Translated by Sandhya Raju தினந்தோறும் காலையில் நம் வீட்டு வாசலில் போடப்படும் செய்தித்தாளை எடுக்கையில், அது எவ்வாறு நம்மை வந்தடைகிறது என சிந்திப்பதில்லை. உலகின் நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள, பத்திரிக்கை விநியோகிஸ்தர்கள் மற்றும் அதைச்சுற்றி இயங்கும் சங்கலித்தொடர் பெரும் பங்கு வகிக்கின்றன. புயல், மழை, வெய்யில் எதையும் பொருட்படுத்தாமல் , ஏன் இந்த பெருந்தொற்று காலத்திலும் செய்த்தித்தாள் விநியோகம் தொடர்ந்தது. செய்தியை தரும் பத்திரிக்கையாளர்களுக்கு நிகராக விநியோகிஸ்தர்களும் முக்கியம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, செய்தி விநியோகத் துறையில் உள்ளவர்களுக்கு எப்போதுமே அரசாங்க நலன்கள் அல்லது அங்கீகாரம் கிடைப்பதில்லை. 2500 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், துணை முகவர்கள்/விநியோகஸ்தர் மற்றும் விநியோக பணியாளர்கள் பலவீனமான சமூக பாதுகாப்பு வலையில் உள்ளனர். எந்தவொரு நலவாரியத்திலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை, அல்லது தமிழக அரசாங்கத்தால் எந்தவொரு திட்டத்திற்கும் கருதப்படவில்லை. "ஐந்து வருடம் முன், விநியோக பணியாளர் பணியில் இருக்கும் போது சாலை விபத்தில் இறந்தார். ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட ஏற்பாடு…
Read moreWe’re at 27 out of 100 donors. Will you be the next to contribute to our civic engagement work?