TAMIL

Translated by Sandhya Raju தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டண உயர்வை அறிவித்தது. இதனால் மின் கட்டணம் 50% அதிகமாகலாம் என கூறப்பட்டது. எந்த அளவு மின் கட்டணம் உயரும் என்ற கவலையில் மக்கள் உள்ள்னர்.  இதனை சமாளிக்க என்ன நடவடிக்களை நாம் மேற்கொள்ளலாம் என குறிப்புகளை உங்களுக்காக இங்கே பகிர்கிறோம். முதல் 100 யூனிட் இலவசம் என்றாலும், 400 யூனிட் வரை ஒவ்வொரு 100 யூனிட்டிற்கும் அடிப்படை கட்டணம் ₹2.50-லிருந்து ₹4.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 400 யூனிட் முதல் 500 யூனிட் வரை, ₹6 ஆகவும், 1000 யூனிட் வரை ஒவ்வொரு 100 யூனிட்டிற்கும் ₹1 முதல் ₹2 வரை உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான புது கட்டணம். தகவல்: TANGEDCO Read more: Did your July electricity bill shock you? Here is…

Read more

Translated by Sandhya Raju “தங்கள் வாழ்கை நிலை உயரவும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி பெறவும், தமிழகத்தின் பல இடங்களிலிருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் மக்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் மக்கள், பெரும்பாலும் நதிக்கரை ஒரமாக தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றனர். திடீர் திடீரென இவர்கள் குடிசைகள் தீப்பற்றி எரிவதால், இந்த இடம் “திடீர் நகர்” என அழைக்கப் பெற்றது.” சைதாபேட்டை திடீர் நகரில் வசிக்கும் 60 வயது எஸ் கதிர்வேலன்.  ஆனால், ராஜா அண்ணாமலை புரத்தில் வசிக்கும் எல். விஜயா வேறொரு காரணத்தை முன் வைக்கிறார். “இங்குள்ள பெண்களின் அணிகலங்கள் திடீர் திடீரென காணாமல் போவதாலும், அடிக்கடி குடித்துவிட்டு இங்குள்ள மக்கள் தகராறில் ஈடுபடுவதாலும், இந்த பெயர் காரணம் இருக்கலாம் என கூறுகிறார்.” பெயர் காரணம் எதுவாக இருப்பினும் அங்கு நடக்கும் திடீர் சம்பவங்கள் இவர்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதாக உள்ளது. திடீர் நகர் சென்னையில் பல பகுதிகளில் இருந்தாலும்,…

Read more

Translated by Sandhya Raju விளிம்பு நிலை மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள், சிக்கலான சட்ட அமைப்பில் சிக்கிக்கொள்ளும்  நிலையை வெகுவாக வெளிக்கொணர்ந்தது ஜெய்பீம் திரைப்படம். செங்கனி என்ற கதாபாத்திரத்திற்கு ஆதரவாக சந்துரு என்ற வழக்கறிஞர் பணியாற்றினார்.    ஆனால், நிஜ வாழ்க்கையில்  இவர்களின் நிலை என்ன?   அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் அல்லது மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் உதவி பெற ஒவ்வொரு நபருக்கும் அரசியலைப்புப் படி உரிமை உள்ளது.  “இலவச சட்ட உதவி என்பது அரசு அளிக்கும் தொண்டு அல்ல. இது அனைத்து மக்களுக்கான  அடிப்படை உரிமை,” என்கிறார் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் எஸ் ஜோதிலக்ஷ்மி, 2019-20 ல் இலவச சட்ட உதவி வழக்கறிஞராக இவர் நியமிக்கப்பட்டார்.  அரசு வழங்கும் சேவை குறித்து பலரருக்கு விழிப்புணர்வு இல்லை, என இந்தக் கட்டுரைக்காக நாம் சந்தித்த வழக்கறிஞர்கள் கூறினர்.  அதன் நோக்க பயனை…

