Translated by Sandhya Raju அண்ணாநகரில் வசிக்கும் ஈ செந்தில் அவர்களுக்கு தன் சிறு வயதில் டவர் பார்க் பற்றிய அனுபவம் இன்றும் பசுமையாய் இருக்கிறது. இன்றும் அண்ணாநகரில் வசிக்கும் இவர், பன்னிரெண்டு அடுக்கு கட்டிட டவர் பார்கில் ஏறி இந்த பகுதி முழுவதையும் காண்பது இளம் பருவத்தில் தொலைக்காட்சியை விட சிறந்த அனுபவம் என்கிறார். இவர் நோவா லைஃப் ஸ்பேஸ் பிரைவேட் லிமிடட் எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார். குழந்தைகள் டென்னிகாய்ட் விளையாடுவதும், முதியவர்கள் நாட்டு நடப்பை அலசுவதும், நண்பர்கள் ஒன்று கூடி அரட்டை அடிப்பதும், தம்பதிகள் சுவாரஸ்யமாக பொழுதை கழிப்பதும் என அண்ணாநகர் டவர் பார்க் எல்லோருக்குமான ஒரு புத்துணர்ச்சி இடமாக திகழ்கிறது. ஆனால், செந்திலை போல் அவருடைய மகன் இங்கு செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சில வருடங்களுக்கு முன், இங்கே ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, டவர் மூடியே உள்ளது. பூங்காவில் உள்ள பசுமையான…
Read moreTAMIL
Translated by Sandhya Raju நம் குடியிருப்பு பகுதியிலுள்ள குடிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்களின் பங்கு மறுக்க முடியாதது. இப்பகுதியில் குடிமை வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், குடிமக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் மேம்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய சங்கங்கள் இல்லாத சூழலில், எவ்வாறு அதை உருவாக்குவது? அதன் அதிகாரங்கள் என்ன? யார் அலுவலக பொறுப்பாளர்களாக முடியும்? துணை சட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன? ஒரு நலச் சங்கத்தை உருவாக்குவது தொடர்பான பொதுவான பல கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த கட்டுரை மூலம் முயற்சித்துள்ளோம். குடியிருப்பு நலச் சங்கம் என்றால் என்ன? அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது? குடியிருப்பு நலச் சங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சுற்றுப்புறத்தில் அல்லது குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்பாளர்களைக் கொண்ட உறுப்பினர்களின் ஒரு அமைப்பாகும். தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம் 1975 - இன் கீழ் இவை பதிவு செய்யப்படும்.…
Read moreTranslated by Sandhya Raju கடந்த ஆண்டு முழுவதும் கோவிட் நோயை எதிர்த்து போராடிய சென்னை வாசிகள், உலகின் மற்ற நாடுகளும் இந்தியாவும் பெரிதும் எதிர்பார்க்கும் கோவிட்-19 தடுப்பூசியை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். முதல் கட்ட தடுப்பூசிக்கு முன்னுரிமை குழுக்களை பதிவு செய்வது, மருத்துவமனைகளில் சோதனை ஒட்ட பயிற்சிகள் என, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகள் மற்றும் சென்னையில் பல அரசு குழுக்கள் இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பிற விவரங்கள் இன்னும் முழுவதுமாக வெளிவராவிட்டாலும், சென்னையில் தடுப்பூசி வழங்கும் பணிக்கு தயார் நிலையில் உள்ளதாகவும், மத்திய அரசு அறிவித்தவுடன் தொடங்கப்படும் எனவும் சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயல் முறை குறித்தும், எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதையும் அறிந்து கொள்ள, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் ஜெ ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் ஆகியவரிடம் உரையாடினோம். சுகாதாரத் துறை செயலர் ஜெ ராதாகிருஷ்ணன் சென்னையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க…
