Translated by Sandhya Raju
குற்றங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் சிசிடிவி கேமராவின் அவசியத்தை பறைசாற்ற, நடிகர் விவேக் நடித்த மூன்றாம் கண் என்ற குறும்படத்தை நம்மில் எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம்? மூன்றாவது கண்- 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் அப்போதைய காவல்துறை ஆணையர் டாக்டர். ஏ.கே. விஸ்வனாதன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இதன் பின்னர் நகரத்தில் பரவலாக சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டன.
பொது-தனியார் கூட்டமைப்பு மூலம் கடைக்காரர்கள், வணிகர்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களை இணைத்து, நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.
ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவால் காவல் துறை கண்காணிப்பு அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது. குற்றங்களை கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விதிமீறல்கள் என முக்கிய நடவடிக்கைகளை கையாளுவதில், சென்னையின் மூலைமுடக்குகளில் நிறுவப்பட்ட 2.5 லட்சத்திற்கும் மேலான கண்காணிப்பு கேமாரக்கள் உதவின.
இதனால், பாதுகாப்பு மேம்பட்டு குற்ற செயல்கள் வெகுவாக குறையும் என சென்னைவாசிகள் நம்பிக்கை அடைந்தனர்.
Read more: Look who’s watching: CCTVs across Chennai raise questions and concerns
நிறுவலில் சிக்கல்கள்
பெரம்பூர் மண்டலம் 6, வார்ட் 71-ல் உள்ள வெங்கட்ராமன் கானல் தெருவில் மூன்று டாஸ்மக் கடைகள் உள்ளன. 10 வருடம் முன் தொடங்கப்பட்ட இந்த கடையால் இங்கு அனைத்து சட்டபுறம்பான செயல்களும் நடைபெறுகின்றன. செயின் பரிப்பு, குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது, கிண்டல் செய்வது, வாகன திருட்டு, முறையற்ற பார்கிங் என பல இன்னல்கள் இங்கு உள்ளன.
என் வீட்டு முன்பே இரண்டு முறை என் மனைவியிடம் செயின் பறிக்க முயன்றனர். அக்கம்பக்கத்தாரின் வலியுறுத்தலின் பேரில் புகார் அளித்தோம். இதை தடுக்க மூன்றாவது கண் திட்டம் உதவும் என நம்பினோம்.
எங்கள் பகுதிக்கு ரோந்து பாதுகாப்பை மேம்படுத்தவும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் முதல்வர் குறை தீர்க்கும் மையத்தில் புகார் அளித்தோம். தொடர் கோரிக்கை மூலம் மாண்டலம் 6, வார்ட் 70, வெங்கட் ராமன் தெருவில் 3 கண்காணிப்பு கேமராவிற்கு 2018-ம் ஆண்டு ஏற்பாடு செய்தோம்.
வெங்கட்ராமன் தெரு மற்றும் வெங்கட்ராமன் கானல் தெரு சந்திப்பில் ஒரு வீட்டின் முன் கம்பம் எழுப்ப முயன்றனர், இதற்கு அந்த குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு எழுப்பவே, கம்பத்தை வேறு இடத்திற்க்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. உயர் அதிகாரிகளிடம் பேசியது குறித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் எடுத்துரைத்து, குடியிருப்பு வாசிகளிடம் நானே பேசி சம்மதம் பெறுகிறேன் என கூறினேன்.
கட்டிட சுவரில் மூன்று கண்காணிப்பு கேமராக்களை நிறுவ காவல்துறை அனுமதி பெற்று, சில நாட்களில் அவை நிறுவப்பட்டது.
இதனால் அடுத்த சில வாரங்களில், குற்ற நடவடிக்கைகள் குறையத் தொடங்கின. பல முறை முயன்றும் சரஸ்வதி தெரு, வெங்கட் ராமன் தெரு சந்திப்பில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக பல தெருக்களில் கம்பம் மட்டுமே உள்ளது, இன்னும் கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
பராமரிப்பு சவால்கள்
கேமராக்கள் பொருத்தப்பட்டாலும், பராமரிப்பு சவாலாக அமைந்தது. மழைப் பொழிவில் மரக்கிளை முறிந்து விழுந்ததில், வெங்கட் ராமன் தெருவில் பொறுத்தப்பட்டிருந்த ஒரு கேமரா கீழே விழுந்தது. பழுதடையாமல் இருந்ததால், அது மீண்டும் பொறுத்தும் நிலையில் இருந்தது.
காவல் நிலையத்தின் உதவியை நாடினேன், கன்ட்ரோல் ரூமிலும் புகார் அளித்தேன். சிசிடிவி கேமரா பராமரிப்பு அலுவலர்களின் தகவலை ரோந்து போலீசார் அளித்தனர். அவரும் நடவடிக்கை எடுக்குமாறு பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.
சில வாரங்கள் கடந்தன. பின்னர் இது குறித்து கேட்ட போது, போதுமான பராமரிப்பு ஆட்கள் இல்லை என தெரிவித்தனர், கேமராவை கழட்டி எடுத்துச் சென்றனர்.
