Translated by Sandhya Raju
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை 2185 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), தரவு தெரிவிக்கிறது. கூடுதலாக, சென்னை மாநகராட்சியின் தரவுகள் படி, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சென்னையில் 100 பேரும், செப்டம்பர் மாதத்தில் 129 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இருந்த 2410 (MoHFW) என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.
மாநிலத்தில் மழைக்காலம் தொடங்கியதும் இந்த நிலை வரும் என்பதால் இது ஒன்றும் புதிதல்ல. 2020 ஆண்டு முன்பு வரை மாநிலத்தில் அதிக அளவு பாதிப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போதைய பெருந்தொற்று காலத்தில் சுகாதார மற்றும் நிரவாகத் துறையின் முழு கவனமும் தொற்று பரவலை தடுப்பதில் உள்ளதால், டெங்கு காய்ச்சல் கவலை அளிப்பதாக உள்ளது.
சென்னைவாசிகள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகர்களிடம் கொசுக்கள் உற்பத்தி மற்றும் டெங்கு பரவலை தடுப்பது குறித்தும் உரையாடிய போது, இது வெறும் சுகாதார பிரச்சனை மட்டுமல்லாமல் குடிமை (சிவிக்) பிரச்சனையும் ஆகும் என தெளிவாக தெரிகிறது.
Read more: How can Chennai keep dengue at bay in the rainy season?
சென்னையின் கால்வாய்களும் டெங்கு பரவலும்
அவர்கள் வசிக்கும் இடங்களில் சரியான பாதாள சாக்கடை வசதிகள் இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் மோசமான பராமரிப்புடன் உள்ளதாக பெரும்பாலானவர்கள் கூறினர். மடிப்பாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகளை மேற்கோள்காட்டி சமூக ஆர்வலர் ராமா ராவ் கூறுகையில், இந்த பகுதிகள் 2011 முதலே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லையில் கொண்டு வரப்பட்டாலும், இன்னும் இங்கு சரியான பாதாள சாக்கடை அமைப்பு இல்லை என தெரிவித்தார்.
இது போன்ற சூழலில், இங்கு டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பது கடினம். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுகள் மழை நீர் வடிகாலில் விடப் பட்டு, அது அடைபடுவதால், சாலையிலிருந்து நீர் வடிதலை தடுக்கிறது,” என்கிறார் ராமாராவ். சாலையில் தேங்கும் நீர், கொசுக்களின் உற்பத்தி கூடமாக மாறுகிறது.
NGO Chitlapakkam Rising உறுப்பினரும் சித்தலப்பாக்கத்தில் வசிக்கும் தயானந்த் கிருஷ்னன் இதே கருத்தை முன் வைக்கிறார். “சாலையை விட இங்குள்ள மழை நீர் வடிகால்கள் ஒரு அடி உயரத்தில் உள்ளதால், நீர் வடிகாலுக்குள் செல்வது சவாலாக உள்ளது.” “அதனால் மிதமான மழை பெய்தாலும் இங்கு மழை நீர் தேங்குகிறதி. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகிறது,” என்கிறார் அவர்.
அதிகர்ரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ஒவ்வொரு முறை புகார் அளித்ததும் பஞ்சாயத்து பாணியாளர்கள், தண்ணீரை கைமுறையால் தள்ளி விடுகிறார்கள், இது எப்படு நிரந்தர தீர்வாகும் என கூறுகிறார். “சாலைகளில் சரிவுகள் முறையாக அமைத்தால் தான் தண்ணீர் தானாக வடிகாலுக்கு செல்லும். சரியான உயரத்தில் வடிகால்கள் அமைக்கப்பட்டு, அடைப்பு இல்லாமல் பராமரிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.” (சிட்லப்பாக்கம் டவுன் பஞ்சாயத்து சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கு உட்படுத்தப்பட்டது; எனினும் எந்த மண்டல அலுவலரும் அங்கு நியமிக்கப்படவில்லை மற்றும் குடிமைப் பிரச்சினைகள் இன்னும் பஞ்சாயத்து நிர்வாகத்தால் கையாளப்படுகின்றன)
Read more: Tambaram has a new Corporation, but not all residents are happy
கொசு மருந்து தெளிப்பில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டாலும், டெங்கு பரவலை தடுக்க இன்னும் நிறைய வேலைகள் உள்ளது என கூறுகிறார் ஆதம்பாக்கத்தில் வசிக்கும் தமிழ்செல்வி. செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் அருகில் வசிக்கும் இவர், இந்த பகுதி முழுவதும் குப்பை போடும் இடமாக மாறியுள்ளது என்கிறார்.
