TAMIL

Translated by Sandhya Raju கடந்த சில வார காலமாகவே, சென்னையில் தொற்று அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 23-ம் தேதி, 3842 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிய வடிவை பெற்று கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலையில், பல நகரங்களில் படுக்கை, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்களுக்கோ, அவர்கள் குடும்பத்தினருக்கோ தொற்று ஏற்பட்டால் அடுத்து என்ன செய்வது, எப்படி சமாளிப்பது போன்ற பயம் ஏற்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. நேர விரயமின்றி, எவ்வாறு மருத்துவ வசதி பெறுவது, படுக்கை பெற தாமதமானால் என்ன செய்ய வேண்டும் போன்ற உறுதி செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இங்கே தொகுத்துள்ளோம். முதலில் அறிந்து கொள்ள வேண்டியவை: தொற்று அறிகுறிகள், பரிசோதனை மையங்கள் இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, தலை வலி, உடல் வலி, வாசனை மற்றும் சுவையின்மை…

Read more

Translated by Sandhya Raju கடந்த் 11-ஆம் தேதி 2124 தொற்று எண்ணிக்கையுடன், சென்னை 2000 அளவை எட்டியுள்ளது . கோவிட்-19 இரண்டாவது அலை மிக தீவிரமாக சென்னையில் பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி, தேவையின்றி பொது வெளியில் செல்வது என கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தொற்று மேலும் பரவாமல் இருக்க, புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை வழிமுறைகள், தனிமைப்படுத்துதல், தடுப்பூசி நெறிமுறைகள் ஆகியவற்றை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியதை இங்கே தொகுத்துள்ளோம்: பரிசோதனை மற்றும் மருத்துவமனை அனுமதி: கோவிட்-19 பரிசோதனையை எங்கு மேற்கொள்ளலாம்? அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஐசிஎம்ஆர் அங்கீகரித்துள்ள தனியார் பரிசோதனை மையம் ஆகியவற்றில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்லலாம். சுயமாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரையிலோ இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம்.  RT-PCR பரிசோதனை மேற்கொள்ள மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையில்லை. சரியான நேரத்தில் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். படம்: லாஸ்யா சேகர் கோவிட்-19…

Read more

Translated by Sandhya Raju கடந்த ஒரு மாதமாக சென்னையில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி நிலவரப்படி, 3711 புதிய தொற்றுகளும், 17 உயிரழப்புகளும் நேர்ந்துள்ளன. 28005 பேர் சிகிச்சை பெற்றும் 1967 குணமடைந்தும் உள்ளனர். பெருந்தொற்று பரவத் தொடங்கி ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது, புதிய தொற்றில் 70% மாகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் உள்ளது, இது புதிய தொற்று அலை உருவாகி உள்ளதை காட்டுகிறது. இந்த சூழலில், தமிழகத்திலும் தொற்று வேகமாக பரவி வருவதால், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, புதிய கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது. சென்னைக்கு பயணிக்கும் முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை: யார் ஈ-பாஸ் பெற வேண்டும்? பிற நாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் சென்னைக்கு வருபவர்கள் கட்டாயம் ஈ-பாஸ் பெற வேண்டும். ஆனால், கர்நாடாகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியிலிருந்து வருபவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தினுள் பயணிக்க ஈ-பாஸ்…

Read more

Translated by Sandhya Raju இன்னும் சில நாட்களில் நம் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களை நாம் தேர்ந்தெடுக்கவுள்ளோம். அண்டை மாநிலம் கர்நாடகாவில் உள்ளது போல் இரு சட்டமன்றம்- அதாவது ஒரு சட்டமன்றம் மற்றும் ஒரு சபை என்றில்லாமல், தமிழகம் கீழ் சபையை மட்டுமே கொண்டுள்ள ஒற்றை சட்டமன்றம் ஆகும். தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர், எம்.எல்.ஏ.க்கள் என அழைக்கப்படும் இவர்கள் சட்டமன்றத்தை உருவாக்குகிறார்கள். மக்களால் ஜனநாயக முறைப்படி இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சட்டங்களை உருவாக்குதல், மாநில அரசை பொறுப்புக்கூற வைத்தல் மற்றும் பொதுச் செலவுகளுக்கு ஒப்புதல் அளித்தல் ஆகிய பொறுப்புகள் எம்.எல்.ஏ.க்களுக்கு உள்ளன. வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, சென்னையில் உள்ள 25 தொகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தனது தொகுதிக்கு சிறப்பான பிரதிநிதித்துவம் தரக்கூடிய சிறந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முன், ஒரு எம்.எல்.ஏ வின் பொறுப்புகள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். தன்னுடைய தொகுதிக்கும்…

