Translated by Sandhya Raju
சென்னையில் மென்பொருள் பொறியாளராக வேலைக்கு வரும் முன், மேகலா குமாரியின் வாழ்க்கைத்தரம் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தனது படிப்பை தொடர இளம் வயதிலேயே பகுதி நேர வேலைக்கு செல்லும் நிர்பந்த்ததில் இருந்தார். சமூக சான்றிதழ் பற்றி அவர் அறிந்திருந்தால் கடினமான சூழலில் வளர நேர்ந்திருக்காது.
“என்னிடம் சமூக சான்றிதழ் இருந்திருந்தால், கல்வி கட்டணத்தில் சலுகை கிடைத்திருக்கும், இலவச சீருடை, புத்தகப்பை கூட கிடைத்திருக்கும்” என்று கூறும் மேகலா தன் பட்டப்படிப்பு போது தான் சாதி சான்றிதழை பெற்றிருக்கிறார்.
மேகலா போன்று ஆயிரக்கணக்கானோர் சமூக சான்றிதழின் முக்கியத்துவத்தை பற்றி இன்னும் அறியாமல் தான் இருக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், பழங்குடி இனத்தவர்கள் ஆகியவர்கள் அரசின் சலுகைகளை பெற சமூக சான்றிதழ் எனப்படும் சாதி சான்றிதழ் மிகவும் அவசியம். மத்திய மற்றும் மாநில அரசுகளில் இப்பிரிவனர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பினை மாணவர்கள் பெற்றிட இந்த சான்றிதழ் அவசியமாகும்.
“கல்வி, வேலை போன்றவற்றில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் மற்றும் பழங்குடி வகுப்பினர்கள் தங்களுக்கான சலுககைகளை பெற சமூக சான்றிதழ் அவசியம். அரசு பணிக்கான தேர்வெழுத சமூக சான்றிதழ் மூலம் பிற்படுத்தப்பட்ட மாணவர்காள் சலுகைகள் இன்றி தேர்வு எழுத முடியும். மேலும் அரசு கல்லூரிகளில் சேர கட்டணமில்லாத விண்ணப்பங்களை பெற முடியும். பொருளாதார சூழ்நிலைக்கேற்ப, மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை மாநில அரசு அளிக்கும் வருட நிதியை பெற முடியும்” என்கிறார் சமூக சேவகர் வி ரகுராம். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இவர் உதவி வருகிறார்.
இந்நிலையில், தகுதியுள்ள பலரிடம் நாம் பேசிய போது, முக்கால்வாசி பேருக்கு சாதி சான்றிதழ் பெறும் நடைமுறை பற்றி தெரியவில்லை என்பதே நிதர்சன உண்மை. சென்னையில் சாதி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இங்கே விவரித்துள்ளோம்.
தமிழகத்தில் சாதி சான்றிதழ் பெற தகுதி வரம்பு என்ன?
தமிழத்தில் வாழும் மூன்று வயது நிரம்பிய மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், பழங்குடி இனத்தவர்கள், இதர பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
சாதி சான்றிதழ் பெறும் நடைமுறை என்ன?
சாதி சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சேவை மையம் அல்லது ஈ-சேவை மையத்திற்கு சென்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். (உங்கள் அருகாமையில் உள்ள மையங்களை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்). சான்றிதழ் தயாரானதும் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். சேவை மையத்தில் இதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனியார் இணைய தள மையங்கள் மூலமாகவும் சமூக சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 250 முதல் 400 ரூபாய் வரை இந்த மையங்கள் கட்டணம் வசூலிக்கின்றன.
தேவையான ஆவணங்களை இணைத்து அருகில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை சரி பார்த்த பின் தாசில்தார் அல்லது துணை தாசில்தார் சான்றிதழை வழங்குவார்.
என்னன்ன ஆவணங்களை இணைக்க வேண்டும்?
ஆன்லைன் மூலம் பதிவு செய்ய, கிராம அதிகாரி கையெழுத்திட்ட கடிதத்தை இணைக்க வேண்டும். குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து இந்த கடிதத்தை கிராம அதிகாரியிடம் பெறலாம்.