Read more

Translated by Sandhya Raju “தமிழக அரசே தமிழக அரசே, சாக வேண்டுமா நாங்கள்? அப்போ தான் பார்ப்பாயா?” சென்னை குடி நீர் & கழிவு நீர் பெரு வாரியம் தலைமை அலுவலகத்தின் முன்பு தொடர்ந்து  10 நாட்கள் 1500 தற்காலிக தொழிலாளர்கள் எழுப்பிய கோஷம் இது. தனியார் ஒப்பந்தகாரர்களுக்கு ஒவுட்சோர்ஸ் முடிவை எதிர்த்தும் இவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் இவர்கள் போராட்டம் நடத்தினர்.  கடந்த சில ஆண்டுகளாக வேகமான வளர்ச்சியை சென்னை அடைந்தாலும், பல முக்கிய துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் அல்லது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. முக்கியமான அத்தியாவசிய பணிகளான திடக்கழிவு மேலாண்மை, குடி நீர் வினியோகம், சுகாதாரம், மின்வாரியம் என பல துறைகளில் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிகிறார்கள்.   சென்னை குடி நீர் வாரிய தற்காலிக பணியார்களின் போராட்டம் சரியான நேரத்தில் சாலையில் மண் அகற்றப்பட்டு, கழிவு நீர் அடைப்புகள் அகற்றப்பட்டு,குடி நீர்…

Read more

Translated by Sandhya Raju நீண்ட வரிசையில் வண்ணமிகு குடங்கள், காத்திருகக்கும் மக்கள் கூட்டம், இவை 2019 கோடை காலத்தில், சென்னையின் பல வீதிகளில் காணப்பட்ட காட்சி. அதன் பிறகு, நல்ல மழை, போதிய நீர் சேகரிப்பு ஆகியவை இருந்தாலும், விளிம்பு நிலையில் வாழும் மக்களின் தண்ணீர் விநியோகம் என்னவோ மாறா காட்சியாகவே உள்ளது.  தண்ணீர் பிரச்சனை எல்லா காலங்களிலும் எங்களுக்கு உள்ளது, கோடை காலத்தில் இன்னும் மோசமாக இருக்கும்” என்கிறார் புளியந்தோப்பில் வசிக்கும் 32 வயது கமலா. அதிகாலை 5 மணிக்கு தன் வேலையை தொடங்கும் இவர் ஐந்து பேருக்கு சமைத்து, மூன்ரு பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்ப வேண்டும். காலை 9.30 மணிக்கு தண்ணீர் லாரி சத்தம் கேட்டதும் குடத்துடன் சாலைக்கு செல்கிறார்.  “இது தான் எனது தினசரி வேலை, தண்ணீர் லாரி வரும் நேரத்தை பொருத்தே எனது மற்ற வேலைகளை செய்ய வேண்டும். நகரத்தில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும்…

Read more

Translated by Sandhya Raju கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த 58 வயது ஜி கண்ணையன் தீக்குளித்த காட்சி சென்னை நகரையே உலுக்கியது. கட்டாய வெளியேற்றத்தை எதிர்த்து மே 8-ம் தேதி நடந்த போராட்டத்தில் இந்த விபரீத முடிவை எடுத்த அவர் மறுநாள் 90% தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகாரர்கள் என கூறி வெளியேற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தவரை கண்டித்து அந்தப்பகுதியை சேர்ந்த பலரைப் போலவே, இவரும் போராட்டத்தில் ஈடுபட்டார். ஏப்ரல் 29-ம் தேதி முதல் இதுவரை 116 வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது, மேலும் 159 வீடுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட போராட்டம் நீர்நிலை மறுசீரமைப்பு, மெட்ரோ ரயில் பணிகள், சாலை விரிவாக்கம், அழகுபடுத்தும் பணிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் ஆகியவை சென்னையில் 'கட்டாய வெளியேற்றப்படுவதற்கு' முக்கிய காரணங்களாக உள்ளன. இருப்பினும், கோவிந்தசாமி நகர் வெளியேற்றம் இதில் தனித்து நிற்கிறது. கோவிந்தசாமி நகரில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று…

Read more

Translated by Sandhya Raju 'அழுக்கு, குப்பைகள், அதிக அமிலத்தன்மை கொண்ட கறுப்பு நீர், துர்நாற்றம்' இப்படித்தான் ஓட்டேரி நல்லாவை அதன் ஒட்டி வாழும் மக்கள் வர்ணிக்கிறார்கள். சென்னயில் உள்ள 32 இயற்கையான கால்வாய்களில் ஒட்டேரி நல்லாவும் ஒன்றாகும். பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ள நீரை வெளியேற்றும் உள்ளூர் நீர்வழி அமைப்பாக முக்கிய பங்காற்றிய இந்த கால்வாய், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டும் இடமாக மாறிவிட்டது. 2015 வெள்ளம் இன்றும் இங்குள்ள மக்கள் மனதில் பீதியை உண்டாக்குகிறது. ஆனால், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், 10.2 கி.மீ நீண்ட ஒட்டேரி நல்லா கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெள்ள பாதிப்பை சந்திக்கின்றனர். ஓட்டேரி நல்லாவின் முக்கியத்துவம் கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு ஆகிய ஆறுகள் சென்னை வழியாக பாய்கின்றன. கடற்கரைக்கு இணையாக ஓடும் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு ஆகியவற்றை இணைக்கிறது. கொசஸ்தலையாற்றின் துணை நீர்ப்பிடிப்புப் பகுதியான கிழக்கு-மேற்கு…