Read more

Translated by Sandhya Raju இயந்திர வேகத்தில் சுழலும் கோட்டுர்புரத்தில், அங்கிருக்கும் மியாவாகி காடு ஒரு புதுவித அனுபவத்தையும் புத்துணர்ச்சியும் அளிப்பதாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வருடத்தை எட்டியுள்ள இந்த நகர்புற காடு, 2019 ஆம் ஆண்டு சுமார் 1600 கழிவுகளை அப்புறப்படுத்தப்படுத்தி உருவாக்கப்பட்டது. 2000-த்திற்கும் மேற்பட்ட பல்வேறு மர வகைகள் இங்கு நடப்பட்டன. தற்போது செம்பருத்தி, பப்பாளி, முருங்கை என இந்த 2211.87 சதுர மீட்டர்** பரப்பளவு பசுமை போர்வையாக காட்சி அளிக்கிறது. மியாவாகி வகை காடுகள் நகரத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கோட்டுர்புரத்தில் முதலில் உருவாக்கப்பட்டு பின், சோளிங்கநல்லூர் , முகலிவாக்கம், ஒமந்தூர், அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கிரீன்வேஸ், மாதவரம் என 20 இடங்களில் சென்னை மாநகராட்சி நகர்புற காடுகளை உருவாக்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள் பொது மக்கள் மற்றும் துவக்கம், இன்னர் வீல் ஆஃப் மெட்ராஸ் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை…

Read more

Translated by Sandhya Raju மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு மார்ச் மாதம் 1-ம் தேதி இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசிக்கான பதிவு தொடங்கப்பட்டது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, பொது மக்கள் கோ-வின் வலைதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும் தடுப்பூசி பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே கோ-வின் செயலி உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more: Interview: When and how will Chennai get the COVID vaccine? எவ்வாறு பதிவு செய்வது? நேரடியாக சென்று பதிவு செய்ய முடியுமா? என்னென்ன அடையாள அட்டை தேவை? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த கட்டுரை மூலம் பதிலளிக்க முயற்சித்துள்ளோம். கோவிட் தடுப்பூசி. படம்: வி. நரேஷ் குமார். பதிவு செய்யும் நடைமுறை என்ன? அருகாமையில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கோ-வின் வலைதளமே அங்கீகரிக்கப்பட்ட பதிவு…

Read more

Translated by Sandhya Raju “உலர் கழிவு மேலாண்மை பணியில் நீண்ட காலமாக உள்ளோம் ஆனால் எங்களுக்கு ஊதியமோ மரியாதையோ இல்லை" என்கிறார் வேளாச்சேரியில் கழிவுகளை சேகரிக்கும் நயன் முஹமத். அந்தந்த பகுதிகளில் கழிவு அப்புறப்படுத்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். எந்தவொரு பாதுகாப்புமின்றி அவர்கள் பணி முறைபடுத்த வாய்ப்புகளின்றி தொடர்ந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தோ-ஸ்பானிஷ் கூட்டு முயற்சியில் "அர்பேசர்-சுமீத்" நிறுவனம் கழிவு மேலாண்மை ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து, இந்த முறையும், நகரத்தின் பல பகுதிகளில் உள்ள கழிவு சேகரிப்பவர்கள் நிராகரிப்பை எதிர்கொள்கின்றனர். புதிய கழிவு மேலாண்மை ஒப்பந்தம் பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை என்ற அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஏழு மண்டலங்களில் கழிவு மேலாண்மையை இந்த நிறுவனம் பெற்றது. மக்கும் கழிவுகள் (காய்கள், மீந்த உணவு போன்றவை), மக்காத கழிவுகள் (பிளாஸ்டிக், பால் கவர், பேனா போன்றவை) மற்றும் அபாயகரமான வீட்டு கழிவுகள்…