ரோந்து காவல் அதிகாரிகளிடம் நானே இதை பொறுத்திக் கொள்கிறேன், இதை செய்யும் போது என்னுடன் இருக்குமாறு மட்டும் கேட்டுக் கொண்டேன், கேமரா பொருத்தும் நேரத்தில் ரோந்து வாகனம் இருக்க அவர் அறிவுறுத்தினார். நானே கேமராவை பொருத்தினேன்.
Read more: All you need to know about filing an FIR in Chennai
தேக்கமடைந்த மூன்றாவது கண்
சில வாரங்களுக்கு முன், வெங்கட்ராமன் தெருவில் திருட்டு சம்பவம் தடுக்கப்பட்டது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் துறையினர், சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளதா என கேட்டனர். நான்கு வருடங்களுக்கு முன் நிறுவப்பட்ட காலி கம்பத்தை அங்கிருந்த மக்கள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.
2020-ம் ஆண்டு மத்தியில் காவல் துறை ஆணையர் மாற்றிய நேரத்தில், மூன்றாவது கண் திட்டம் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதாக கூறினார்கள். கண்காணிப்பு கேமரா நிறுவல் மற்றும் கண்காணிப்பு பணி அவர்கள் வசம் இல்லையென்றும் அந்தந்த குடியிருப்புகள் அல்லது வணிக வளாகங்கள் தாங்களாகவே இதை செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
இந்த பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தேர்ந்த நிறுவனத்தை அறிமுகப்படுத்தினர். முயற்சி செய்து பார்க்கலாம் என குடியிருப்பு வாசிகாள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். அடுத்த நாள் அந்த நிறுவன பொறியாளர்கள் வந்து, அதற்கான செலவை கூறினர், இது மிக அதிகமாக இருந்தது. இது கட்டுப்படியாகாது என பார் விலகினர், சிலர் வேறு வழியின்றி தங்காள் வீட்டில் தனியாக கேமராவை அமைத்துக் கொண்டனர்.
தணிக்கை சுட்டிக்காட்டிய குறைபாடுகள்
இந்த தகவாலி தொடர்ந்து, எங்கள் பகுதியிலும் அண்ணாநகர் பகுதியிலும் கண்காணிப்பு கேமரா குறித்த நிலையை தணிக்கை செய்ய எண்ணினேன்.
- கடந்த சில வருடங்களாக சரியான பராமரிப்பின்றி பல இடங்களில் இவை வேலை செய்யவில்லை. கேமராக்கள் உடைந்து தொங்கிக் கொண்டிருப்பதை சில இடங்களில் காண முடிந்தது.
- கேமராவிலிருந்து டிவிஆர்-க்கு செல்லும் கேபிள்கள் அறுபட்டு இருந்ததை காண முடிந்தது.
- எங்கெல்லாம் கேமரா வேலை செய்ததோ, அங்கு கேமராக்கள் ரோட்டின் தரை அல்லது சுவற்றை பார்த்துக் கொண்டிருந்தது. சாலை சந்திப்புகளிலும் இதே நிலை தான்.
- இன்டெர்ன்ட் கேபிளுடன் கேமரா கேபிள்கள் சுற்றிக்கொண்டதால், வேலை செய்யவில்லை என்பதை காண முடிந்தது.
- கண்காணிப்பு கேமராக்களின் காவல் துறை கட்டுப்பாடு அறை கேட்பாரற்று இருந்தது.
பாதிப்புக்குள்ளாகும் மக்கள்
சென்னையின் தெருக்களை பாதுகாப்பாக மாற்ற கோடிக்கணக்கான வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்ட மூன்றாவது கண் திட்டம் மெல்ல அதன் முடிவை சந்தித்துள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் என்றாலும், ஆட்சி அல்லது அதிகாரி மாற்றத்தினால் இவை கிடப்பைல் போடப்படுகிறது.
அனைத்து நேரங்களிலும் காவல் துறை நமக்கு துணையாக இருக்க முடியாது என்பதை மக்கள் அறிந்திருந்ததால், இந்த கண்காணிப்பு கேமரா இந்த சவாலை பூர்த்தி செய்தது.
சிசிடிவி கண்காணிப்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தன்மையுள்ளது. நகரத்தின் கட்டமைப்பு தேவையை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
சென்னை முழுவதும் உள்ள பாதுகாப்பற்ற இடங்களை சட்டம் ஒழுங்கு துறையின் மூத்த அதிகாரிகள் அடையாளம் கண்டு, குடியிருப்பு சங்கங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் இணைந்து, பாதுகாப்பான குடியிருப்பு பகுதிகளாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இந்த முயற்சியை மேற்கொண்டால், வருங்காலத்தில் நன்மை பயக்கும்.
முடக்கப்பட்ட இந்த திட்டத்தை புணரமைப்பதன் மூலம் மேம்பட்ட பாதுகாப்பான வசிக்கும் இடமாக சென்னையை மாற்ற முடியும்.
(Read the original article in English here.)