Translated by Sandhya Raju
ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில், அவசர பயணம் மேற்கொள்வது பற்றியும், அதற்கான பயண பாஸ் வாங்கும் முறை குறித்தும் பலருக்கு கேள்விகள் உள்ளன. சமூக விலகல் கடைபிடிக்க கடுமையான நடவடிக்கைகள் அமலில் உள்ளது, அவசரத்திற்காக வெளியில் வரும் சூழல் இருந்தாலும் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தடுக்க பாஸ் வழங்கும் முறையும் வரையுறுக்கப்பட்டுள்ளது.
பயண பாஸ் யாரால் வழங்கப்படுகிறது?
இந்த செயல்முறை சென்டரலைஸ் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆணையர்கள் தங்களது தனிப்பட்ட உதவியாளர் (பொது) மூலமும், பெருநகர சென்னை மாநகராட்சிஆணையரும் தகுந்த சரிபார்த்தலுக்கு பிறகு பயண பாஸ் வழங்குவர்.
யாரெல்லாம் பயண பாஸ் வாங்க முடியும்?
தற்போது திருத்தப்பட்ட விதிமுறைகள் படி, மூன்று காரணங்களுக்காக மட்டுமே சென்னை மாநகராட்சி மாற்றுத்திறனாளிகள் உட்பட குடிமக்களுக்கு, பயண அனுமதியை அளிக்கிறது: திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ அவசரநிலை. திருமண மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு, குடும்ப உறுப்பினர் உட்பட பத்து பேருக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி பாஸ் வழங்குகிறது.
பாஸ் கோரி விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம்:
http://covid19.chennaicorporation.gov.in/c19/travel_pass/travel_reg.jsp
ஆவணச் சான்று மற்றும் அடையாளச் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு, விண்ணப்பங்கள் முழுவதுமாக சரிப்பார்க்கப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன.
பயண பாஸ் வழங்க எடுக்கப்படும் நேரம்?
விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் விண்ணப்பதாரர்களுக்கு பதில் அனுப்பப்படும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, பயண பாஸ் பெறுவது குறித்த வழிமுறைகள் பகிரப்படும்; இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது.
மருந்து அல்லது வீட்டு பொருட்கள் வாங்க பாஸ் அவசியமா?
இல்லை, தினமும் தேவைப்படும் பொருட்கள் / மருந்துகளை வரையுறுக்கப்பட்ட நேரத்தில் ( காலை ஆறு மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை) சென்று வாங்கிக்கொள்ளலாம், ஆனால் சமூக விலகலை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். எனினும், தினமும் நாம் இவற்றை வாங்கப்போவதில்லை. ஊரடங்கின் போது அடிக்கடி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
பிற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், என்னுடைய பகுதியில் கிடைக்காத பொருட்களை வாங்க பிற பகுதிகளுக்கு பாஸ் இல்லமால் செல்லலாமா?
இல்லை, கோவிட்-19 தொற்று என்பது ஒரு மருத்துவ அவசர நிலை. உங்கள் பகுதியில் கிடைப்பதை வைத்து சமாளிப்பது நல்லது.
நான் விவசாயி, என்னுடைய விளைநிலத்தில் வேலையாட்களை நியமிக்க, பாஸ் தேவைப்படுமா?
இல்லை, விவசாயம் அத்தியாவசிய சேவையை சேர்ந்தது. குறைந்த வேலையாட்களை நியமித்தல், சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற சுகாதாரத்தை கடைப்பிடிப்பது அவசியம்.
என்னுடைய வேலை நிறுவனத்திற்கு செல்ல பாஸ் தேவைப்படுமா?
இல்லை, ஊரடங்கு அமலில் உள்ள முழு காலத்திலும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், அரசின் அறிவுறுத்தலின் படி அத்தியாவசிய சேவைகள் வழுங்குபவர்கள் மட்டுமே வெளியில் வர முடியும். தடையை மீறி வெளியில் நடமாடினால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மருத்துவரை பார்க்க பாஸ் தேவைப்படுமா?
