Translated by Sandhya Raju
வரதா புயல் ஏற்படுத்திய சேதத்தில், சென்னையில் பசுமை போர்வை பெரும் பாதிப்படைந்தது. புயல் சேதத்தை கடந்து நின்ற மரங்களும், போதிய பராமரிப்பு இல்லாததால் அச்சுறுத்தலில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமில்லாமல், பொது மக்களுக்கும் ஆபத்தாக இது மாறியுள்ளது. மரம் நடுதலை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், இருக்கும் மரங்களை பாதுகாப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும்.
சென்னை மரங்களை பாதுகாத்தல்
குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையோர மரங்களின் தாழ்வான கிளைகள் செப்பனிடப்படுவதை சென்னை மாநகராட்சி கண்காணிக்க வேண்டும். பல வருடங்களாக சென்னையின் பல பகுதிகளில் இந்த பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இந்த மரங்கள் மழைக் காலத்தின் போது முறிந்து விழுகிறது. பருவ மழை காலம் தொடங்கும் முன் மழை நீர் வடிகால் சுத்தம் செய்யப்படுவது போல் தாழ்வான மரக்கிளைகளும் வெட்டி பராமரிக்கப்பட வேண்டும்.
என் குடியிருப்பு பகுதியில் உள்ள நிலை இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. பட்டேல் சாலை, ஸ்ரீனிவாசன் மற்றும் திருவேங்கடம் தெருக்களில் உள்ள மரங்களின் தாழ்வான கிளைகளை வெட்டுமாறு இங்கு வசிப்பவர்கள் புகார் அளித்தனர். ஆகஸ்ட் 30 அன்று பெய்த மழையால் இங்குள்ள மூன்று மரங்கள் சாய்ந்ததால், அதனை அகற்ற புகார் அளிக்கப்பட்டது. வெகு காலமாக மரக் கிளைகள் வெட்டப்படாமல் இருந்ததால், பலத்த மழையை இந்த மரங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
Read more: Panel proposes practical and scientific ways to green Chennai
தாழ்வான கிளைகளை வெட்ட கோரிக்கை
இந்த மரங்களின் நிலையை கண்ட குடியிருப்பு வாசிகள், பழைய மரங்களால் ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை உணர்ந்து, 1913 என்ற எண்ணிற்கு புகார் அளித்தனர். இந்த பகுதியில் பூங்காக்களை கண்காணிக்கும் அதிகாரியிடம் முறையிட்ட போது, கோகுலாஷ்டமி விடுமுறைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொங்கிக் கிடந்த உடைந்த கிளைகளால் சாலையை பயன்படுத்துவோருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சமடைந்தோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் எந்த பலனும் இல்லாததால், காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
ஒரு கட்டத்தில், தொங்கிக் கொண்டிருந்த மரக் கிளை உடைந்து விழுந்ததில், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி நூலிழையில் தப்பினார். இதற்கிடையில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எண்ணத்தில், சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இதை எடுத்து சென்றோம்.
இந்த பகுதியின் பூங்கா கண்காணிப்பாளரின் தொடர்பு எண்ணை, துணை பொறியாளர் அனுப்பினார். நாங்கள் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினோம். சிறிது நேரத்திற்கு பின், இரண்டு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் வந்து பகுதியை சுத்தப்படுத்தினர்.
தொடரும் அபாயம்
இதே போன்ற சூழல் இந்த மாதம் மூன்றாம் தேதி மீண்டும் நடந்தது. வேப்ப மரத்தின் பெரிய கிளை ஒன்று ஒடிந்து சாலையின் நடுவில் விழுந்தது. அதே உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்த பின்னர், அது அகற்றப்பட்டது.
இன்னும் இது போன்று பல மரங்களின் கிளைகள் காய்ந்து விரைவில் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. பூங்கா பராமரிப்பாளரின் உதவியை நாடிய போது, இந்த கிளைகளை வெட்டும் கருவி இல்லை எனக் கூறினார். சென்னை மாநகராட்சி சில மாதங்கள் முன்பு வழங்கிய கிளைகளை வெட்டும் கருவி இருந்தும் அது சரியாக பயன்படுத்தப்படாதது ஏன் எனக் கேள்வி எழுகிறது.
பல வாரங்களாக கிளைகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில், பல தடவை அதிகாரிகளிடம் முறையிட வேண்டி இருந்தது. பல புகார் மனுக்கள் அளித்த பின், 9 அல்லது 10 பராமரிப்பு பணியாளர்கள் திறந்த வாகனத்தில் ஒடைந்த விழுந்த கிளைகளை அகற்றிய பின்னரும், இன்னும் சில அப்படியே சாலையில் உள்ளது. இன்னும் சில தினங்களில் இவையும் அப்புறப்படுத்தப்படும் என பராமரிப்பு ஆய்வாளர் உறுதி அளித்துள்ளார்.
Read more: Tree survey in Chennai helps citizens take care of neighbourhood green cover
ஏன் இந்த பாதிப்பு?
ஒவ்வொரு முறையும் கிளைகளை வெட்டி மரங்களை பராமரிக்க குடியிருப்பு வாசிகள் ஏன் கோரிக்கை அளிக்க வேண்டும்? இதற்கான கூடுதல் செலவு தொகையை நாங்கள் அளிக்க வேண்டியதாக உள்ளது. பணியாளர்கள் வேலையை முடித்த பின் அவர்களுக்கு சிறிய தொகை அளிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக கிளைகளை அகற்றும் சங்கிலிவாள் கருவிக்கு நாங்கள் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கும் நிலை உள்ளது.
தனியார் இடங்காளிலோ அல்லது தங்களின் வேலையை கடந்து இதை மேற்கொண்டால், அதற்கான தொகையை வழங்குவதில் அர்த்தம் உள்ளது. ஆனால், சாலைகளில் உள்ள மரங்களை பராமரிப்பது சென்னை மாநகராட்சியின் பணியாகும்.
இதைப் பற்றி பணியாளர்காளிடம் கேட்ட போது, இந்த பணிக்கான உபகரணங்களோ, பெட்ரோல் டீசலோ மாநகராட்சி வழங்குவதில்லை எனக் கூறினர். மரக் கிளைகள், அதனால் ஏற்படும் குப்பைகளையும் அகற்ற பராமரிப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டால், அதற்கான கருவிகள் இல்லை என பதிலளிக்கின்றனர். பின் மக்களின் வரிப்பணம் எங்கு செல்கிறது என கேள்வி எழுகிறது. போதிய வசதிகள் இல்லாததால், பணியாளர்கள் தங்களின் பணியை செய்ய முடிவதில்லை, இதனால் மக்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
[Read the original article in English here.]
Subsequent to the above articles, I had lodged complaints about the condition of an Avenue Tree through the Namma Chennai App. Received a standard response as always stating the issue would be addressed shortly.
Meanwhile another huge tree located right opposite to the Perambur Railway Station on the arterial Bus Route Road fell down 2 days ago blocking the traffic for a couple of hours.
If the local officials had bothered to prune the branches well in time the tree could have been saved.
It is a very sad state of affairs… Totally dismayed, disillusioned and angry with the laid back attitude of the local officials. Will this situation ever change?? Needs to be seen.