“இந்த பகுதியின் சில சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டும் சில ரயிவே துறைக்கு உட்பட்ட பகுதியாகவும் உள்ளதால், சிக்கல் எழுகிறது. ஆனால், இந்த சிக்கலால், அவதிப்படுவது நாங்கள் தான். குப்பைகள் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.” என கூறுகிறார்.
சென்னை மாநகராட்சி என்ன செய்கிறது?
15 மண்டலங்களில், 200 வார்டுகளிலும் 3200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு தோறும் சென்று தேங்கியுள்ள நீரை அகற்றுகின்றனர் என்கிறார் துணை ஆணையர் (சுகாதாரம்) Dr. மனீஷ் நர்னாவாரே, ஐஏஎஸ். ஒரு பணியாளர் நாள்தோறும் சுமார் 80 வீடுகளுக்கு செல்கிறார்.
கடந்த ஆண்டு, பெருந்தொற்று காரணமாக, மாநகராட்சி பணியாளர்காள், வீட்டினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. “ஆனால், இந்த ஆண்டு, வீட்டினுள் சென்று தேங்கிக் கிடக்கும் நீரை அகற்ற அனுமதிக்கப்படுகிறார்கள், உதாரணமாக, பிரிட்ஜ்க்கு பின்னால் தேங்கும் நீர்.” என பகிர்ந்தார் நகர சுகாதார அலுவலர் Dr எம் ஜெகதீசன். இதே போன்று வணிக வளாகங்காளிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மாநகராட்சி பணியாளர்கள் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், சென்னை மாநகராட்சியின் பரந்த எல்லையை கருதினால், ஒவ்வொரு பகுதியிலும் இதை மேற்கொள்வது சவால் தான் என ராமாராவ் ஆமோதிக்கிறார். தன் பகுதியிலேயே உள்ள காலி இடங்கள், சிதிலடைந்த கட்டிடங்கள் மற்றும் தனியார் இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் செல்வதில்லை.
” பல வருடங்களாக இவை பராமரிக்கப்படாமல் உள்ளதால், காய்ந்த இலைகள் சருகுகள் ஆகியவற்றால் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி இடமாக மாறுகிறது, மா நகராட்சி பணியாளர்கள் இந்த இடங்களை சுத்தம் செய்வதில்லை.” என மேலும் கூறினார்.
இதற்கிடையே,மால்கள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வ்ழி வகுத்தால், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. தனி வீடெனில், முதல் நடவடிக்கையாக எச்சரிக்கப்படுவர், இரண்டாம் முறை ₹100, மூன்றாவது தடவையாக ₹500 அபராதம் விதிக்கப்படும். இதுவே அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியாக இருந்தால், முதல் எச்சரிக்கையாக ₹500, இரண்டாவது முறை ₹5000 மற்றும் மூன்றாவது முறை ₹15000 அபராத தொகையாக வசூலிக்கப்படும். பிற வளாகங்கள், அரசு கட்டிடங்களுக்கு முதல் முறை ₹10000, இரண்டாவது முறை ₹25000, மூன்றாவது முறை ₹1,00,000 அபராதமாக வசூலிக்கப்படும்.
சென்னையின் பல்வேறு மண்டலங்களில் கொசு மருந்து புகையூட்டி போடப்படுவதாக துணை சுகாதார ஆணையர் தெரிவித்தார். “கொசு மருந்து புகையூட்டி கொண்ட 55 வண்டிகள், மற்றும் 200-க்கும் மேற்பட்ட கையால் இயக்கப்படும் புகையூட்டியும் தினந்தோறும் உபயோகிக்கிறோம். கழிவு நீர் கலந்த தண்ணீர் தேக்கத்தில் கொசு முட்டையை அழிப்பதற்காக, டிரோன் மூலம் கொசு முட்டை உற்பத்தியை தடுக்கும் ரசாயனம் தெளிக்கப்படுகிறது.
