Translated by Sandhya Raju
கடந்த ஒரு மாதமாக சென்னையில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி நிலவரப்படி, 3711 புதிய தொற்றுகளும், 17 உயிரழப்புகளும் நேர்ந்துள்ளன. 28005 பேர் சிகிச்சை பெற்றும் 1967 குணமடைந்தும் உள்ளனர். பெருந்தொற்று பரவத் தொடங்கி ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது, புதிய தொற்றில் 70% மாகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் உள்ளது, இது புதிய தொற்று அலை உருவாகி உள்ளதை காட்டுகிறது. இந்த சூழலில், தமிழகத்திலும் தொற்று வேகமாக பரவி வருவதால், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, புதிய கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது.
சென்னைக்கு பயணிக்கும் முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை:
யார் ஈ-பாஸ் பெற வேண்டும்?
பிற நாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் சென்னைக்கு வருபவர்கள் கட்டாயம் ஈ-பாஸ் பெற வேண்டும். ஆனால், கர்நாடாகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியிலிருந்து வருபவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தினுள் பயணிக்க ஈ-பாஸ் தேவையில்லை. ஆனால், மலைப்பிரதேசங்கள் மற்றும் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்பவர்கள் வலைப்பதிவு செய்ய வேண்டும்.
ஈ-பாஸ் பெற இங்கே விண்ணப்பிக்கலாம்.
பிற மாவட்டங்களுக்கு செல்லும் முன் பரிசோதனை அல்லது தனிமைபடுத்திக் கொள்ள வேண்டுமா?
இல்லை, தமிழகத்திற்குள் பயணிக்க எந்த வித கட்டுப்பாடுகளையும், அரசு இது வரை விதிக்கவில்லை.
ஏப்ரல் 8-ம் தேதி தமிழக அரசு அறிவித்துள்ள விதிகளின் படி, தமிழகத்தினுள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரிக்கு பேருந்தில் அமர்ந்து செல்ல மட்டுமே பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பிற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்து விமானவழிகள், ரயில்வே மற்றும் சாலைவழிகள் வழியாக வரும் பயணிகளுக்கான திருத்தப்பட்ட பரிசோதனை வழிகாட்டுதல்கள் என்ன?
- மாநிலத்திற்கான நுழைவாயில்களில் வெப்பத் திரையிடல் கட்டாயமாகும்.
- அனைத்து பயணிகளும் (மகாராஷ்டிரா மற்றும் கேரளா தவிர) 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை சுய கண்காணிப்பு செய்ய வேண்டும். (இந்த காலக்கட்டத்தில் காய்ச்சல், இருமல், மூச்சுக்கோளாறு போன்றவை ஏற்பட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு உடனே செல்ல வேண்டும்).
- மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களிலிருந்து வருபவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை சுயகண்காணிப்பு செய்ய வேண்டும். (இந்த காலக்கட்டத்தில் காய்ச்சல், இருமல், மூச்சுக்கோளாறு போன்றவை ஏற்பட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு உடனே செல்ல வேண்டும்).
- பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- பரிசோதனை முடிவில் தொற்று உறுதிபடுத்தப்பட்டு அறிகுறியும் தென்பட்டால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொற்று உறுதிபடுத்தப்பட்டு அறிகுறிகள் ஏதும் இல்லையென்றால், அவர்கள் கோவிட் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுவர்.
- தொற்று மற்றும் அறிகுறி இல்லையென்றால், 14 நாட்கள் சுய கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்படுவர்.
- தொற்று உறுதி செய்யப்படாமல், அறிகுறி தென்பட்டால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ ஆலோசனை படி அடுத்த நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்.
Read more: The second wave: All about the latest COVID testing, containment and vaccination protocol in Chennai
சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் என்ன?
பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகள் தவிர, பிற சர்வதேச பயணிகளுக்கு கீழ்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:
- ஆன்லைன் ஏர் சுவிதா போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவத்தை பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும். (www.newdelhiairport.in).
- அனைத்து பயணிகளும் கோவிட்-19 RT-PCR பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றிதழை பதிவேற்ற வேண்டும். பயணம் மேற்கொள்ளும் 72 மணிநேரத்திற்குள் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தவறான சான்றிதழை பதிவேற்றம் செய்வது கிரிமனல் குற்றமாகும்.
- வருகையின் போது வெப்ப பரிசோதனை கட்டாயமாகும்.