Read more

Translated by Sandhya Raju கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் மண்டலம் 9-ல் குமரன் எஸ் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், மாநகராட்சியின் சுகாதார பணியாளர்கள் அல்லது தனியார் நிறுவனமான அர்பேசர் சமித் தற்போது இந்த வேலையை மேற்கொள்வதால், குமரன் போன்ற கழிவுகள் சேகரிப்பாளர்களின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது. "பத்து ஆண்டுகளாக இந்த வேலை பார்க்கிறேன். இது போன்ற ஒரு நிலையை இது வரை சந்தித்ததில்லை. பெருந்தொற்று காலத்தில், நல்ல மனம் படைத்த சிலரின் உதவியால் சமாளிக்க முடிந்தது. இப்போது வேலைக்கு திரும்பினாலும், முன்பை விட கால் பங்கு தான் சம்பாதிக்க முடிகிறது", என்கிறார் குமரன். சராசரியாக ஒரு நாளுக்கு ₹600 முன்னர் ஈட்டிய நிலையில், இன்று வெறும் ₹150-200 மட்டுமே கிடைக்கிறது. "முக்கால்வாசி கழிவுகள் மாநகராட்சி பணியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுவதால், எங்களுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை" என்கிறார். கழிவு சேகரிப்பில், அதிலும் ஈரமற்ற கழிவுகளை சேகரிப்பதில், மாநகராட்சி…

Read more

Translated by Sandhya Raju முதல் முதலாக பாலின நிகர் மேம்பாடு மற்றும் அதற்கான கொள்கை ஆய்வு மையம் சென்னையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது. மாநகராட்சி, போக்குவரத்து மற்றும் அரசின் பிற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி, பாதுகாப்பான, ஒருங்கிணைந்த நகரமாக சென்னையை மாற்ற இந்த மையம் வழிவகுக்கும். சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மா நகராட்சி ஆணையர், ககந்தீப் சிங் பேடி, காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், உலக வங்கி பிரதிநிதிகள், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து கழகங்களின் பல்வேறு துறை அதிகாரிகள், உறுப்பினர்கள் பல்வேறு இலாப நோக்கற்ற மற்றும் சிவில் சமூக அமைப்புகள் கலந்து கொண்டனர். சென்னை நகர கூட்டுத் திட்டம் மற்றும் நிர்பயா திட்டத்தின் ஒரு பகுதியாக பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிப்பன் கட்டிடத்தில் இந்த ஆய்வு மையம் செயல்படும். பாலின கொள்கை மையத்தின் நோக்கம் பாலின நிகர் மேம்பாடு…

Read more

Translated by Sandhya Raju மார்ச் 18 அன்று தமிழக நிதித் துறை அமைச்சர், பழனிவேல் தியாகராஜன் 2022-23 ஆண்டுக்கான மாநில பட்ஜட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். நிலையான சுற்றுச்சூழல், போக்குவரத்து இணைப்பு அதிகரித்தல், தமிழ் கற்றலை மேம்படுத்தல், சேவை அணுகலில் கவனம் செலுத்துதல் ஆகியவை முக்கிய இடம் பெற்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, நெடுஞ்சாலை விரிவாக்கம், வெள்ளத் தடுப்பு, பேரிடர் தயார்நிலை, பருவ நிலை மாற்றம், நகரத்தின் பசுமை போர்வையை அதிகரித்தல் ஆகியவை சென்னைக்கான ஒதுக்கீட்டில் இடம்பெற்றுள்ளன. தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் தியாகராஜன். படம்: Wikimedia Commons by Avenuesmadurai Read more: Sustainability needs a people-centric approach; is smart city Chennai geared to that? போக்குவரத்து நகருக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும் சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பட்ஜெட்டில் பல முன்முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. சாலை விரிவாக்கம், உயர்த்தப்பட்ட காரிடார் மற்றும் கிரேடு…

Read more