Read more

Translated by Sandhya Raju முப்பத்தியோரு வயது பொறியாளர் எம் பி அழகு பாண்டிய ராஜா, ஜனவரி 25-ம் தேதி அன்று இந்தியாவின் முதல் நகர பதுமுறைகாணல் அதிகாரியாக (City Innovation Officer) நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் மென்பொருள் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்த அழகு பாண்டிய ராஜா, தாய் நாட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்ற உந்துதலால், சென்னை திரும்பினார். இந்தியன் ஸ்மார்ட் சிட்டி ஃபெலோ (Indian Smart City Fellow) பணியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆகியவற்றிற்கு புது தீர்வுகளை கொண்டு வந்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் மற்றும் வருவாய் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி ஆகியோரின் முயற்சியே புதுமுறைகாணலுக்கான ஒரு பிரிவினை உருவாக்க காரணம் என்கிறார். இந்த புதிய பதவியில் அவரது பங்கு குறித்தும், பதுமுறைகாணல் அதிகாரியாக பொது மக்களுடனான ஈடுபாடு குறித்தும் அவரிடம் சிட்டிசன் மேட்டர்ஸ் உரையாடியது. சென்னையின்…

Read more

Translated by Sandhya Raju அண்ணாநகரில் வசிக்கும் ஈ செந்தில் அவர்களுக்கு தன் சிறு வயதில் டவர் பார்க் பற்றிய அனுபவம் இன்றும் பசுமையாய் இருக்கிறது. இன்றும் அண்ணாநகரில் வசிக்கும் இவர், பன்னிரெண்டு அடுக்கு கட்டிட டவர் பார்கில் ஏறி இந்த பகுதி முழுவதையும் காண்பது இளம் பருவத்தில் தொலைக்காட்சியை விட சிறந்த அனுபவம் என்கிறார். இவர் நோவா லைஃப் ஸ்பேஸ் பிரைவேட் லிமிடட் எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார். குழந்தைகள் டென்னிகாய்ட் விளையாடுவதும், முதியவர்கள் நாட்டு நடப்பை அலசுவதும், நண்பர்கள் ஒன்று கூடி அரட்டை அடிப்பதும், தம்பதிகள் சுவாரஸ்யமாக பொழுதை கழிப்பதும் என அண்ணாநகர் டவர் பார்க் எல்லோருக்குமான ஒரு புத்துணர்ச்சி இடமாக திகழ்கிறது. ஆனால், செந்திலை போல் அவருடைய மகன் இங்கு செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சில வருடங்களுக்கு முன், இங்கே ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, டவர் மூடியே உள்ளது. பூங்காவில் உள்ள பசுமையான…

Read more

Translated by Sandhya Raju நம் குடியிருப்பு பகுதியிலுள்ள குடிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்களின் பங்கு மறுக்க முடியாதது. இப்பகுதியில் குடிமை வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், குடிமக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் மேம்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய சங்கங்கள் இல்லாத சூழலில், எவ்வாறு அதை உருவாக்குவது? அதன் அதிகாரங்கள் என்ன? யார் அலுவலக பொறுப்பாளர்களாக முடியும்? துணை சட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன? ஒரு நலச் சங்கத்தை உருவாக்குவது தொடர்பான பொதுவான பல கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த கட்டுரை மூலம் முயற்சித்துள்ளோம். குடியிருப்பு நலச் சங்கம் என்றால் என்ன? அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது? குடியிருப்பு நலச் சங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சுற்றுப்புறத்தில் அல்லது குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்பாளர்களைக் கொண்ட உறுப்பினர்களின் ஒரு அமைப்பாகும். தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம் 1975 - இன் கீழ் இவை பதிவு செய்யப்படும்.…

Read more