- பரிசோதனையின் போது தொற்று அறிகுறி தென்பட்டால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
- மற்றவர்கள் 14 நாட்களுக்கு அவர்களை சுய கண்காணிப்பு செய்து கொள்ள வேண்டும்.
- இந்த காலகட்டத்தில், தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மாநில அல்லது மத்திய அழைப்பு மையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் யாவை?
- பயண தேதி முன் ஆன்லைன் ஏர் சுவிதா போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவத்தை பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும் (www.newdelhiairport.in). மேலும் 14 நாட்கள் முன்பான பயண விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
- பயணத்திற்கு 72 மணி நேரம் முன் RT-PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், இதில் தொற்று இல்லை எனபதற்கான சான்றிதழை ஏர் சுவிதா போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.
- விமான நிலையத்திலும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்; தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்பே விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியும்.
- இணைப்பு விமான பயணிகளும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் இணை விமான பயணத்தை இவர்கள் மேற்கொள்ள முடியும் இல்லையென்றால் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும்.
- ஏழு நாட்களுக்கு பின் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்,தொற்று இல்லை என உறுதியானாலும் மேலும் ஏழு நாட்கள் இவர்கள் சுய கண்காணிப்பில் இருக்க பரிந்துரைக்கப்படுவர்.
- ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்கள், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டாலும், 14 நாட்கள் சுய கண்காணிப்பை கடைப்பிடிக்க வேண்டும்.
- தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சுகாதார நெறிமுறைப்படி மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். .
தொற்று உறுதி செய்யப்பட்ட பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் யாவை?
சிகிச்சை நெறிமுறைப்படி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவர்.
- பயணிகளின் தொற்று உறுதியான மாதிரிகள் முழு ஜெனோமிக் வரிசைமுறைக்கு இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்ஷியம் (INSACOG) ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
- 14-ம் நாள் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் வரை அவர்கள் தனிமையில் இருட்தல் வேண்டும்.
பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் அல்லது வீட்டு தனிமைப்படுத்தலின் போது, தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்படுவர். 7-வது நாளில் (அறிகுறி இருப்பின் அதற்கு முன்னரே) பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதே வரிசையில் பயணித்தவர், முன் மற்றும் பின் மூன்று இருக்கைகளில் பயணிகள், கேபின் க்ரு ஆகியோர் தொடர்பு நபர்களாக கருதப்படுவர்.
Read more: Catch the latest on vaccination, fever camps, hospital beds and night curfew in Chennai
தரை மார்க்கமாக/கப்பல் மார்க்கமாக வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் யாவை?
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும், இவர்களுக்கும் பொருந்தும், ஆனால், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி இவர்களுக்கு இல்லை.
- அவர்கள் சுய அறிவிப்பு படிவத்தை இந்திய அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, துறைமுகத்திற்கு வந்தவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகள் என்ன?
- சிகிச்சை அளிக்கும் மருத்துவரால் மிகவும் லேசான / லேசான அறிகுறிகள் உள்ளதாக உறுதி செய்யப்பட வேண்டும்.
- அத்தகைய நபர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான வசதி இருத்தல் வேண்டும். அறையுடன் கழிப்பறை இணைந்து இருக்கும் படியான காற்றோட்டமான இடமாக இருத்தல் வேண்டும்.
- 24 மணி நேரம் கண்காணிக்க கூடிய நபர் அருகில் இருக்க வேண்டும். தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து, ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தனிமையில் இருக்கும் நாட்களில் கண்காணிக்கும் நபர் மருத்துவமனையுடன் தொடர்பில் இருத்தல் வேண்டும்.
- மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் தனது உடல் நிலை குறித்து பகிர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- சுய தனிமைப்படுத்துதல் குறித்து உறுதி அளிக்க வேண்டும். தனிமைப்படுத்துதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்ற உறுதி அளிக்க வேண்டும். இந்த உறுதியின் பேரிலேயே வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க முடியும்.
- ஆரோக்கிய சேது செயலியை தறவிறக்கம் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு நந்தம்பாக்கம் வணிக மையத்தில் தனிமைப்படுதலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொற்று குறைந்ததும், இந்த வசதி விலக்கப்பட்டன. தனியார் விடுதிகளில் சொந்த செலவில் தனிமைப்படுத்தலை மேற்கொள்ள முடியும்.
வீட்டு தனிமைப்படுத்துதலிருந்து விலக்கு பெற முடியுமா?
ஆம். தொழில் நிமித்தமாக 72 மணி நேர பயணம் மேற்கொள்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Read the original article in English here.
Also read: