பயிற்சிக்கன பாதை, குழந்தைகளுக்கென தனியாக விளையாட்டு இடம் ஆகியவையும் பூங்காக்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. பொது கழிப்பிடம், பசுமை ஆகியவையும் மேலும் இதற்கு வலு சேர்த்தன.
அதே நேரத்தில், போக்குவரத்தை சீரமைக்க, நெரிசலை தவிர்க்க பல மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
சென்னையின் வளர்ச்சிக்கு ஒரு உத்வேகத்தைக் கொண்டு வந்து, மாநில மூலதனத்தை நவீன, திறமையான மற்றும் வாழக்கூடிய நகரமாக மாற்றுவதற்கான ஒரு லட்சிய முயற்சியை சிங்கார சென்னை 1.0 குறித்தது.
சிங்கார சென்னை 2.0
மே 2021 அன்று பொறுப்பேற்ற புதிய திமுக அரசு சிங்கார சென்னை திட்டத்தை புதுப்பிக்கும் திட்டத்தை அறிவித்தது. அந்த அரசு பதவி இழந்ததிலிருந்து மீண்டும் பதவி ஏற்ற காலம் இடையில், பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் இதில் குறிப்பிடத்தக்கது. பல பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. பாண்டி பஜாரின் பாதசாரி பிளாசா இதில் சிறந்த உதாரணம். நகரத்தினுள் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சென்னை மெட்ரோ பெரும் பங்கு வகித்துள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டங்கள்
- பிராஜக்ட் புளூ – இது நகரின் கடற்கரையை புணரமைப்பதற்கான திட்டம். மேம்படுத்தப்பட்ட கடற்கரை, நீர் விளையாட்டு வசதிகள், மீன் அரங்கம் ஆகியவையுடன் சுற்றுலா மேம்படுத்துவதற்கான நோக்கம் கொண்டது இந்த திட்டம்.
- சுரங்கபாதைகள், மேம்பாலம் ஆகியவற்றை பசுமையாக்குதல்.
- அண்ணா நகர் டவர் பார்க்கில் ராட்டினம் வசதி மற்றும் புணரமைப்பு
- கிண்டி மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களை சீரமைக்கும் திட்டம்.
- குழந்தைகளின் அறிவியல் திறனை தூண்டக்கூடிய அறிவியல் & கணித பூங்காக்கள்.
- விக்டோரியா ஹால் போன்ற புராதான சின்னங்களை முன்னுரிமை கொண்டு புதுப்பித்தல்.
- உள்ளூர் கலாசாரத்தை பறைசாற்றும் விதத்தில் தெருக்கலை மற்றும் இதர கலை மூலம், சென்னையில் கலை மாவட்டம் உருவாக்குதல்.
- செல்லப்பிராணிகள் பூங்கா, அறிவியல் மையம் மற்றும் அதிநவீன பல விளையாட்டு வளாகத்தை உருவாக்குதல்.
- மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்தல்
வளர்ந்த நகரம் என்பது ஏழைகள் கார்களில் செல்வது அல்லாமல், வசதி படைத்தவர்கள் பொது போக்குவரத்தை பயணிக்கும் இடமாக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. இதை சாத்தியமக்குவதே, இந்த திட்டட்தின் நோக்கமாகும்..
கொரோனாவால் மக்கள் முடங்கி கிடந்த நிலையில், இது போன்ற மேம்பாட்டு திட்டங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. ஆதலால் நகரத்தில் ஏற்படவுள்ள மாறுதல்களை மக்கள் ஆர்வமுடன் எதிர் நோக்கியுள்ளனர்.
[Read the original article in English here.]