[Translated by Sandhya Raju]
சென்னை பள்ளிகளில் நடந்த முந்தைய மற்றும் சமீபத்திய பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள், பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளன. பாதுகாப்பான இடமாக பள்ளிகள் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. ஆனால், ஒரு சில ஆசிரியர்கள் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு பள்ளிகள் பொறுப்பேற்க முடியுமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க கல்வி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும். முக்கியமாக, இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 படி, குழந்தைகளுக்கு அருகாமையில் இருந்து, தேவைப்படும் கல்வி அல்லது பயிற்சியை வழங்குவதில் எந்தவொரு பள்ளி, நிறுவனம் அல்லது தனிநபர்கள் ஈடுபட்டுள்ளனரோ, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொறுப்புணர்வு மற்றும் சொந்த பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறுகிறது.
பள்ளி வளாகத்திற்குள், பள்ளி பேருந்தில், ஆன்லைன் அமர்வுகளின் போது அல்லது மாணவர்களுடன் பள்ளி ஊழியர்களின் எந்தவொரு ஈடுபாட்டிலும், மாணவ மாணவிகளின் பாதுகாப்பு மீறப்பட்டால், பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
பள்ளிகளின் பொறுப்பு
பள்ளி மேலாண்மை மற்றும் பணியாளர்களுக்கான போக்ஸோ சட்டம், 2012 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான கையேட்டில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாக பிரதிநிதிகளுடன் குழுக்களை பள்ளிகள் அமைக்க வேண்டும் என தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (என்ஐபிசிசிடி) பரிந்துரைத்துள்ளது.
சென்னை பள்ளிகள் உட்பட அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களால் நிர்வகிக்கப்படுகின்றன. புது தில்லியில் நேர்ந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ வாரியம் பள்ளிகளுக்கான புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது, பள்ளிகளின் எல்லைக்குள் மாணவர்களின் பாதுகாப்பு பொறுப்பு, பள்ளி அதிகாரிகள் மீது உள்ளது.
இந்த வழிய்காட்டுதல் படி, பொது மக்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கொண்ட தனி குழு அமைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சிறுவர் பாலியல் தொல்லைகளை விசாரிக்க ஒரு குறை தீர்க்கும் குழுவை அமைக்கக் கோரும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) வழங்கிய விரிவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படி 2018 ஆம் ஆண்டில், பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை
பள்ளிகளில், குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை அவசியம் என்பதை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். பள்ளி வளாகம் மட்டுமல்லாமல், பள்ளி பேருந்து மற்றும் தற்போதைய சூழலில் ஆன்லைன் வகுப்புகள் போதும், பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் ஒரு மாணவர் ஆலோசகரை நியமிக்க வேண்டும், மாணவர்கள் எளிதாக அணுகம் வகையிலும் ரகசியத்தை பராமரிப்பதற்கான உத்தரவாதமும் உறுதி செய்ய வேண்டும்..
Read more: Child Sexual Abuse: Laws and helplines to protect our children and seek justice
பள்ளிகளில் குறை தீர்க்கும் குழு மற்றும் புகார் பெட்டிகள் இருக்க வேண்டும். பெறப்பட்ட புகார்கள் மற்றும் ஒவ்வொரு புகாருக்கும் எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பதிவுகளையும் பள்ளிகள் உருவாக்க வேண்டும். முக்கியமாக தகவல்கள் மற்றும் சைல்ட்லைன் 1098 மற்றும் குழந்தை உரிமைகள் பிரச்சினைகளில் பணிபுரியும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை அனைவரும் பார்க்கும் படியான வகையில் வைத்திருக்க வேண்டும்.
“அனைத்து பள்ளிகளும் நிறுவனங்களும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க முழு ஆவணங்களுடன் வலுவான நெறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.”என்கிறார் தலைமை நிர்வாக அதிகாரி, ஐபி டோம், உறுப்பினர்-சட்ட, நிறுவன மனித நெறிமுறைகள் குழு, என்ஐஇ – ஐசிஎம்ஆர், ஸ்வப்னா சுந்தர். இது எத்தகைய நன்மைகளை பயக்கும் எனவும் பட்டியலிடுகிறார்:
வலுவான நெறிமுறைகளின் பயன்கள்
- சந்தர்ப்பவாத குற்றங்களைத் தடுக்கலாம்
- நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் எளிதாக அடையாளம் காணப்பட்டு குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம். ஆரம்ப கட்டத்திலேயே இது போன்ற நடவடிக்கைகளை பள்ளிகள் அறிந்து, மேலும் தடுக்க, இந்த நெறிமுறைகள் உதவும்.
- பெடோபில்ஸ் அல்லது வக்கிரமான மனநிலையுள்ளவர்கள் பொதுவாக குழந்தைகளை எளிதாக அணுக ஏதுவான ஒரு தொழிலைத் தேடுவார்கள். ஒரு வலுவான நெறிமுறை அத்தகைய நபர்கள் பள்ளியில் சேருவதைத் தடுக்கும்.
