Translated by Sandhya Raju
இம்மாத தொடக்கத்தில், அண்ணாநகரில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பில் தன்னை முன்பின் அறிந்திறாத நபர் ஒருவர் பின் தொடர்ந்ததாக சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிரீஷ்மா குத்தார், தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். தன்னை இடைமறித்து பேச முயன்றவரை கண்டு கொள்ளாமல் சென்றதாகவும், ஆனால் வேகமாக பின் தொடர்ந்து மீண்டும் இடையூறு செய்ததாகவும் தெரிவித்திருந்தார். காவலர்களிடம் புகார் அளித்ததை அடுத்து அந்த நபரை காவலர்கள் பிடித்து விசாரித்தனர்.
அதன் முழு விவரமும் கீழே:
தன்னுடைய தோழிகள் பலருக்கு இது போன்று இடையூறு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். பொது முடக்கத்திற்க்கு பின் அலுவலகம் செல்ல ஆரம்பித்த மடிப்பாக்கத்தை சேர்ந்த 25 வயது ஆர். ரெஜினா தனது அனுபவத்தை பகிர்ந்தார், “என் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி வசிக்கும் ஒருவர், சில வாரங்களாக பின் தொடர்கிறார், எப்படி அதை தடுப்பது என தெரியவில்லை” என கூறினார்.
பலதரப்பட்ட பெண்கள் இது போன்ற இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். சென்னையில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும், பலர் புகார் அளிக்க முன்வருவதில்லை என்பதையே எந்த தரவுகள் காட்டுகின்றன.
ஆண்டு | பதிவான வழக்குகள் | சைபர் வழக்குகள் |
2018 | 17 | 0 |
2019 | 9 | 3 |
2020 | 10 | 2 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள சென்னை நகர எண்ணிக்கையை பார்க்கையில், பின்தொடர்தலை குறித்தும் காவல் துறை உதவியை நாடுவதின் அவசியத்தை குறித்தும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பின்தொடர்தல்
பயத்தை ஏற்படுத்தக்கூடிய தொடர் பின் தொடர்தல், மீண்டும் மீண்டும் கண்காணித்தல், துன்புறுத்துதல் ஆகிய நடத்தைகளை பின் தொடர்தல் அல்லது ஸ்டாக்கிங் என குற்றத் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச அறக்கட்டளை (பிசிவிசி) வகைப்படுத்துகிறது.
ஒருவரின் விருப்பத்திற்க்கு மாறாக அவரை தொடர்ந்து பின் தொடர்ந்து, பேச முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை ஸ்டாக்கர் என இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. இது மட்டுமல்லாமல், சமூக வலை தளங்கள், மின்னஞ்சல் மூலம் கண்காணித்து தொடர்பை ஏற்படுத்த முற்படுவதும் இதில் அடங்கும்.
நன்கு அறிந்த அல்லது முற்றிலும் வெளியாட்களாக இவர்கள் இருக்கலாம். நிராகரிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத முன்னாள் கணவர், காதலர்கள் ஆகியவர்கள் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களாக உள்ளனர்.
அறிந்து கொள்வது எப்படி
- வீட்டருகில், வேலையிடம் அருகில் அழைக்கப்படாமல் காத்திருப்பது
- தொடர் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புதல்
- வீட்டுனுள் அத்துமீறி நுழைந்தோ அல்லது வண்டியிலுருந்தோ பொருட்களை எடுப்பது
- சொத்துகளை சேதப்படுத்துதல்
- மின்னஞ்சல், வங்கி கணக்கு ஆகியவற்றை ஹேக் செய்தல்
- பூங்கொத்து, இனிப்புகள் ஆகியவர்றை வீட்டு வாசலில் அல்லது வண்டியில் வைத்துச் செல்வது
- ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்கள் அல்லது மிரட்டும் படி தகவல்காள் பகிர்தல்
- உள்டப்பிகள் அல்லது சமூக பக்கத்தில் தொடர்ந்து செய்திகள் அனுப்புதல்
- இருக்கும் இடத்தைக் கண்காணிக்க ஜிபிஎஸ் அல்லது பிற கண்காணிப்பு மென்பொருளைப் பயன்படுத்துதல்
- கணினி செயல்பாட்டைக் கண்காணிக்க ஸ்பைவேரைப் பயன்படுத்துதல்
மேலே கூறப்பட்டுள்ள தொல்லைகளோ, வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பாதுகாப்பற்று உணர்ந்தாலோ, கண்காணிக்கபடுவதாக தோன்றினாலோ, போதிய பசி, தூக்கமின்மை ஆகியவற்றை உணர்ந்தாலோ, உடனடியாக உதவியை நாடுங்கள். இது போன்ற பின் தொடர் செயல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது பாதுகாப்பு அவசியம்.
Read more: 15000 calls to women’s helpline since launch of Amma Patrol: DCP H Jayalakshmi
சைபர் ஸ்டாக்கிங் ஆபத்துகள்
பெருந்தொற்று காலத்தில், பின் தொடர்தல் குறைந்திருந்தாலும், வேறு வகையான புதிய சவாலுக்கு வழி வகுத்துள்ளது. டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், நமக்கு தெரியாமலேயே, ஏதோ ஒரு மூலையிலிருந்து நாம் கண்காணிக்கப்படுகிறோம்.
