Translated by Sandhya Raju
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டண உயர்வை அறிவித்தது. இதனால் மின் கட்டணம் 50% அதிகமாகலாம் என கூறப்பட்டது. எந்த அளவு மின் கட்டணம் உயரும் என்ற கவலையில் மக்கள் உள்ள்னர்.
இதனை சமாளிக்க என்ன நடவடிக்களை நாம் மேற்கொள்ளலாம் என குறிப்புகளை உங்களுக்காக இங்கே பகிர்கிறோம்.
முதல் 100 யூனிட் இலவசம் என்றாலும், 400 யூனிட் வரை ஒவ்வொரு 100 யூனிட்டிற்கும் அடிப்படை கட்டணம் ₹2.50-லிருந்து ₹4.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 400 யூனிட் முதல் 500 யூனிட் வரை, ₹6 ஆகவும், 1000 யூனிட் வரை ஒவ்வொரு 100 யூனிட்டிற்கும் ₹1 முதல் ₹2 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
Read more: Did your July electricity bill shock you? Here is why!
வீடுகளை குளிர்விக்க கட்டிடக்கலை தீர்வுகள்
“கட்டிடக்கலை தீர்வுகளை அளிப்பதற்கு முன் சென்னையின் வெப்ப காலநிலையை கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் சென்னையை சார்ந்த கட்டிடக்கலை நிபுணர் வினோத் குமார்.
“சென்னையில் 30° வெப்ப நிலையிலும், சூடாகவே நாம் உணருகிறோம்.இதனால், நாம் அதிக அளவில் ஏசியை உபயோகிக்கிறோம், இது மின் கட்டணத்தை உயர்த்துகிறது.”
மின் கட்டணத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என சில வல்லுநர்களை கேட்டோம்.
- குறுக்கு காற்றோட்டம்: இரண்டு ஜன்னல்கள் எதிரதிரே இருக்கும் போது, ஒன்றில் மூலம் புதிய காற்று வரவும், மற்றொரு ஜன்னல் வழியே அசுத்த காற்று வெளியேறவும் வகை செய்யும். இது இயற்கையான காற்று வர உதவுவதால், மின்விசிறி உபயோகத்தை குறைக்கும்.
- வென்டிலேட்டருடன் உயர் கூரை: உயர் கூரை மேல் அமைக்கப்படும் வென்டிலேட்டர் அல்லது பெரிய ஜன்னல்கள், சூடான காற்றை வெளியேற்ற உதவும். இதனால் குளிர்ந்த காற்று கீழே தங்கும். “வெப்பக் காற்று வென்டிலேட்டர் மூலம் வெளியேறுவதால், வெற்றிடத்தை உருவாக்குதால், காற்றை சுழற்சியில் வைக்க உதவும்,” என விளக்குகிறார் வினோத். இது செயற்கையான குளிர்விப்பானை குறைத்து, மின்சார உபயோகத்தை கட்டுப்படுத்தும்.
- இரட்டை மெருகூட்டப்பட்ட கண்ணாடி: இன்று பல வீடுகளில் கண்ணாடிகளை உபயோகப்படுத்துகிறார்கள். இரட்டை மெருகூட்டப்பட்ட கண்ணாடியை உபயோகிப்பதன் மூலம் வெளிப்புற வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ளலாம். இரு ஜன்னல்களுக்கிடையே உள்ள பலகைகளின் இடைவெளியை, கண்ணாடி குறைப்பதால், செயற்கை குளிர்விப்பான் அல்லது வெப்ப அமைப்பை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துகிறது.” என்கிறார் ஆல்காய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, நிதின் மேத்தா.
- மேற்கில் ஜன்னல் அமைப்பை தடுப்பது: “சூரியன் மேற்கில் மறையும் போது சூரிய கதிர்கள் கடுமையாக இருக்கும்.,” எனக் கூறும் வினோத், ஜன்னல்கள் மேற்கில் இருந்தால் உட்புற வெப்பத்தை கூட்டும்.” படுக்கையறை மேற்கில் இருந்தால், அங்கு குளியலறை போன்றவற்றால், வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம். பெரிய ஜன்னல்கள், பால்கனி, முற்றம் ஆகியவை வடக்கு திடைசியில் இருந்தால், நேரடி சூரிய வெப்பம் இருக்காது.
Read more: Summers are getting worse in Chennai. How can we build cooler homes?
“மூன்று வருடங்களாக ஏ.சியை நாங்கள் உபயோகிக்கவில்லை, தற்போது அதன் அவசியமும் இல்லை” என்கிறார் வேளாச்சேரியை சேர்ந்த கணேஷ். “மாடி முழுவதும் தொட்டிகள் உள்ளன. மேலும், மேற்கூரையில் வெள்ளை ரிஃபெலெக்டிவ் பூச்சை பயன்படுத்தியுள்ளோம், இது சூரிய கதிரை பிரதிபலிக்க உதவுகிறது. அருகில் பூங்காவும் உள்ளதால், வெப்பத்தை கட்டுப்படுத்துகிறது.”
ஆற்றல் திறன் மிக்க உபகரணங்கள் கட்டணத்தை கட்டுப்படுத்தும்
டிவி ஆனில் இருந்தாலும், அதை பார்க்காமல் நாம் இருப்போம். நீங்கள் அப்படி செய்பவர் என்றால், LED டிவி இருந்தால் கொஞ்சம் கட்டண உயர்வை கொஞ்சம் கட்டுப்படுத்த உதவும்.
“இரண்டு மாதங்களுக்கு நாள் முழுவதும் டிவி பார்த்தாலும், LED டிவி அதிக பட்சம் 100 யூனிட் ஆகும்.” என LED டிவியின் ஆற்றல் திறனை குறித்து கூறினார் குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழு (CAG) ஆராய்ச்சியாளர், பரத் ராம்.
