உங்கள் வீட்டிற்கு வழங்கப்படும் தண்ணீர் விசித்திரமான வாசனையை வீசுகிறதா அல்லது உலோக சுவையை வெளிப்படுத்துகிறதா? சென்னையில் குடிநீர் மாசுபடுவது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மக்கள் தங்கள் குழாய்களில் இருந்து தரமான தண்ணீர் மட்டும்தான் வருகிறதா என்று கேள்வி எழுப்ப இது ஒரு இது சரியான நேரம்.
ஐஐடி-மெட்ராஸ் நடத்திய ஆய்வில், சென்னையில் உள்ள 75% வீடுகளில் உள்ள தண்ணீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் பாக்டீரியாவான ஈ.கோலையால் (E. coli) மாசுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி போன்ற முக்கிய நீர்நிலைகளில் ஃபாரெவர் கெமிக்கல்ஸ் (forever chemicals or pre- and polyfluoroalkyl substances (PFAS)) எனப்படும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதை ஐஐடி-மெட்ராஸின் மற்றொரு ஆய்வில் கண்டறிந்துள்ளது.
அருகிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து (WTP) எடுக்கப்பட்ட மாதிரிகளும் மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.. இந்த PFAS என்பது கல்லீரல் பாதிப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய செயற்கை இரசாயனங்களின் குழுவாகும்.
சென்னையில் நீர் மாசுபாடு தொடர்பான இதுபோன்ற கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தக் கூற்றுக்களை நிராகரித்து, ஏரிகள் உட்பட சென்னையின் குடிநீர் ஆதாரங்கள் நுகர்வுக்கு பாதுகாப்பானவை என்று கூறியுள்ளது.
இருப்பினும், பல சென்னை மக்கள் ‘தங்கள் வீடுகளில் குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானதா?’ என்று சந்தேகிக்கின்றனர்.
சென்னையில் நீர் மாசுபடுவதற்கு என்ன காரணம்?
ஆனால் முதலில், தண்ணீரை பாதுகாப்பற்றதாக மாற்றுவது எது? சென்னையில் நீர் மாசுபடுவதற்கான முதன்மையான ஆதாரங்கள் குப்பைகளை கொட்டுவதும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகளில் விடுவதும் ஆகும். இருப்பினும், இவை மட்டுமே இதற்குக் காரணம் அல்ல.
மார்ச் 7, 2024 தேதியிட்ட நீர்வளத் துறையின் அரசு உத்தரவின்படி (GO), சென்னையில் உள்ள 51 வருவாய் துணைப்பிரிவுகளில் (அல்லது ஃபிர்காக்கள்/Firkas) இரண்டு மட்டுமே, அதாவது புழல் மற்றும் சோழிங்கநல்லூர் மட்டுமே நிலத்தடி நீர் எடுப்பதற்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. மீதமுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்படுகிறது அல்லது மாசுபடும் அபாயம் அதிகமாக உள்ளது.
இது, நாம் எடுக்கும் அளவுக்கு நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புவதில்லை என்பதைக் குறிக்கிறது.
சென்னையில் பாதுகாப்பான நிலத்தடி நீர் எடுக்கும் இடங்களில் ஒன்றாக சோழிங்கநல்லூர் குறிப்பிடப்படுகிறது. சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் சிறந்த நிலத்தடி நீர் மட்டம் இருக்கலாம், ஆனால் அந்த நீர் குடிக்க ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம் என்று முந்தைய அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார் பூவுலகின் நண்பர்களை சேர்ந்த சுற்றுச்சூழல் பொறியாளரும் ஆர்வலருமான பிரபாகரன் வீர அரசு குறிப்பிடுகிறார்.
சென்னைய கடற்கரையோர பகுதியாக இருப்பதும் நீர் மாசுபாட்டிற்கு பங்களிக்கிறது. உதாரணமாக, கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறிப்பிடத்தக்க அளவைவிட அதிகமாக இருப்பதாக, பெசன்ட் நகரில் வசிக்கும் ஆர்வலரான டிடி பாபு குறிப்பிடுகிறார். சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் (CMWSSB) நெம்மேலி உப்புநீக்கும் ஆலையிலிருந்து அடையாறு, நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீரை வழங்குகிறது. “இருப்பினும், இந்த நீரில் உள்ள total dissolved solids (TDS)-யின் அளவு பெரும்பாலும் அதிகமாக இருப்பதால், அது நுகர்வுக்கு தகுதியற்றதாகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.
