கோவிட் தடுப்பூசி: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

கோவிட் தடுப்பூசி இரண்டாம் கட்டமாக முதியவர்கள் மற்றும் பிற நோய் உடையவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி பெற நீங்கள் தகுதியானவரா? எவ்வாறு இதற்கு பதிவுசெய்துகொள்ள வேண்டும்?

Translated by Sandhya Raju

மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு மார்ச் மாதம் 1-ம் தேதி இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசிக்கான பதிவு தொடங்கப்பட்டது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, பொது மக்கள் கோ-வின் வலைதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும் தடுப்பூசி பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே கோ-வின் செயலி உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more: Interview: When and how will Chennai get the COVID vaccine?


எவ்வாறு பதிவு செய்வது? நேரடியாக சென்று பதிவு செய்ய முடியுமா? என்னென்ன அடையாள அட்டை தேவை? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த கட்டுரை மூலம் பதிலளிக்க முயற்சித்துள்ளோம்.

கோவிட் தடுப்பூசி. படம்: வி. நரேஷ் குமார்.

பதிவு செய்யும் நடைமுறை என்ன?

அருகாமையில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கோ-வின் வலைதளமே அங்கீகரிக்கப்பட்ட பதிவு தளம் ஆகும். பொதுமக்கள் இந்த வலைதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும், செயலி மூலம் பதிவு செய்ய அனுமதியில்லை.

அலைபேசி எண்ணை பதிவு செய்தவுடன் ஓடிபி எண் அனுப்பப்படும். படம்: இந்திய அரசு.

கோ-வின் வலைதளத்தில் பதிவு செய்கையில், அலைபேசி எண் கேட்கப்படும், இந்த எண்ணிற்கு ஓடிபி எண் அனுப்பப்படும்.

இரண்டாம் கட்ட தகவலாக அடையாள அட்டை விவரங்களை கொடுக்க வேண்டும். படம்: பவானி பிரபாகர்.
  • ஒடிபி எண் சரி பார்த்த பின், பதிவு பக்கத்திற்கு வலைதளம் எடுத்துச்செல்லும். இதில் அடையாள அட்டை (கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்), பிறந்த தேதி போன்ற தங்களின் சொந்த விவரங்களை பொது மக்கள் அளிக்க வேண்டும். இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதற்கான மருத்தவ அத்தாட்சியை எடுத்துச் செல்ல வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் அளித்த பிறகு, வலைப்பக்கத்தில் கீழ் வலது பக்கத்தில் உள்ள “Register” பட்டனை கிளிக் செய்யவும்.
ஒரே அலைபேசி உள்ள இன்னொருவரை பதிவு செய்ய, ‘add’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். படம்: இந்திய அரசு
  • அனைத்து விவரங்களை அளித்த பிறகு, பதிவு செய்தவரின் விவரங்களை பார்க்க முடியும். ஒரே அலைபேசி உள்ள மூன்று பேர் (அதிக பட்சமாக நான்கு பேர்) வலைப்பக்கத்தில் கீழ் வலது பக்கத்தில் உள்ள “Add More” பட்டனை கொண்டு பதிவு செய்ய முடியும்.
  • ‘Calendar’ அல்லது “schedule appointment” மூலம் தடுப்பூசி போடும் தேதியை தேர்ந்தெடுக்கலாம்.
  • தங்களின் இடம், மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை பூர்த்தி செய்து அருகாமையில் உள்ள தடுப்பூசி மையத்தை தேர்ந்தெடுக்கலாம்.
  • “Search” பட்டன் கொண்டும் தடுப்பூசி மையங்களை தேடலாம்.
  • தேர்ந்தெடுத்த மையத்தில், அடுத்து உள்ள தடுப்பூசிக்கான தேதி, நேரத்தை பார்க்கலாம்.
  • தேவைப்பட்டால், தேதியை பின்னர் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு பதிவிட்ட அலைபேசி எண்ணைக் கொண்டு “Reschedule” ஆப்ஷனை பயன்படுத்தி தேதியை மாற்றிக் கொள்ளலாம்.

Read more: COVID vaccines: Citizens need better communication and information


ஒமந்தூர் தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசி பதிவு சரிபார்க்கப்படும் காட்சி. படம்: பவானி பிராபகர்.

நேரடியாக சென்று பதிவு செய்ய முடியுமா?

ஆம். அருகாமையில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு (நகர்ப்புற சமூக சுகாதார மையங்கள் அல்லது தனியார் மருத்துவமனைகள்) ஆதார், வாக்கு அட்டை, வாகன உரிம அட்டை, பென்சன் அட்டை போன்ற தகுந்த அடையாள அட்டையுடன் சென்று நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

45 வயதுக்கு மேல் இணை நோய்கள் உள்ளவர்கள் அதற்கான மருத்துவ ஆதாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

நோய்வாய் பட்ட 95 வயதுக்கு மேல் உள்ள மிக மூத்த குடிமக்களுக்கென சிறப்பு முகாம்கள் ஏதும் ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிடவில்லை.