ஆனால் இது சரியான தீர்வல்ல என சில குடிமக்கள் கருதுகின்றனர். இது தற்காலிகமாக கொசுக்களை விரட்டும், ஆனால் மருந்தின் வீரியம் குறைந்ததும் மீண்டும் வந்துவிடும் என்கின்றனர்.
இரட்டை சவால்கள்
டெங்கு பரவலை தடுப்பதில் கோவிட்-19 தொற்று சவாலாக உள்ளதா?
தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டுள்ளதால், தொற்று குறைந்திருப்பதால், பயந்த அளவுக்கு சூழ்நிலை இல்லை என கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ துறையின் தலைவர், Dr பி பரந்தாமன் கூறுகிறார். “கோவிட் தொற்று சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலும் மிதமான அறிகுறியுடனே வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடங்களாக தொற்று சிகிச்சை அளித்து வருவதால், இதன் தன்மை, சிகிச்சை மேலாண்மை ஆகிவையும் பழகி விட்டது.”
ஆனால் இணை தொற்று நோயுடன் வரும் போது சவால் உள்ளதாக தெரிவிக்கிறார் Dr. பரந்தாமன். இணை தொற்று நோய் என்றால் என்ன? இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அது இணை தொற்று நோயாகும். தற்போதைய சூழலில், கோவிட்-19 மற்றும் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்படுவதே இணை நோய்த்தொற்றின் அதிக அச்சுறுத்தல் ஆகும்.
இணை நோய்த்தொற்றுக்கான மருத்துவ அம்சங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்
காய்ச்சல், களைப்பு, தசை வலி, தலை வலி, குமட்டல் போன்ற அறிகுறிகாள் கோவிட்-19 மற்றும் டெங்கு இரண்டுக்கும் உள்ளன. கோவிட் தொற்று உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறும், டெங்கு அறிகுறி உள்ளவர்களுக்கு ரத்தப்போக்கும் இருக்கும். இரண்டு தொற்றுகளும் உள்ள போது வகைப்படுத்துவது சற்று கடினம்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) பரிந்துரைக்கும் சில சிகிச்சை வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- தொற்று அறிகுறி ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
- ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பதன் மூலம் டெங்கு தொற்றை கட்டுப்படுத்த ஆரம்ப நிலை சுகாதார பாதுகப்பை வலுப்படுத்துதல்.
- இவர்களை தீவிரமாக கண்காணித்து அடுத்த கட்ட நோய் நிலைக்கு செல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
- கடுமையான டெங்கு மற்றும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
காய்ச்சலுக்கான அடிப்படை காரணத்தை அறிய சில முழு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். “சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்றை உறுதிபடுத்தும் வகையில் பரிசோதனை முடிவு அமையும்.” எனக் கூறும் Dr பரந்தாமன், சரியான சிகிச்சையை அளிக்க அனுபவமும் அறிவாற்றலும் அவசியம் என்கிறார்.
“டெங்கு மற்றும் கோவிட் என இரண்டு இணை நோய்கள் ஆபத்தானவை, இரத்த பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதோடு மூச்சுத் திணறல், ரத்தப்போக்கு ஆகியவையும் ஏற்படும். எந்த நோய் தீவிரமாக உள்ளது எனபதை காண்டறிந்து அதற்கான சிகிச்சைக்கு முன்னுரிமை அளித்து கூடவே மற்ற நோய் தொற்றுக்கும் சிகிச்சை அளிக்கிறோம்.” என மேலும் அவர் விளக்கினார்.
காய்ச்சல் அறிகுறியுடன் வருபவருக்கு இரண்டு நோயுக்கான பரிசோதனையும் மேற்கொள்கிறோம் என ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் உட்பிரிவு மருத்துவ அதிகாரி Dr ரமேஷ் தெரிவித்தார். “இவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்து, காலை மாலை என இரண்டு வேளையிலும் பிளேட்லட் எண்ணிக்கையை பரிசோதிக்கிறோம்,” என மேலும் அவர் கூறினார்.
[Read the original article in English here.]