Read more: Pollution and indiscriminate development threaten Madambakkam Lake’s survival
உங்கள் தண்ணீர் மாசுபட்டுள்ளதா என்பதை எப்படி அடையாளம் காண்பது?
தண்ணீர் மாசுபாட்டை வெறுமனே பார்த்து அடையாளம் காண்பது எப்போதும் எளிதல்ல. உதாரணமாக, மாதம்பாக்கம் ஏரியிலிருந்து சிட்லபாக்கத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீர் மாசுபட்டுள்ளதை சிட்லபாக்கத்தில் இருந்த மக்கள் அறியவில்லை. இதற்க்கு காரணம் அந்த நீரில் நிறம் அல்லது வாசனையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காட்சி குறிகாட்டிகள் ஏதும் இல்லை. அனால், தனியார் ஆய்வக சோதனைகள் மூலம் கழிவுநீர் மாசுபாட்டின் அறிகுறியான மல கோலிஃபார்ம் பாக்டீரியா (fecal coliform bacteria) இருப்பதைக் கண்டறிந்தன சிட்லப்பாக்கத்தை சேர்ந்த மக்கள்.
தண்ணீர் எடுக்கப்படும் கிணறுகள் ஆகாய தாமரைகளால் சூழப்பட்டிருப்பதை உள்ளூர்வாசிகள் கவனித்தபோது ஆரம்ப எச்சரிக்கைகளில் ஒன்று வந்தது. கழிவுநீரால் நீர் மாசுபடும்போது இந்த தாவரங்கள் பொதுவாக வளரும். கூடுதலாக, நிலத்தடி நீர் தொட்டிகளில் அடிக்கடி வண்டல் படிவு குவிவது குடியிருப்பாளர்களை நீரின் தரத்தை சோதிக்க தூண்டியது.

மற்றொரு வழக்கில், திருவான்மியூரில் உள்ள வால்மீகி நகரில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு வழங்கப்படும் உப்பு நீக்கப்பட்ட தண்ணீரில் உப்பின் சுவை கூடுதலாக இருப்பதைக் கவனித்தனர். அதே தண்ணீரைப் பயன்படுத்தும் மின் சாதனங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவதையும் அவர்கள் கவனித்தனர். இது போன்ற சம்பவங்கள் தண்ணீரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சோதனை செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
Read more: Why residents in northern parts of Chennai throw away pots of water every week
நீரின் தரத்தை சோதிப்பதற்கான முக்கிய அளவுருக்கள்
நீர் நுகர்வுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த, அது குறிப்பிட்ட இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு வகைக்கும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை CMWSSB வலைத்தளத்தில் காணலாம். பொதுவாக, நீரின் தரம் பின்வரும் அளவுருக்களுக்கு சோதிக்கப்படுகிறது:
இயற்பியல்: நிறம், மணம்
வேதியியல்: pH, TDS, மொத்த கடினத்தன்மை
உயிரியல்: E. coli மற்றும் மொத்த கோலிஃபார்ம்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இருப்பு.
CMWSSB அதன் தண்ணீரை எத்தனை முறை சோதிக்கிறது?
BIS 10500:2012 இன் படி, CMWSSB பொது நீரூற்றுகள் மற்றும் வீட்டு இணைப்புகளிலிருந்து தினமும் சுமார் 300 நீர் மாதிரிகளை சோதிக்கிறது. மழைக்காலங்களில், இந்த எண்ணிக்கை 500-600 மாதிரிகளாக அதிகரிக்கிறது. தண்ணீரின் நிறம், மணம், கலங்கல் தன்மை, pH அளவுகள் மற்றும் TDS போன்ற பிற அளவுருக்களுக்கு சோதிக்கப்படுகிறது.