தடுப்பூசி போடும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை?

தடுப்பூசி போடும் முன் தங்களது குடும்ப மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நலம். ஆன்டிகோகுலண்ட் மருந்துகளை உட்கொள்பவர்கள் தடுப்பூசி போடும் மூன்று நாட்கள் முன்னும், போட்ட அன்றும் பின் அடுத்த நாளும் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நலம்.


Read moreGet vaccinated, do not lower guard: What doctors are telling us


சென்னையில் எங்கு தடுப்பூசி போடலாம்?

அரசு மருத்துவமனைகள் தவிர்த்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 761 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் கோவிட் தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ளது.

அரசு மையங்கள்

  • நகர்ப்புற சமூக சுகாதார மையங்கள், சென்னை. முழு பட்டியல் இங்கே
  • சமூக நோய்கள் மருத்துவமனை (சி.டி.எச்)
  • கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி.
  • ராயப்பேட்டை அரசு மருத்துவமனை
  • சென்னை ஒமந்தூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 
  • சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி

தனியார் மையங்கள்

எண்மையம்தொடர்பு விவரம்
1பொது சுகாதாரம் மற்றும் நலன்புரி சங்கம்Dr பி என் சோமசுந்தரம்
72999 50359
2அப்பாசாமி மருத்துவமனைஆனந்த் சுதன்
63793 50953
3சம்பத் நர்சிங் ஹோம்சந்திரலேகா 
94440 80578
4ஃபெயித் மல்டி-ஸ்பெஷாலிடி மருத்துவமனைதீபன் ராஜ்
94441 57426
5சூரியா மருத்துவமனை, சாலிகிராமம்Dr எஸ் ஆனந்த் குமார்
81225 32487
6எக்சலன்ட் கேர் சூப்பர் ஸ்பெஷாலிடிDr சாந்தியா
98400 58474
7தலசீமியா நல மருத்துவமனைDr எம் வெங்கடதேசிகாலு
98410 70249
8பிராஷாந்த் மருத்துவமனை, வேளாச்சேரிDr முத்துகுமரன்
98408 44668
9அடையாறு பிஎம் மருத்துவமனைDr ஷன்முகசுந்தர்
88381 04445
10பிளூம் ஹெல்த்கேர்Dr ரிஜா
96000 11115
11ராதாத்ரி நேத்ராலயா, தி நகர்Dr வசுமதி வேதாந்தம்
94426 31370
12எச் ஜி மருத்துவமனை இளங்கோ
72999 35712
13முத்து மருத்துவமனைஇந்துமதி
99623 77477
14சக்தி மருத்துவமனைஜோதி
97909 32323
15பவித்ரா மருத்துவமனைஜோதி
98403 99993
16Dr ராய் மெமோரியல் புற்றுநோய் மருத்துவமனைகவிதா
94440 58906
17எம்.என். கண் மருத்துவமனை பி கவிதா
98423 40409
18ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைகாவியா
88268 77708
19மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளைகுமார்
72998 88830
20சுந்தரம் மருத்துவ அறக்கட்டளைமங்கை
97513 99001
21பத்மினி நர்சிங் ஹோம், சேத்துபட்டுமகேந்திரன்
97910 23518
22குமரன் மருத்துவமனை, கீழ்பாக்கம்சாம் ஸ்டீபன் ராஜ்
99400 54344
23அப்போலோ குழந்தைகள் மருத்துவமனைகால்ஸ்வீலர் தாஸ்
98419 73909
24ஜெம் மருத்துவமனைஜெய் கணேஷ்
94873 20000
25சி எஸ் ஐ கல்யாணி பொது மருத்துவமனைஜெயந்த்
98404 11877
26எம் ஆர் மருத்துவமனைமகேஷ்
93810 06488
27கே.வி.டி. ஸ்பெஷாலிடி மருத்துவமனைமீனாக்ஷிசுந்தரம் 
94444 08237
28நோபல் மருத்துவமனைநிகில்
85089 99999
29அப்போலோ கிரீம்ஸ்ராஜேஷ் கன்னா
99439 94488
30வி.எஸ். மருத்துவமனைரமேஷ் 
94444 08400
31காஞ்சி காமாஷி குழந்தைகள் நல மருத்துவமனைரமேஷ் கிருஷ்ணன்
87544 26447
32பாரதிராஜா மருத்துவமனைரிச்சர்ட்
98401 12410
33விகேர் மருத்துவமனைசெந்தில் 
96770 00099
34Dr மேத்தா மருத்துவமனை, சேத்துபட்டுவெங்கடேஷ்
98400 76779
35சிஎஸ்ஐ ரெய்னீ மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைசுபாஷினி
98404 11877
36பிரைம் இந்தியன் மருத்துவமனை பி லிட்கிரிபிரியா
99655 83140
37பில்ராத் மருத்துவமனை, ஷெனாய் நகர்ஜெய பிரகாஷ்
97909 74664
38லைஃப்லைன் மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைரேனுகா
98406 33331
39சிம்ஸ், வடபழனிசுதா
98401 38383
40முருகன் மருத்துவமனை, கீழ்பாக்கம்அமலா
98407 17032
41சென்னை சிறுநீரகம் மற்றும் ரோபாட்டிக்ஸ் நிறுவனம், ஓ.எம்.ஆர்காயத்ரி
96262 19328
42நியூ ஹோப் மெடிகல் சென்டர்கலைசெல்வி
99655 33140
43அப்போலோ ஸ்பெஷாலிடி மருத்துவமனைநசீமா
98419 73909
44தன்னார்வ சுகாதார சேவை மையம், தரமணிசிவசங்கரி
98410 48487
45KKR ENT மருத்துவமனை விமலா 
98842 91020
46லைஃப் மெட் மருத்துவமனை94441 32006
47சென்னை நேஷனல் மருத்துவமனைபார்த்தசாரதி
95435 91388
48மெட்ராஸ் ENT ஆராய்ச்சி அறக்கட்டளைபிரகாஷ்
98407 33366
49நிச்சானி மருத்துவமனை ராயபுரம்பிராஷந்தி
94444 61597
50எம்ஜிஎம் மருத்துவமனைரஃபிக்
96000 48805
51Dr. அகர்வால் கண் மருத்துவமனைராஜேஷ்
94444 48621
52பில்ராத், சென்னைரவி
98405 33667
53அப்போலோ ஸ்பெக்ட்ரா, ராயபுரம்சக்திகுமரன்
98419 73909
54லக்ஷா மருத்துவமனைசெந்தில்
95000 54797
55கவேரி மருத்துவமனை, சென்னைஸ்ரீதர்
81449 38757
56அடையாறு கேன்சர் மருத்துவமனைஸ்ரீவித்யா
94440 61914
57மெட்வே மருத்துவமனைசுபாஷினி
98410 26161
58வெங்கடேஸ்வரா மருத்துவமனை, ஆர் ஏ புரம்டொ சரவணன்
93606 08702
59விஜயா மருத்துவமனைவிஜயா
99419 06328
60எம் கே ஸ்பெஷாலிடி கிளினிக்விஜயானந்த்
95662 55772
61ஆயிஷா மருத்துவமனை, கீழ்பாக்கம்சதீஷ் குமார்
95143 19522
62சென் மருத்துவமனை, பெரம்பூர்வெங்கடேசன் 
98402 43833
63அன்னை மல்டிஸ்பெஷாலிட்டி, விருங்கம்பாக்கம் 98404 55366
64அபிஜய் மருத்துவமனை, பெரம்பூர்அபிஜய்
93615 75757
65ஹைகேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைஅஷிதா
73584 85718