இல்லை, இது ஊரடங்கு நேரம். பொது மருத்துவம் / தள்ளிப்போட முடிந்த அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை ஏற்படும் போது, அரசு உதவி எண்களை தொடர்பு கொள்ளவும்: 104, கட்டணமில்லா எண்கள்: 1800 120 55550, 044-2951 0400, 044 2951 0500, +91 94443 40496.
ஒரு நிறுவனராக அல்லது ஸ்டார்ட்-அப் நிறுவனராக அத்தியாவசிய அலுவலக உபகரணங்களை பராமரிக்க நிறுவனத்துக்கு செல்ல பயண பாஸ் விண்ணப்பிக்கலாமா?
இல்லை, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி.
மற்ற மாவட்டத்தில் உள்ள என் பெற்றோர்கள்/உறவினர்கள்/மனைவி/குழந்தைகளை காண பயண பாஸ் எப்படி வாங்குவது?
ஊரடங்கு அமலில் உள்ளதால், தலைமை செயலாளர் அளித்துள்ள அரசு விதிப்படி முன்பே நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள் அல்லது இறுதி சடங்குகள் மற்றும் மருத்துவ அவசரநிலைகள் ஆகியவற்றிற்கு மட்டுமே பயண பாஸ்கள் வழங்கப்படும்.
கொரோனா தொற்று இல்லாமல் வேறு காரணங்களால், வேறு மாவட்டத்தில் உள்ள குடும்ப உறுப்பினர் இறக்க நேரிட்டால், செல்ல முடியுமா? அதற்காக எப்படி விண்ணப்பிப்பது?
ஆம், செல்ல முடியும்; விதிமுறைகளின் படி பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.
மற்ற மாவட்டத்தில் உள்ள என் பெற்றோர்கள் தனியாக உள்ளதால், அவர்களுக்கு உதவ செல்ல முடியுமா?
இல்லை. கோவிட்-19 தொற்று ஒரு மருத்துவ அவசர நிலை, உள்ளுரிலேயே உள்ள அம்மா உணவகம் மற்றும் செயல்படும் மற்ற கடைகாள் மூலம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
தனியார் கிளினிக்கில் மருத்துவராக உள்ளேன், நான் பணியை தொடர முடியுமா?
இல்லை, பொது மருத்துவம் / முன்பே வரையுறுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை தொடர்ந்து வழங்க வேண்டும்.
ஆறடி தூரத்தில், தினமும் நடை பயிற்சியோ ஓடுவதோ தொடர்ந்து செய்யலாமா?
இல்லை. பொது இடம் அனைத்திலும் செக்ஷன் 144 தடை உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே அனுமதி உள்ளது.
நான் புலம்பெயர்ந்த தொழிலாளி, என் சொந்த ஊர் செல்ல பயண பாஸ் வாங்க முடியுமா?
இல்லை. நீங்கள் பயணிக்க முடியாது. அவசர நிலைக்கு, அரசு உதவி எண்களை அழைக்கவும்.
கோவிட்-19 24×7 உதவி எண்கள்
|
நான் அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்கிறேன்; மாவட்டத்தினுள்ளோ அல்லது வெளி மாவட்டத்திற்கோ, ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு பொருட்கள் எடுத்துவர என்னுடைய காலி வாகனத்தை அனுப்பலாமா?
ஆம், மாவட்டத்தினுள்ளோ அல்லது வெளி மாவட்டத்திற்கோ, ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் எடுத்துவர உங்களுடைய காலி வாகனத்தை அனுப்பலாம்.
கோவிட்-19 சம்பந்தப்பட்ட மனநல ஆலோசனையை தமிழ்நாடு மருத்துவ உளவியலாளர்களின் சங்கம் வழங்குகிறது.
ஜிசிசி வழங்கும் மனநல ஆலோசனை: 044-26425585 சென்னையில் வாழும் மாற்று திறனாளிகள் வலி நிவாரண ஆலோசனைக்கு கீழுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்:
|
(மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகள் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு காவல் துறையினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது)
[Read the article in English here.]
Bhavani done Good work
Kudos
Madhavan B L