- ஒரு வலுவான நெறிமுறை குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகளின் அணுகலைக் குறைக்கிறது மற்றும் அத்தகையவர்களின் சீர்ப்படுத்தலை அடையாளம் காண உதவுகிறது.
பெற்றோர்-ஆசிரியர் சங்க செயற்குழுவின் பங்கு
பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தில் அனைத்து பெற்றோர்களும் உறுப்பினர்கள். பொதுக்குழு கூட்டம் மூலமாக வருடா வருடம் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், பள்ளியின் கட்டமைப்பு மேம்படுத்துதல், கட்டணம், படிப்பு சம்பந்தமான பணிகளில் மட்டுமே சங்கத்தின் கவனம் உள்ளது. பள்ளியில் பாலியல் தொல்லைகள், கொடுமைப்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்கிறார் ஸ்வப்னா சுந்தர்.
பள்ளிகளை வழிநடத்தும் குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த, பள்ளி நிர்வாகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண குழுக்களை உருவாக்குவது முக்கியம் என்று ஸ்வப்னா கருதுகிறார். கல்லூரிகளில் ராகிங் எதிர்ப்பு சட்டம் உள்ளது போல், பள்ளியில் கொடுமைப்படுத்துதலுக்கு எதிராக எந்த சட்டமும் இல்லை.
பள்ளிகளுக்கு மட்டும் அல்ல
ஸ்வப்னா சுந்தரை பொறுத்த வரையில், பயிற்சி நிறுவனங்கள், விளையாட்டு அகாடமிகள், நடனம், இசை மற்றும் கலைப் பள்ளிகள், குழந்தைகளின் நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி மற்றும் பிற ஊடக சேனல்கள் ஆகியவற்றிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும் என கருதுகிறார். குழந்தைகள் பாதுகாப்பு குறைபாடு, பாலியல் தொல்லைகள்அல்லது துன்புறுத்தல் ஆகியவை உடனடியாக கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட இது உதவுவதோடு, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதுகாக்கப்படும் என்கிறார்.
Read more: Revived after months, can state child rights commission make lives better for vulnerable kids?
முதல் படி
ஆலோசகர் மற்றும் உருமாறும் பயிற்சியாளர், சாங்க்டம் கவுன்செலிங் நிறுவன இயக்குனர் ஸ்வப்னா நாயர் பின்வரும் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுகிறார்:
- வெளிப்படையாக உடலுறுப்புகளை காண்பிப்பது, கடுமையாக பேசுவது அல்லது நடந்து கொள்வது போன்ற பாலியல் அத்துமீறல், பள்ளியிலோ அல்லது ஆன்லைன் கல்வியின் போதோ நிகழ்ந்தால் – முதல் படியாக, பெற்றோர்கள், வகுப்பு ஆசிரியர் அல்லது தனக்கு பிடித்தமான ஆசிரியர் என நம்பிக்கைக்குரியவர்களிடம் முதலில் தெரிவிக்க வேண்டும்.
- இவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
- பள்ளி நிர்வாகிகள், ஆலோசர் மற்றும் சட்ட வல்லுனர் ஆகியோர் முன்னிலையில், நம்பிக்கையான பெரியவர் உடன் குழந்தையிடம் பேச வேண்டும். மேலும் குழந்தை என்ன சொல்கிறார் என்பதை பரிந்துரை அல்லது தீர்பளிக்காமல் தெளிவாக அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பாலியல் தொல்லை / துன்புறுத்தல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
உடனடி தாக்கம்
- ஒரு ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்படும்
- “என்னுடைய நடவடிக்கையால் இந்த மாதிரி நடந்துள்ளதா?” என்ற குற்ற உணர்ச்சியும் அவமானமும் ஏற்படும்.
- நம்பிக்கையான பெரியவர்களிடம் ஒளிவு மறைவின்றி பேச குழந்தை நேரம் எடுத்துக்கொள்ளும்.
பெற்றோர்கள் / ஆசிரியர்கள் / மற்றவர்கள் கவனிக்க வேண்டிய நடத்தை மாற்றங்கள்
- குழந்தை அமைதியாகி பின்வாங்குதல்
- கண்களை பார்த்து பேசாமலும், பதில் அளிக்காமல் அல்லது பதில் மற்றும் அளித்தல்
- திடீரென்றூ ஒரு பாடத்தையோ அல்லது ஆசிரியரையோ பிடிக்காமல் போகுதல்
- தலைவலி, வயிற்று வலி, மற்றும் பிற அறிகுறிகள் போன்ற மனோவியல் பிரச்சனைகள் உருவாகுதல்
- படுக்கை ஈரமாக்குதல், நகம் கடித்தல்
- பகல் கனவு காணுதல், மற்றும் எதையோ இழந்தது போல் சிந்தித்தல்
- தொலைபசி அழைப்பு அல்லது குறுஞ்செய்திகளுக்கு திடீரென செயல்படுதல், எப்பொழுதும் அலைபேசியை உபயோகித்தல்
- வகுப்புக்கு அல்லது பள்ளிக்கு செல்வதை தவிர்த்தல்
- உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம், சாப்பிடுவதை தவிர்த்தல் அல்லது நிறைய சாப்பிடுதல்
நீண்ட கால தாக்கம்
- குற்ற உணர்வு, அவமானம் மற்றும் குறைந்த சுயமரியாதை, மோசமான உடல் உருவம்
- குற்றம் சாட்டப்பட்டவரின் பாலின நபர்களைத் தவிர்ப்பது
- தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த உறவு சிக்கல்கள்
- புண்கள், தடிப்புத் தோல் அழற்சி, அரிப்பு போன்ற தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற அறிகுறிகள்.