கோரிக்கையின் அடிப்படையில், CMWSSB கால்சியம், மெக்னீசியம், மொத்த குளோரைடு, எஞ்சிய குளோரின், அம்மோனியா, நைட்ரைட், ஃப்ளூரைடு, சல்பேட், இரும்பு, ஆல்புமினாய்டு நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பாக்டீரியாலஜி சோதனைகள் ஆகியவற்றின் பகுப்பாய்வு சோதனைகளையும் வழங்குகிறது.
“தண்ணீரின் தரம் திருப்திகரமாக இல்லை என்று CMWSSB கண்டறிந்தால், கள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. சீரமைப்பு பணிகள் முடிந்ததும், அந்த தண்ணீர் குடிக்க தகுதியானதா என்று சோதிக்கப்படுகிறது,” என்கிறார் CMWSSB இன் நிர்வாக இயக்குனர் டாக்டர் டிஜி வினய்.
இருப்பினும், இந்த செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மை தேவை என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. சிட்லபாக்கம் ரைசிங்கைச் சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன், குடிநீரின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு உறுதியளிக்க, இந்த சோதனைகளின் முடிவுகளை அவர்களின் பொது வலைத்தளத்தில் பதிவேற்றுமாறு CMWSSB-ஐ வலியுறுத்துகிறார்.
உங்கள் தண்ணீரில் மாசுபாடு உள்ளதா என எப்படி பரிசோதிப்பது?
சென்னை மாநகராட்சியின் (GCC) எல்லைக்குள் வசிப்பவர்கள் CMWSSB-யின் தர உறுதிப் பிரிவு மூலம் தங்கள் தண்ணீரைப் பரிசோதித்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்ய, தனிநபர்கள் இரண்டு லிட்டர் குடிநீரை ஒரு சுத்தமான வெள்ளை கொள்கலனில் சேகரித்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள CMWSSB ஆய்வகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சோதனைக் கட்டணங்கள் பின்வருமாறு:
தனிப்பட்ட வீடுகள்/அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீருக்காக பயன்புதும் தண்ணீர் | ரூ.1450/- (ஜிஎஸ்டி தவிர்த்து) |
வணிகம் – குடிநீருக்காக பயன்புதும் தண்ணீர் | ரூ.2000/- (ஜிஎஸ்டி தவிர்த்து)/ஒரு மாதிரிக்கு |
நீர் மாதிரி(அ) பாக்டீரியாவியல் பகுப்பாய்வு (மொத்த கோலிஃபார்ம்கள்)(ஆ) ஈ.கோலி | ரூ.400/-ரூ.800/- (ஜிஎஸ்டி தவிர்த்து)/ஒரு மாதிரிக்கு |
கழிவு நீர் சோதனை (கழிவுகள் மட்டும்) | ரூ.2000/- (ஜிஎஸ்டி தவிர்த்து)/ஒரு மாதிரிக்கு |
கழிவு நீர்(அ) BOD (உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை)(ஆ) COD (வேதியியல் ஆக்ஸிஜன் தேவை) | ரூ.800/- (ஜிஎஸ்டி தவிர்த்து)/ஒரு மாதிரிக்குரூ.800/- (ஜிஎஸ்டி தவிர்த்து)/ஒரு மாதிரிக்கு |
CMWSSB தவிர, சென்னையில் தனியார் ஆய்வகங்களும் நீர் சோதனை சேவைகளை வழங்குகின்றன. மேற்கொள்ளப்படும் சோதனைகளின் வகையைப் பொறுத்து செலவு மற்றும் நடைமுறைகள் மாறுபடும்.
உங்கள் தண்ணீரில் மாசு இருப்பது கண்டறியப்பட்டால் என்ன நடக்கும்?
சிட்லபாக்கம் குடியிருப்பாளர்கள் தங்கள் தண்ணீரை பரிசோதித்து முடிவுகளை வெளியிட்டபோது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டதால், மாசுபட்ட நீர் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
தனிப்பட்ட சோதனை முடிவுகள் எப்போதும் உடனடி பெரிய அளவிலான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காது என்றாலும், உங்கள் தண்ணீர் பாதுகாப்பற்றது என்பதை அறிந்துகொள்வது, பாட்டில் அல்லது வடிகட்டிய தண்ணீருக்கு மாறுவது அல்லது சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவும்.