21 வயது மாணவி சங்கீதா தான் ஆன்லைனில் கண்காணிப்பை சைபர் ஸ்டாக்கிங் குறித்து படித்த பின்னரே அதை உணர்ந்ததாக கூறுகிறார். “நான் செய்த ஒவ்வொரு விளக்கக்காட்சியின் முடிவிலும், எனக்குத் தேவையில்லாத குறுஞ்செய்திகளை அனுப்புவது, என்னுடைய ஒவ்வொரு சமூக ஊடக பதிவிற்கும் பதிலளிப்பது என தன்னை ஆன்லைனில் பின் தொடர்ந்தவர் செய்து கொண்டிருந்தார்” என தனக்கு நேர்ந்ததை பகிர்ந்தார்.
இது குறித்து தனது பேராசிரியரிடம் புகார் அளித்த பின், அவர் அந்த நபரை எச்சரித்தது தகுந்த ஆலோசனை வழங்கியதாக கூறினார்.
சைபர் பின் தொடர்தலை விட நேர் பின் தொடர்தலை கண்டுபிடிப்பது எளிது. தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களும், பணி புரிபவர்களும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். ஆதலால் முளையிலேயே சைபர் பின் தொடர்தலை பற்றி அறிந்து அதனை களைய வேண்டும். பின் தொடர்தலுக்கான காரணங்கள் கூடிக் கொண்டே போகின்றது. பல காரணங்களுக்காக பல்வேறு கட்டங்களில் பின் தொடர்பவர்கள் ஈடுபட முயற்சிக்கலாம்.” என்கிறார் பாலின வன்முறை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் அவேர் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சந்தியன் திலகவதி.
இணையத்தில் பின் தொடர்பவர்களை அடையாளம் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சாந்தியன் பரிந்துரைக்கிறார்:
- சமூக வலைப்பக்கத்தில் பதிவு போடப்பட்ட உடனே, தொடர்ந்து ஈடுபாடு காட்டுதல்
- அலுவலக கூட்டங்களில் அவர்களின் தேவை இல்லாத போதும் கலந்து கொள்வது
- விளக்கக் காட்சிகள் செய்யும் போது அதீத ஈடுபாடு காட்டுதல்
- தனியாக உள்ள போது உணர்ச்சிகரமான உரையாடல்களை தொடங்க முற்படுதல்
- ஆன்லைன் உரையாடல்களை தேவையின்றி அதிக நேரம் ஈடுபடுவது
- அதிக அளவில் குருஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்புதல்
“நாம் எடும் பதிவுகளை உடனே பார்ப்பதில் தவறில்லை. ஆனால் தொடர்ந்து அப்பதிவுகளுக்கு பின்னூட்டல் போடுவது அல்லது ஈடுபடுவது பின் தொடர்தல் ஆகும்” என விளக்கினார் சாந்தியன்.
Read more: Chennai PhD scholar takes on Tamil film industry over stalking
சட்டத்தின் பார்வையில்
இந்திய தண்டனை சட்டம் 345 டி பிரிவின் படி பின் தொடர்தல் கிரிமினல் குற்றமாகும். முதல் முறை இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடுபவருக்கு அபராதத்துடன் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். தொடர் குற்றங்களுக்கு, அபராதத்துடன் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.
இதே போல் தகவல் தொழில் நுட்பம் சட்டம், 2000 கீழும் தண்டனை விதிக்கலாம். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 மின்னணு ஊடகங்கள் மூலம் ஆபாசமான தகவல்களை விநியோகிப்பது குற்றமாகும். இது போன்ற குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஒரு லட்சம் அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர் குற்றங்க்ளுக்கு இரண்டு லட்சம் அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். தனிப்பட்ட தகவல்காளை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்தல், அவதூறாக கருதப்பட்டு, இரண்டு வருட சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
விதிமுறைகள் மற்றும் சட்ட பிரிவுகளை சட்டம் வரையுறுத்திருந்தாலும், தண்டனை விகிதம் மற்றும் குற்ற அறிக்கையின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது.
சம்பவத்தை குறித்து புகார் அளிப்பதின் அவசியத்தை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் வலியுறுத்துகிறார். “புகார் அளிப்பதில் உள்ள தயக்கமே பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற செயல் கண்டறியாமல் போக காரணமாக அமைகிறது.” என மேலும் அவர் கூறினார்.