- அதிக மன அழுத்தம்
- சில மனநல நிலைமைகளுக்கு மரபணு ரீதியாக பாதிக்கப்படுமானால் சிஎஸ்ஏ மன நிலைமைகளைத் தூண்டும்
- குறைந்த உணர்ச்சி
(தி சான்க்டம் கவுன்சிலிங்கின் நிறுவனர் இயக்குனர் ஸ்வப்னா நாயரின் தகவல்கள் அடிப்படையில்)
தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் உதவி எண்கள்
சைல்ட்லைன் உதவி எண்
1098 நாள் முழுவதும்
சைல்ட்லைன் எண்1098 வருடம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்கும். இது குழந்தைகாளுக்கான இலவச அவசரகால எண் ஆகும். அவசர அழைப்புகாளுக்கு உதவுவதோடு, அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிற சேவைக்கும் இணைக்கிறது.
1098 மூலம் யார் உதவி பெற முடியும்?
- குழுந்தைகள் – எந்தவொரு குழந்தையும் 1098 ஐ தொடர்பு கொண்டு சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளை குழுவுடன் தொடர்பு கொள்ளலாம், அவர்கள் குழந்தையின் பெயரையும் அடையாளத்தையும் ரகசியமாக வைக்க உதவுவார்கள்.
- அக்கறையான பெரியவர்கள் – ஒரு குழந்தையைப் பற்றி அக்கறை கொண்ட எந்தவொரு பெரியவரும் 1098 ஐ தொடர்பு கொண்டு குழந்தைக்கு உதவலாம்.
- குடும்ப உறுப்பினர்கள் / உறவினர்கள் – அக்கறையுள்ள எந்த குடும்ப உறுப்பினர்கள் ஆயினும் 1098 அணுகி உதவி கோரலாம்.
- சைல்ட்லைன் நெட்வொர்க் – சைல்ட்லைன் இந்தியாவின் கூட்டணி நிறுவனங்களுக்கு உதவி தேவைப்பட்டால் 1098-ஐ அணுகலாம்.
இந்திய குழந்தைகள் நல கவுன்சில் தமிழ்நாடு
ஐ.சி.சி.டபிள்யூ தமிழ்நாடு குழந்தைகளின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறது மற்றும் புறக்கணிப்பு, துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு எதிராக குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது.
Ph: +91-44-26260097 / 26282833 / 26212550 ; E Mail: iccwtn@gmail.com
துளிர் சென்டர் ஃபார் பிரிவன்ஷன் & ஹீலிங் ஆஃப் சைல்ட் செக்ஷுவல் அப்யூஸ், சென்னை
Tulir – CPHCSA இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க செயல்படுகிறது.
Tel: +91 44 43235867, +91 44 26618026 ; E-mail: tulircphcsa@yahoo.co.in
அவேர் இந்தியா
சமத்துவம் மூலம் பெண்கள் தங்கள் உரிமைகளை ஆதரிப்பதற்கான விழிப்புணர்வை உருவாக்க நோக்கமாகக் கொண்டுள்ளது அவேர். மனித சட்டங்கள், உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான ஒரு முயற்சி இது.
Ph: +91 81222 41688 ; E-mail: mail@aware.org.in
கற்போம் கற்பிப்போம்
குழந்தை வளர்ப்பு மற்றும் மகளிர் உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் கற்போம் கற்பிப்போம் ஈடுபட்டுள்ளது.
Ph: +91 79040 23250 ; E Mail: officialkarpomkarpipom@gmail.com
பெண்
தனிநபர், சமூகம், ஆளுகை, சட்ட அமலாக்கம், நீதி அமலாக்கம் மற்றும் கொள்கை வகுத்தல் ஆகிய பல மட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தீர்ப்பதற்கான குறிக்கோளுடன், சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Ph: 093400 06600 ; E-mail: pennindia2020@gmail.com
நக்ஷத்ரா
இந்தியாவில் கடத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக செயல்பட நக்ஷத்ரா உறுதிபூண்டுள்ளது. சென்னையில் Rape Crisis Centre (ஆர்.சி.சி) நடத்தும் இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பல நலிந்த சமூகங்களில் பணியாற்றுகிறார்கள்.
Ph: 0091-9003058479, 0091- 7845629339 ;
E-mail: nakshatrablogs@gmail.com, ngo@nakshatra.com.co , boskosherin@gmail.com
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பாணியாற்றுபவர் : விஜி கணேஷ், பயிற்சியாளர் மற்றும் கல்வியாளர், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாலியல் கல்வி.
[Read the original article in English here.]