இதற்கு கட்டணமாக அறுபது ரூபாய் வசூலிக்க படும்.
இதனுடன், கீழ் கண்ட சான்றிதழ்கள் தேவைப்படும்:
- பெற்றோரின் சமூக சான்றிதழ் (முக்கியமாக தந்தையுடையது)
- பெற்றோரின்அடையாள சான்று
- முகவரி சான்று (ஆதார் மற்றும் குடும்ப அட்டை)
- வயது சான்றிதழ் (பிறப்பு சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு சான்றிதழ்)
- பதிவு செய்த விண்ணப்பம்
விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்கு உட்பட்டவராக இருப்பின், பெயர், தந்தை பெயர், முகவரி மற்றும் சமூகம் ஆகியவற்றை குறிப்பிட்டு உறுதி சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பெற்றோரின் சாதி சான்றிதழ் இல்லையென்றால் விண்ணப்பிப்பது எப்படி?
தந்தையின் சாதி சான்றிதழ் மிகவும் முக்கியம். இது இல்லாத சமயத்தில், தந்தையின் கூட பிறந்தவர்களின் சான்றிதழை சமர்ப்பிக்கிலாம். எந்த வித ஆவணகங்களின்றி, பரிந்துறைக்கப்பட்ட செயல்முறைகள் படி பழங்குடியினியருக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படும்.
என் பெற்றோர்கள் அல்லது உறவினர்களிடம் சான்றிதழ் இல்லாத நிலையில் பழங்குடி வகுப்பை சேர்ந்த என்னால் முதல் முறையாக சான்றிதழுக்கு விண்ணப்பிக்க இயலுமா?
உங்கள் வீட்டில் அருகில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலரை அணுக வேண்டும். ஆவணங்களை சரி பார்த்து, விண்ணப்பம் செய்தவரின் இடம், பணி, உணவு பழக்கம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்.
ஆய்வின் முடிவில் விண்ணப்பதாரர் பழங்குடியை சேர்ந்தவர் என்று வருவாய் அதிகாரி உறுதி செய்த பின், இத்தகவலை தாசில்தார், துணை தாசில்தார், கிராம அதிகாரி ஆகியவரிடம் தெரிவிப்பார். கிராம அதிகாரி மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்து விண்ணப்பதாரர் தங்கும் இடத்தை உறுதி செய்து ஆவணம் வழங்குவார். இதன் பிறகு, தாலுகா அலுவலகத்தில் பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும் பி2 பிரிவு தனது அறிக்கையை தாசில்தாருக்கு வழங்கும். மீண்டும் பழங்குடியினர் வாழும் இடத்திற்கு னேரில் சென்று தாசில்தார் ஆய்வை மேற்கொள்வார்.
வருவாய் அலுவலகம் அனைத்து அறிக்கையையும் சரிபார்த்த பின்னர், சான்றிதழ் வழங்கும். இந்த நடைமுறையின் படி பல பிணை தொழிலாளர்களுக்கு சமூக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கிராம அதிகாரி ஒத்துழைப்பு தரவில்லையெனில் என்ன செய்ய வேண்டும்?
அத்தகைய சூழலில், 18004251333 என்ற ஈ-சேவை மையத்தில் புகார் அளிக்கலாம். தாசில்தார் அல்லது வருவாய் அதிகாரியிடம் எழுத்து மூலமாகவும் புகார் அளிக்கலாம்.
சான்றிதழ் பெற எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்?
பொதுவாக பதினைந்து நாட்களுக்குள் கிடைத்து விடும். பழங்குடியினருக்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் ஆகும். இந்த சான்றிதழ் வாழ்நாள் வரை செல்லுபடியாகும்.
சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வது எப்படி?
உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்தை அணுக வேண்டும். ஈ-சேவை மையத்திலோ அல்லது பொது சேவை மையத்திலோ திருத்தம் மேற்கொள்ள கிராம அதிகாரியிடம் இருந்து முகவரியை உறுதி செய்யும் கடிதம் பெற வேண்டும். மூன்று நாள் முதல் ஒரு வாரத்திற்குள் திருத்தப்பட்ட சான்றிதழை பெற முடியும்.
Read the original in English here.