Read more2020 ஆம் ஆண்டு பெரும்பாலும் பலர் வீட்டினுள்ளே கடந்து விட்ட நிலையில், பொது இடங்களின் பயன்பாடு இந்த வருடம் அவ்வளவாக இல்லை என்றே கூறலாம். அரசும் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் தன் முழு கவனத்தையும் செலுத்தியது. இதனிடையே, நிலைமை சற்றே சீராக தொடங்கியதும், சென்னை நகரில் பல திட்டங்கள் மீண்டும் உயிர் பெற்றன அல்லது கவனம் பெற்றன. இதில் குறிப்பிட்ட சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம். அனைவருக்குமான மெகா தெருக்கள் அகலமான நடைபாதைகள், பிராகசமான தெரு விளக்குகள், சைக்கிளுக்கென தனி பாதை, நியமிக்கப்பட்ட பார்க்கிங் வசதி என நகரின் முக்கிய இடங்களில் 426 கி.மீ தூரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தெருக்களை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மெகா தெருக்கள் ஆக உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இந்த திட்டம் செயல் வடிவம் அடைய நீண்ட காலம் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு, அண்ணாநகர், வேளாச்சேரி, மைலாபூர், அடையாறு, நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை என தேர்ந்தெடுக்கப்பட்ட…
Read moreTranslated by Sandhya Raju அகலமான நடைபாதைகள், பிராகசமான தெரு விளக்குகள், சைகிளுக்கென தனி பாதை, நியமிக்கப்பட்ட பார்க்கிங் இடம், ஷாப்பிங் வந்தவர்கள் சற்று ஓய்வெடுக்க பெஞ்சுகள் என பாண்டி பஜாரில் உள்ள தியாகராயா சாலை பல பேருக்கு ஷாப்பிங் அனுபவத்தையே மாற்றி அமைத்துள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் சென்னையில் முதன் முறையாக அமைக்கப்பட்டது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அடுத்தவரை பாதிக்காமல் செல்வதை இங்கு காணலாம். ஆண்டு முழுவதும் மக்கள் கூட்டம் உள்ள இந்த ஷாப்பிங் பகுதியில் இப்படியொரு பாதசாரிகள் பிளாசா இன்றியமையாததாக இருந்தது. மாற்று திறனாளிகள் உபயோகிக்கக் கூடிய நடைபாதைகள், நெறிபடுத்தப்பட்ட பார்க்கிங் ஆகியவை பாதசாரிகளுக்கான திட்டம் கீழ் அமைக்கப்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றது. இருப்பினும், இந்த் திட்டம் செயலுக்கு வந்த ஒரு வருடம் பிறகு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. சில்லரை வர்த்தகம் புரியும் வியாபாரிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளது, வகையற்ற பார்க்கிங், இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு…
Read moreTranslated by Sandhya Raju கே கே நகர் சிவன் பார்க்கில் உள்ள ஸ்கேட்டிங் ரிங் பார்த்ததுமே எட்டு வயது சிறுவன் சரத்திற்கு உற்சாகம் பொங்கும். பொது முடக்கம் அமலுக்கு வந்த சில மாதம் முன்பு வரை இதில் பயிற்சி பெற்று வந்த சரத், விளையாட்டை மேம்படுத்த ஆர்வமாக காத்திருந்தான். ஸ்கேட்டிங் உபகரணங்களை வாங்க தன் பெற்றோரை வற்புறுத்தி அனுமதியும் பெற்றிருந்தான். ஆனால் சிவன் பார்க்கில் உள்ள ஸ்கேட்டிங் ரிங்கை உபயோகிக்க சமீபத்தில் விதிக்கப்பட்ட கட்டணத்தால் பல சிறுவர்களைப் போல், சரத்தும் பாதிக்கப்பட்டுள்ளான். தற்போது பூங்கா நிர்வாகப் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஸ்கேட்டிங் ரிங்கை பயன்படுத்த 500 ரூபாய் மாதக் கட்டணமாக அந் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதே போல் பல இடங்களில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் உள்ள பாட்மிடன் கோர்ட், ஸ்கேடிங் ரிங்க் ஆகியவற்றை பயன்படுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரத்தில்…