“ஆற்றல் திறன் மிக்க உபகரணங்களுக்கு மாறுவதன் மூலம், நீடித்த காலங்களில் மின் கட்டணத்தை கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, CFL பல்புகளுக்கு பதிலாக LED பல்ப் உபயோகிக்கலாம்.” எனக் கூறும் பரத், அனைத்து உபகரணகங்களும் டிவியை போல் விலை இருக்காது.
புது மாடல் பம்ப், கீசர் ஆகியவையும் மின் கட்டணத்தை கட்டுப்படுத்த உதவும். “பழைய வகை உபகரணங்களில் அதிக குதிரைத்திறன் உள்ளதால், அதிக மின் நுகர்வாகும்.” என்றார் பரத். “இது குளிர்சாதன பெட்டிகளுக்கும் பொருந்தும். 5 நட்சத்திரம் உள்ள ஏசி, 3 மற்றும் 4 நட்சத்திரம் கொண்ட ஏசியை விட அதிக திறன் மிக்கதாகும்.”
ஒரு டன் 5 நட்சத்திர ஏசி 554 வாட் மின்சாரத்தை உபயோகிக்கும், இதுவே ஒரு டன் 3 நட்சத்திர ஏசி 747 வாட் மின்சாரத்தை உபயோகிக்கும்.5 நட்சத்திர ஏசி 28% குறைவான மின்சாரத்தை உபயோகிக்கும் என ஆய்வுகாள் கூறுகிறது. ஆகையால், அதிக நட்சத்திரம் உடைய உபகரணங்கள் அதிக மின் சேமிப்பை தருகின்றன.
“உங்கள் மின் உபயோகத்தை பொருத்தது இது. உங்கள் கட்டணம் குறைவாக இருந்தால், அதிக விலையில்லாத 4 நட்சத்திர உபகரணங்களை உபயோகிக்கலாம். ஆனால் சில ஆயிரங்கள் என்றால், 5 நட்சத்திர ஏசியை உபயோகிப்பது நல்லது,” என்கிறார் திறன்ஆற்றல் தீர்வுகளை வழங்கும் ஜோத்யா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரோஹித் பல்லேர்லா.
ஆற்றல் திறன் கொண்ட உபகரணங்களின் விலை அதிகமாக இருந்தாலும், அதிக மின்சாரத்தை பயன்படுத்தாததால், மின் கட்டணத்தை சேமிக்க உதவும் , என்கிறார்கள் வல்லநர்கள்.
உபகரணங்களின் உபயோகம்
உபகரணங்களின் மின் உபயோக முறையை அறிந்து கொள்வதன் மூலல், அவற்றை கவனமாக பயன்படுத்த உதவும். ஏசி, வாஷிங் மெஷின், கீசர், மோட்டர் பம்ப் மின் கட்டணத்தை உயர்த்துகிறது.
“உபகரணம் உபோயகத்தில் இல்லாவிட்டாலும், அதனை ஆனில் வைப்பது, அதன் சுவிட்ச் ஆனில் இருப்பது போன்றவற்றாலும் மின் உபயோகம் ஆகும்,” என்கிறார் பரத். “உதாரணமாக, நாம் டிவியை ரிமோட் மூலம் அணைக்கிறோம், ஆனால் அதன் பிளக்கை ஆஃப் செய்வதில்லை, இதனால் மின்சாரம் வீணாகிறது.”
2022-ம் ஆண்டு CAG மாநிலம் முழுவதும் நடத்திய ஆய்வின் படி, 70% வீடுகள் உபகரணங்களை உபயோகித்த பின், அதனை முறையாக அணைப்பதில்லை. டிவி, ஏசி ஆகியவற்றை விட செட்-டாப் பாக்ஸ் மின்சாரம் வீணாகுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
“சுவிட்ச் போர்டில் ஸ்மார்ட் பவர் ஸ்ட்ரிப் பொருத்தலாம். இது உபயோகம் இல்லாத நேரத்தில், மெய்ன் மின்சாரத்தை தானாக ஆஃப் செய்யும். ஆனால் இது அதிக விலையானது,” என்கிறார் ரோஹித்.
ஒவ்வொரு உபகரணத்தின் அதிக பட்ச நிலையை கருத்தில் கொள்வதும் மின்சாரத்தை சேமிக்க உதவும். “ உதாரணத்திற்கு, உங்கள் வாஷிங் மெஷினில் அதிக பட்ச துணியின் அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இதை விட குறைந்த துணிகளை போட்டாலும், அதே மின்சார தான் உபயோகிக்கும்,” என்கிறார் பரத்.
சரியான பராமரிப்பும் மின் நுகர்வை கட்டுப்படுத்தும். “ஏசியை மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுத்தல் செய்வது, மின் நுகர்வை கட்டுப்படுத்தும்,” என்கிறார் ரோஹித்.
இரண்டாம் முறை வாங்கிய அல்லது பழைய உபகரணங்களின் உபயோகிப்பதை தடுப்பது மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும். “உபகரணங்களின் வயது அதிகமாக ஆக, அது மிகுந்த மின்சாரத்தை உபயோகிக்கும்,” என விளக்கம் அளித்தார் ரோஹித்.
இந்த மின் கட்டண உயர்வு, நாம் வேற்று ஆற்றல் முறையான சோலார் ஆகியவற்றிற்கு மாறுவதிற்கும் ஏற்ற தருணமாகும், என்கிறார்கள் வல்லுநர்கள்.
அதிக மின் கட்டணத் தொகையிலிருந்து தங்களை காத்த்துக் கொள்ள இவை சிறிய முன்னெடுப்பாகும்.
[Read the original article in English here.]