Translated by Sandhya Raju
கோவிட் வைரஸ் தொற்று குறித்து மத்திய அரசு பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. எனினும் தொற்று பராவமல் தடுக்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டாயமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்த சில பொது கேள்விகளும் பதில்களும்:
- பாதுகாவலர்களும், வேலையாட்களும் கடைபிடிக்கவேண்டியவை?
குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வெளியாட்களை இவர்கள் அதிகம் சந்திக்க நேரிடுவதால், இவர்களுக்கு முக கவசம், சோப், போதிய தண்ணீர் வசதி, கிருமி நாசினி ஆகியவற்றை வழங்க வேண்டும். லிஃப்ட் பட்டன்களை கிருமி நாசினியால் துடைப்பது கடினம் என்பதால் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டுமே இதை இயக்க வேண்டும். அவர் இல்லாத சமயத்தில், மக்கள் படிகளில் செல்வது நல்லது என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.
வெளியாட்களிடம் சுவாச சுகாதாரம் (இருமும் போதும், தும்மும் போதும் வாயையும் மூக்கையும் சட்டையாலும், கைக்குட்டையாலும் மூட அறிவுறுத்துதல்), சோப்பால் கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வை இவர்கள் ஏற்படுத்தலாம். விழிப்புணர்வு பதாகைகளை குடியிருப்பு வாயிலில் வைக்கலாம்.
இது குறித்த போஸ்டர்ஸ் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளன: mohfw.gov.in
தமிழ்நாடு அரசு வெளியுட்டுள்ள பிரத்யேக இணையதளம்: www.stopcoronatn.in
நாம் தொடும் பொருட்களான கதவு தாப்பாள், குழாய், கைப்பிடி போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு வேலையாட்கள் அடிக்கடி துடைக்க வேண்டும்; மேலும் மூன்று சதவிகிதம் க்லுடரால்டிஹைட் உள்ள லைசால் போன்றவை பயன்படுத்தவேண்டும், பையோமெட்ரிக் ஆகியவற்றை இந்த தருணத்தில் தவிர்த்திட வேண்டும்.
அடிப்படை வேலை செய்யாத வேலையாட்களுக்கு விடுப்பு அளிக்கலாம்.
- சமூக விலகல் (social distancing) என்றால் என்ன? எப்படி பின்பற்ற வேண்டும்?
ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருப்பதே சமூக விலகல், முக்கியமாக ஒருவர் இருமும் போதோ தும்மும் போதோ இடைவெளி விட்டு இருக்க வேண்டும். ஒருவர் தும்மும் போது அல்லது இருமும் போது வெளிவரும் நீரிலிருந்து தொற்று பரவ வாய்ப்புள்ளது. அச்சமயம் அருகில் இருக்கும் போது, இவற்றை நாம் சுவாசிக்கவும் கூடும், அவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தால், தொற்று பரவ வாய்ப்புள்ளது.
- ஒருவருக்கு கோவிட்-19 தொற்று அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு உதவி எண் அல்லது மத்திய சுகாதார துறையின் 24 மணி நேர உதவி எண் 011-23978046 போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம். மருத்துவமனை செல்லும் போது மூன்று அடுக்கு கொண்ட முக கவசம் அல்லது துணியால் வாயையும் மூக்கையும் மூடி கொள்வது சிறந்தது.
- பொது இடங்களை எவ்வாறு சானிடைஸ் செய்வது?
மூன்று சதவிகித க்லூடரல்ஹைட் கொண்டு சுத்தப்படுத்துதல் நலம். பெரிய அளவில் சானிடைஸ் செய்வது சவாலனது மட்டுமின்றி தேவையற்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- பல வீடுகளில் பணிபுரியும் வீட்டு வேலை செய்பவர்களுக்கான அறிவுரை?
எல்லாருக்கும் பொதுவான ஒரு அறிவுரை – அடிக்கடி கைகளை கழுவுங்கள்.
தொற்று இல்லாத வீடுகளில் வேலை செய்பவர்களுக்கு கிருமி தொற்று வர வாய்ப்பில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். ஆனால், அவர்கள் முக கவசம் உபோயகித்து சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றையும் மீறி தொற்றின் அறிகுறி தெரிந்தால், 14 நாட்கள் தனிமையில் இருத்தல் அவசியம்.
- தனிமைப்படுத்த விரும்புபவர்களுக்கு எவ்வாறு உதவலாம்?
வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம். இது குறித்து மத்திய சுகாதாரத் துறை சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. கழிப்பறை கொண்ட நன்று காற்றோட்டமான அறையில் இருக்க வேண்டும். வேறொரு நபர் அதே அறையில் தங்க நேரிட்டால், ஒரு மீட்டர் இடைவேளி இருத்தல் அவசியம்.
மேலும் கூடுதல் வழிமுறைகளை துறையின் இணையதளத்தில் இங்கு காணலாம்.
தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தொற்று அறிகுறி இருந்தால், அவருடைய நெருங்கிய சொந்தங்கள் வீட்டில் (14 நாட்கள்) தனிமைப்படுத்தப்படுவர். தொற்று விலகும் வரை அல்லது கூடுதலாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.
தனிமையில் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
- ஆல்கஹால் சானிடைசர் அல்லது சோப் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
- தட்டுகள், டம்பளர்கள் போன்ற பொருட்களை பகிர்வதை தவிருங்கள்.
- எப்பொழுதும் முக கவசம் அணியுங்கள். ஒவ்வொரு ஆறு அல்லது எட்டு மணி நேரத்திற்கு முக கவசத்தை மாற்றுங்கள். ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியப்படும் முக கவசங்களை உபயோகித்தல் கூடாது. உடல் நிலை பாதிக்கப்பட்டோர் உபயோகித்த முக கவசங்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். முக கவசங்களை பற்றி மேலும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
- தொற்று அறிகுறி தெரிந்தால் (இருமல்/ஜுரம்/சுவாசக் கோளாறு) உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்தையோ அல்லது 011-23978046 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
https://youtu.be/lrvFrH_npQI
தனிமையில் இருப்பவருக்கு உணவுப் பொருட்கள் தேவைப்பட்டால், தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் இடத்திலேயே கொண்டு சேர்க்கலாம்.
- பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள்?
கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என உலகெங்கும் உள்ள வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பல குடியிருப்புகள் கிளப் ஹவுஸ், பார்டி ஹால் ஆகியவற்றை மூடிவிட்டன
- நீச்சல் குளங்களில் குளிப்பது பாதுகாப்பானதா?
கொரானா வைரஸ் புதிதாக தோன்றியுள்ள தொற்று, இது தண்ணீரில் பரவுமா என இதுவரை மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. சுத்தமான நீச்சல் குளங்களில் குளிப்பது பாதுகாப்பானது என வல்லுனர்கள் தெரிவித்தாலும், அதை தவிர்ப்பது நலம். நீச்சல் குளங்கள் சுத்தப்படுத்துதல் குறித்த அறிவியல் ஆய்வு பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
குடியிருப்பு சங்கங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பெங்களூரு குடியிருப்பு சங்கம் (BAF) வெளியிட்டுள்ள தகவல்:
|
(பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் துறை இயக்குனர் Dr கே குழந்தைசாமி, ராஜீவ் காந்தி தலைமை அலுவலகம், மத்திய சுகாதாரத்துறையின் இணைய தளம், உலக சுகாதார மையம் ஆகிய தகவலின் படி இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
[Read the original article in English here.]