தனியார் மருத்துவமனையில் கட்டணம்?

அரசு நிரயணித்த கட்டணமாக ஒரு டோஸ் தடுப்பூசி போட நபர் ஒருவருக்கு 150 ரூபாய் ஆகும். இதற்கு மேல் சேவை கட்டணமாக நபர் ஒருவருக்கு அதிக பட்சமாக 100 ரூபாய் வசூலிக்கலாம். ஆக, தனியார் மருத்துவமனையில் மொத்த கட்டணம் 250 ரூபாய் வரை இருக்கும்.

Also read:

(தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் தகவல் படி)

[Read the original article in English here.]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Similar Story

A poor health report card for Maharashtra ahead of polls: Jan Arogya Abhiyan

Maharashtra govt scores only 23 on 100 in an analysis on health parameters by Jan Arogya Abhiyan, a group of NGOs and health care professionals.

The past five years have seen public health crises, not only locally but globally. Considering this, it is only fair to expect that budgetary allocations for public health would be made more robust. But an analysis shows that the allocation of funds for public health has dropped, though the number of people seeking medical care from the public healthcare system has increased. Experts have pointed out that the public health budget for 2024-2025 is less than that for 2023-2024. Jan Arogya Abhiyan, a group of NGOs and healthcare professionals has released a health report card assessing the performance of the…

Similar Story

Fostering and caring for sick cats: A comprehensive resource guide

Bangalore Cat Squad volunteers highlight the resources available in Bengaluru for animal rescuers, fosters and cat parents.

In part 1 of this series, our Bangalore Cat Squad (BCS) volunteer wrote about her experience caring for her first rescued kitten, Juno. In the second part, we will guide readers on how to foster cats, and the process of adoption and caring for cats with feline distemper/simian parvovirus (SPV).   Therapists often recommend animal companionship, and many people have asked for our help in this regard. Using expert insights, we have developed methods to assess, assist, and enable adoptions for those grappling with mental health issues. Witnessing lives revitalised and spirits uplifted by the profound affection of a small…