Translated by Sandhya Raju
இதோ தீபாவாளி பண்டிகை வந்துவிட்டது. மேடு பள்ளங்கள், போகுவரத்து நிறைந்த சென்னை வீதிகளில் இப்பொழுது வண்ண விளக்குகள் மின்னுகின்றன. தெரு முனைகளில் பட்டாசு கடைகள், துணிகடைகளில் கூட்டம், புது படங்கள், கோயில்களில் சிறப்பு பூஜைகள் என பண்டிகை களைகட்ட துவங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னதாகவே சிலர் வரவேற்க துவங்கியுள்ளதில், ஆங்காங்கே லக்ஷ்மி வெடி சத்தமும் கேட்கத் துவங்கியுள்ளது. இந்த வெடிச் சத்தம் இன்னும் அதிகமாகும் என்பதில் ஐயப்பாடில்லை.
இந்த உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொள்ளுமா என்றால் சந்தேகமே, அதற்கு முக்கிய காரணம் – சத்தம். பட்டாசுகள் எழுப்பும் காதைப் பிளக்கும் சத்தம், ஒலிப்பெருக்கிகள் ஆகியவை மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பிராணிகள் இடையே பீதியை கிளப்புகிறது.
கடந்த ஆண்டுகளில், இந்த பட்டாச்சு சத்தத்தால், நிறைய வளர்ப்பு பிராணிகள் தங்களின் இருப்பிடத்தை விட்டு ஒடியுள்ளது. 2017 ஆம் ஆண்டில், மடிப்பாக்கத்தில் வீதியில் பற்ற வைக்கப்பட்ட பட்டாசால் மாட்டு கொட்டகை தீப்பிடித்து, ஐந்து மாடுகள் உயிரோடு எரித்தன, மூன்று மாடுகள் பலத்த காயமும் அடைந்தன.
“கடந்த ஆண்டும் இதே நிலை தான், வளர்ப்பு நாய்களும் பூனைகளும் தங்களின் இருப்பிடத்தில் இருந்து ஒடின. ஜனவரி மாதம் வரை நீடிக்கும் இந்த பண்டிகை கொண்டாட்டத்தால், பிராணிகளுக்கு கஷ்ட காலம் என்றே சொல்ல வேண்டும்”, என்கிறார் ப்ளூ கிராஸ் அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ். பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வால் ஒரளவு இந்த நிலை, இந்த வருடம் மாறும் என எண்ணுவதாக கூறுகிறார்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, ஒலி மாசுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். இதுசெல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, ஒலி மாசு என்பது தலை வலி, நரம்பு சம்பந்தபட்ட பிரச்சனைகளை உண்டாக்கும் பொது சுகாதார பிரச்சனை.
நீங்கள் எப்போது புகார் செய்யலாம்?
அனைத்து மாநிலங்களிலும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இங்கு கடைபிடிக்கப்படும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு மட்டும் சிறு விதிவிலக்கு ஏற்படுத்தப்பட்டது. இதன் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காலை ஆறு முதல் ஏழு மணி வரை மற்றும் மாலை ஏழு முதல் எட்டு மணி வரை இரண்டு நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. இந்த நேரத்தை தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டால், புகார் அளிக்க முடியும்.
பட்டாசு மட்டுமின்றி, ஒலி பெருக்கி, ஜெனரேட்டர், கட்டுமானம், பொது பணி, வீட்டில் உபயோகிக்கப்படும் குளிர்சாதனப்பெட்டி ஏற்படுத்தும் சத்த என பிற வழிகளிலும் அளவுக்கு அதிகமான சத்தம் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் சட்டம் என்ன சொல்லுகிறது என பார்ப்போம்.
ஆதாரம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ஒலி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் 1981 ஆம் ஆண்டின் காற்று (மாசு கட்டுபடுத்தல்) சட்டம் படி, வெவ்வேறு இடத்தை பொருத்து ஒலி அனுமதி அளவு வேறுபடும்.
இடம் | அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு (காலை மற்றும் இரவு சராசரியாக) | யாரிடம் புகார் அளிக்கலாம் |
குடியிருப்பு பகுதி | 55 dB மற்றும் 45 dB | அருகில் உள்ள காவல் நிலையம் |
தொழிற்சாலை | 75 dB மற்றும் 70 dB | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் |
வணிகம் (தி நகர் போன்ற வணிக இடங்கள்) | 65 dB மற்றும் 55 dB | அருகில் உள்ள காவல் நிலையம் |
ஒலி தடை செய்யப்பட்ட இடங்கள் (மருத்துவமனை, பள்ளி சாலைகள்) | 50 dB மற்றும் 40 dB | அருகில் உள்ள காவல் நிலையம் |
*காலை: 6 am to 10 pm ; இரவு: 10 pm to 6 am
ஆதாரம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ஆனால், ஒரு சாதாரண குடிமகன், டெசிபல் சத்தத்தை எவ்வாறு அளக்க முடியும்? எப்பொழுது புகார் அளிக்க வேண்டும் என எப்படி முடிவு செய்வது?
“இது மிகவும் சுலபம். பொறுக்க முடியாத அளவு நீண்ட நேரம் ஒலி நீடித்தால் அது சத்தம் என வரையுறுக்கப்படும். ஒலி மாசுக்கு எதிராக புகார் அளிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது,” என்கிறார் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுசூழல் பொறியாளர் பி எஸ் லிவிங்க்ஸ்டன்.
புகார் அளிக்கும் முறை மற்றும் பின்தொடரும் வழிமுறை
- நிகழ்வுக்கு (கோயில் விழா, தெருக்கூத்து ஆகியன) காவல் நிலையத்தில் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என முதலில் சரி பார்க்க வேண்டும்.
- தொடர்ந்து வெடி வெடித்தல், ஜெனரேட்டர் எழுப்பும் சத்தம் போன்றவை பொது தொல்லை சட்டம் கீழ் வரும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 268 கீழ் முதல் குற்றப்பத்திரிக்கை அல்லது தின கையேட்டின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த பிரிவின் படி, காயம் ஏற்படுத்துதல், பொது மக்களுகு ஆபத்து அல்லது எரிச்சலை உண்டு பண்ணுதல் ஆகியவை பொது தொல்லை ஏற்படுத்துதல் கீழ் இடம்பெறும்.
- காவல் துறை அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அதை நிறுத்த வேண்டும். ஒலி எழுப்பான், நிகழ்வை தொடர்ந்து நடத்த தடை, அபராதம் (200 ரூபாய் வரை) என சூழலுக்கு ஏற்ப நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ள முடியும்.
The original article in English can be found here.