Translated by Krishna Kumar தேன்மொழி (புனை) அவள் பெயர், பாந்தியன் சாலையில் ஒரு துப்புரவு பணியாளி. ஒரு தேய்ந்து போன துடைப்பம், அலுமினிய கூடை மற்றும் கையுறைகள், அவளின் ஆயுதங்கள் . அவற்றின் நிலை, அவள் சென்னையின் நெருக்கடியான சாலைகளை சுத்தம் செய்யும்போது எதிர்கொள்ளும் இன்னல்களின் பற்பல கதைகள் சொல்லும். அன்று, நவம்பர் 28ஆம் தேதி, ஒரு புதன் கிழமை சற்று தொய்வடைந்து பெருக்கிக்கொண்டிருக்கும்போது பேசுகையில் "அடுத்தமாதம் இந்த வேலையில் நான் இருப்பேனா? என்று சந்தேகம்" என்று கூறி சலித்து பெருமூச்சு விட்டாள். சென்னை மாநகராட்சியால் நியமனம் செய்யப்பட்ட 8,246 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களில் ஒருவர் அவர். நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் வேலை பார்த்தால் ரூ 362 கிடைக்கும். இதில் வார விடுமுறை கிடையாது, PF கிடையாது. தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு மண்டலங்களில் குப்பை மேலாண்மையை தனியார்மயப்படுத்தும் திட்டத்தால் தேன்மொழி போன்ற பலர் மனமுடைந்துள்ளனர்.…
Read moreWe need 2 min of your time!
Tell us what matters to you—and help make our stories, data, workshops, and civic resources more useful for you and your city—in this short survey.