Read moreTranslated by Sandhya Raju நீங்கள் தூக்கி எறியும் வெங்காய தோலோ அல்லது பிளாஸ்டிக் துண்டோ எங்கே செல்கிறது என சிந்தித்ததுண்டா? நாம் தூக்கி எறியும் ஒவ்வொரு குப்பைக்கும் நாம் கண்டிராத நீண்ட பயணம் உண்டு. இந்த பயணத்தை அறிந்து கொண்டால், நாம் ஒவ்வொருவரும் கழிவு மேலாண்மைக்கு மேலும் சீரிய பங்காற்ற முடியும். தினந்தோறும் 5600 டன் குப்பையை சென்னை காண்கிறது. இந்த குப்பையின் கதையை அறிய, சென்னை மாநகராட்சி செயல்படுத்தும் திடக்கழிவு மேலாண்மையை பற்றி பார்ப்போம். கழிவுப்பொருட்களை மக்கும், மக்காத, அபாயகரமான கழிவுகள் மற்றும் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்க திடக்கழிவு துணை சட்டம் கூறுகிறது. படம்: CAG குப்பைகளை (மக்கும் அல்லது ஈர குப்பைகளுக்கு பச்சை தொட்டி, மக்காத குப்பைக்கு நீல தொட்டி, மருத்துவ கழிவுகளுக்கு சிவப்பு தொட்டி) வகை பிரித்து அப்புறப்படுத்தும் பொறுப்பான குடிமகன்/ள் நீங்கள் என்றால், அதன் பயணத்தில் சற்று…
Read moreTranslated by Sandhya Raju கிழக்கு கடற்கரை சாலையில் திட்டமிடப்பட்ட மழை நீர் வடிகால் திட்டம் , அங்குள்ள குடிமக்களின் எதிர்ப்பால் பின்னடைவை சந்தித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்திலும் இந்த பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்று வாதாடும் இவர்கள், இங்குள்ள மணல் மண் இயற்கையாகவே பாதுகாப்பு அரணாக அமைகிறது என்கின்றனர். 270 கோடி ரூபாய் மதிப்பில் கொட்டிவாக்கம் - உத்தண்டி இடையே வடிகால் அமைக்கும் இந்த பணி, ஜெர்மன் வளர்ச்சி வங்கியான KfW வின் நிதியதவி பெற்றது. இங்கு வசிக்கும் மக்களின் எதிர்ப்பால் திட்டம் கிடப்பில் போடப்பட்டு, சென்னை உயர்நீதி மன்றத்தில் திட்டத்தை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு, சென்னையின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் வடிகால் கட்டும் முதன்மை திட்டம் அமைக்கப்பட்டது. இதன் படி,…
Read moreTranslated by Sandhya Raju சில தினங்களுக்கு முன், சென்னையில் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதி குறித்து எழுதியிருந்தோம். 2018 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும் பகுதிகள் என இவற்றை அடையாளப்படுத்தியிருந்தது. வெள்ளத்தை தடுக்க மாநகராட்சி என்ன செய்துள்ளது? வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் (SWD) நெட்வொர்க்கை வட சென்னையில் கொசஸ்தாலாறு பகுதியிலும், தென் சென்னையில் கோவளத்திலும் கட்டுமான பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. ஆசிய வங்கியின் நிதியுதவி பெற்றுள்ள இந்த திட்டத்தின் கீழ் மழை வெள்ளத்தை தடுக்க சாலையோரம் வடிகால் அமைத்தல், நீர்நிலைகளை புத்துயிர் செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. அக்டோபர் 29-ம் தேதி பெய்த கடும் மழையில் கொரட்டூர் சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ள காட்சி படம்: அவினாஷ் டி சென்னை மாநகராட்சி உள்கட்டமைப்பு திட்டங்களை தவறாக நிர்வகிக்கிறது என்பதற்கு பல நிகழ்வுகள் உள்ளன, இதுவே வெள்ள அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. உதாரணமாக,…
Read moreTranslated by Sandhya Raju சொத்தில் முதலீடு செய்வது என்றுமே வீண் போகாது என்பது பலரின் எண்ண ஒட்டமாகவே உள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரை, சென்னை மற்றும் அதன் புறநகரில் 57 வீட்டு தளவமைப்புகளுக்கு (4461 மனைகள்) சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சி.எம்.டி.ஏ) அனுமதி அளித்துள்ளது. இதில் முதலீடு செய்ய பலர் ஆர்வம் காட்டியிருப்பர். முதல் முறை சொத்து வாங்குபவர்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கும். சொத்து வாங்கும் முன் ஆவணங்களை சரி பார்த்து முறையான அனுமதி உள்ளதா, அனைத்து சான்றுகளும் உண்மையானதா என சரி பார்த்தல் மிக அவசியம். சொத்து வாங்குவது குறித்த சந்தேகங்களை போக்க ஒரு வழிகாட்டி இதோ உங்களுக்காக: சொத்து வாங்கும் முன் எந்தந்த ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்? தாய் பத்திரம் மற்றும் விற்பனை பத்திரம் சொத்து உரிமையாளரின் விவரங்கள் அனைத்தும் தாய் பத்திரத்தில் இருக்கும். முதல் உரிமையாளார் முதல் தற்போதைய…
Read more