புகார் அளிப்பது முதல் படி, அடுத்த முக்கிய படி – ஃபாலோ அப். “புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி படுத்திக் கொள்ள புகார் அளித்தவர் சரியான இடைவெளியில் புகார் குறித்த நிலையை அறிந்து கொள்ள வேண்டும். பல சமயங்களில் பயம் காரணமாக புகார் அளிப்பதை மக்கள் தவிர்க்கின்றனர்,” என சுதா மேலும் விளக்கினார்
இது போன்ற புகார்களை காவல் துறையும் தீவிரமாக எடுத்துக் கொண்டு சட்ட விதிமுறைக்கு உட்பட்டு, அதாவது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு மாறாக பின் தொடர்ந்தவரை எச்சரித்து சமரசம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
“புகார் அளிக்கும் முன், பின் தொடர்வதை விரும்பவில்லை என தெளிவாக அந்த நபரிடம் சொல்லியிருக்க வேண்டும். காவல் துறை வரை சென்று புகார் அளிக்கும் பட்சத்தில், தீவிரத்தை உணர்ந்து புகார் அளிப்பவருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர வேண்டும்.இது போன்ற புகார்களை காவல் துறை முக்கியமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்கிறார் #CallingOutStalking பிராச்சாலாளர் ஐஸ்வர்யா வி.
பின் தொடரப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்
- ஆதாரங்களை திரட்டுங்கள் (உங்காளை பின் தொடர்பவரின் புகைப்படம், குறுஞ்செய்திகளின் படம் போன்றவை)
- வழக்கமாக செல்லும் பாதையை மாற்றுங்கள், சைபர் பின் தொடர்தல் எனில் உங்கள் மின் கணக்குகளின் அமைப்புகளை மாற்றுங்கள்.
- நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ, பின் தொடர்பவர் மீது புகார் பதிவு செய்யுங்கள்.
- காவல் நிலையத்தில் உங்களின் புகாரை பெற ஆர்வம் காட்டவில்லை என்றால், உயர் அதிகாரிகளை அணுகலாம் (முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது பற்றி கீழ உள்ள லிங்கை பார்க்கவும்)
- அவ்வப்போது தவறாமல் ஃபாலோ அப் செய்ய வேண்டும்
மூலத் தகவல்: சுதா ராமலிங்கம் மற்றும் பாலு சுவாமிநாதன், ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் இணைய நிபுணர்.
Read more: All you need to know about filing an FIR in Chennai
உதவி மையங்கள்
ஒரு பெண் ஆபத்தாக உணரும் போது, அவரின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும். கீழே உள்ள உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
- 100
காவல் துறையின் பொது புகார் எண். எந்த புகார் அளிக்கவும் பயன்படுத்தலாம்.
- 181
பெண்களுக்கான இந்த எண்ணை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். வீட்டில் எதிகொள்ளும் வன்முறை அல்லது பாலியல் வன்கொடுமை ஆகியவற்றை பற்றி புகார் அளிக்கலாம். ஆம்புலன்ஸ் சேவைகள் உட்பட போலீஸ் உதவி, சட்ட உதவி மற்றும் மருத்துவ உதவ ஆகியவற்றை இதன் மூலம் பெறலாம். கூடுதலாக, பெண்களுக்காக அரசு வழங்கும் திட்டம் குறித்தும் தகவல்காள் பெறலாம்.
- 1091
இது பெண்களுக்கான பிரத்யேக எண். காவல் துறையை அச்சமின்றி எளிதாக அணுக உதவும் இந்த எண்னுக்கு வரும் புகார்கள் பொது உதவி எண் போலவே துரிதமாக செயல்படும்.
- அவேர்: 8122241688
அவேர் தொண்டு நிறுவனம், பாலியல் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி வழங்குகிறது.
- Kavalan SOS செயலி
தமிழ்நாடு மாநில காவல் மாஸ்டர் கன்ட்ரோல் அறை என்ற முயற்சியின் ஒரு பகுதியாக தமிழக காவல் துறையால் தயாரிக்கப்பட செயலி இது. இதன் மூலம் அவசர நிலை போது காவல் துறை உதவியை நாடலாம்.
பெரிய பிரச்சனைக்கு தீர்வு காண்கிறோமா?
ரோந்துப்பணி, கண்காணிப்பு கேமரா, அம்மா ரோந்து வாகனம் என பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி சென்னை காவல் துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து தான் வருகின்றன. பிரச்சனையின் ஆணி வேரை கண்டெடுத்து தீர்வு காண்கிறோமா என அடிப்படை கேள்வி எழுகிறது. பிரஜ்ன்யா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணா ராஜகோபாலன் கூறுகையில் “பொதுவாக, பாதுகாப்பு என்பது நீண்ட நாள் தீர்வாக அமையாது. அது தற்காலிகமானது, ஆனால் தங்களின் கோரிக்கைக்கு பெண்கள் பதிலளிக்க வேண்டும் என்ற ஆண் ஆதிக்க சமூக கோட்பாடுகளை களைய இது உதவாது. இதை தீர்க்க வேண்டுமென்றால், மூல பிரச்சனையை தீர்க்க வேண்டும்.”
ரோந்துப் பணி, செயலி ஆகியவை பிரச்சனையை தீர்க்க குறுகிய கால தீர்வாகும். “பெண்கள் குறித்தான ஆண்களின் பார்வையை மாற்ற வேண்டும், இதுவே நீண்ட கால தீர்வாக அமையும். இது சாத்தியப்பட, தொடர் உரையாடல்களை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும்,” என ஸ்வர்ணா மேலும் வலியுறுத்தினார்.
[Read the original article in English here.]
Also read