Chennai anganwadis would surprise many; here’s why

Many of Chennai's 1350 anganwadis under the ICDS scheme are clean, well-equipped with teaching aids, toys and run by dedicated teachers who take a holistic view of the needs of a toddler. Here's a sneak peek into a few such centres.

For our readers in English

Chennai has over 1350 Anganwadis under the ICDS. Contrary to popular perception, many of these centres are clean, well appointed with teaching aids, toys etc (maybe lacking in infrastructure as compared to private playschools and daycare centres) and well run by dedicated teachers and employees who take a holistic view of the daily needs of a 2/3 year old child. In addition, many anganwadis also serve as centres for spreading awareness about maternal and child health, importance of nutrition during pregnancy and early childhood, vaccination etc

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம் (ICDS) – ஒரு பார்வை

பொருளாதாரத்தின் எந்நிலையில் இருந்தாலும், தேவை கருதியோ இல்லை விருப்பத்தின் பெயரிலோ குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்லும் காலமிது. பள்ளி செல்லும் வரை குழந்தைகளை பாதுகாப்பது யார் என்ற பிரதானமான கேள்வி இன்று அனைத்து பெற்றோர்கள் மனதிலும் உண்டு. அதே போல மற்றவர்களுக்கும் அடுத்து செல்ல போகும் ஆரம்ப பள்ளிகளுக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும்.

விதவிதமான ‘மழலையர் பள்ளிகள்’ (Play School) இன்று அதற்கான ஒரு பதிலாக இருக்கிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், தூங்கும் வசதி, கொஞ்சம் கல்வி என்ற வசதிகளோடு அவை செயல்படுகின்றன. Play School என்றவுடன் தனியார் பாடசாலைகள்தான் இங்கு பெரும்பாலானவர்களுக்கு தெரிகிறது. பெரும்பாலான தனியார் மழலையர் பள்ளிகள் நண்பகலிலேயே முடிந்து விட, தேவைக்கேற்றார் போல் அங்கேயே Day Care வசதிகளும் செயல்படுகிறது.

தனியார் சரி? அரசாங்கம் இப்படி ஏதாவது செய்கிறதா? அரசாங்க பள்ளிகள் போல அரசாங்க Play Schoolகள் உண்டா? சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாமல் இருக்கலாம். 2 முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கான இடம்தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம் – அங்கன்வாடி மையம். அரசாங்க பள்ளிகளில் படித்தவர்கள் சொல்வது போல பால்வாடி.

அரசாங்க பள்ளிகளில் பெற்றோர்கள் சொல்லும் முக்கிய குறை – ‘உள்கட்டமைப்பு’. தனியாருக்கும் அரசாங்கத்திற்குமான மிக முக்கிய வேற்றுமை இது. ‘பார்த்த உடனே சொல்லிடலாம் – இது அரசாங்க பள்ளியா இல்லை தனியார் பள்ளியான்னு. அப்புறம் கழிவறைகள். ஒன்னு இருக்காது..இல்ல மோசமா இருக்கும். அப்புறம் ஆசிரியர்கள் எவ்ளோ தூரம் நல்லா அக்கறை எடுத்துக்கராங்கன்னும் இருக்கு’  என்றார் பெற்றோர் ஒருவர். அவர் சொல்வதுதான் பெரும்பாலனவர்களின் கருத்தாக இருக்கிறது. அது உண்மையும் கூட. இந்த ஒரு காரணத்தினாலும், அரசாங்க அங்கன்வாடி மையங்கள் நம் கண்களுக்கு புலப்படாமல் இருந்திருக்கலாம்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம் – ஒரு பார்வை

சென்னையில் இருக்கும் பெரும்பாலான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம் உள்கட்டமைப்பில் மிக சிறப்பாக இருக்கிறது. மாநகராட்சி இடத்தில் செயல்படும் இந்த மையத்தில், குழந்தைகள் விளையாட / பாடம் கவனிக்க / உறங்க ஒரு அறை, ஒரு சமையலறை, மரம் செடிகொடிகள் வளர்ப்பதற்கு என ஒரு இடம், திறந்த வெளி விளையாட்டு இடம், குழந்தைகளுக்கான கழிவறை உண்டு.

காலை 8.30 மணி மாலை 3.30 வரை செயல்படும் இந்த மையங்களுக்கு குழந்தைகள் 9.30 மணி முதல் வரத்துவங்குகிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு பேசு பொருள் அவர்களின் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு இந்த ஏப்ரல் மாதம் செடி, கொடிகளுக்கான மாதம். இது போல் ஒவ்வொரு மாதமும்.

மாதம் பேசுபொருள்
ஜூன் என்னைப் பற்றி
ஜூலை பூக்கள்
ஆகஸ்ட் காய்கறி, கனிகள்
செப்டெம்பர் பொம்மைகள்
அக்டோபர் தண்ணீர்
நவம்பர் போக்குவரத்து
டிசம்பர் மிருகங்கள்
ஜனவரி பண்டிகைகள்
பிப்ரவரி நம் நண்பர்கள்
மார்ச் பருவங்கள்
ஏப்ரல் செடி, மரங்கள்
மே பேசுபொருள்களின் மறுபார்வை

அந்தந்த மாதத்திற்கான பேசுபொருள்களுக்கான தொடர்புடைய பொருட்கள் குழந்தைகள் பார்க்கும் பிரதான இடங்களில் வைக்கப்படும். அது தொடர்புடைய ஓவியங்கள் கரும்பலகையில் வரையப்படும். உதாரணத்திற்கு நவம்பர் மாதம் போக்குவரத்திற்கு தொடர்புடைய பேருந்து, ரயில், விமானம் போன்ற பொம்மை சாதனங்கள் பிரதான இடங்களின் வைக்கப்பட்டு, அந்த ஓவியங்கள் கரும்பலகையின் வரையப்படும்.

தினசரி பயணம்

ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் ‘வட்டமாக’ அமரவைக்கப்பட்டு, அன்றைய நாள் துவங்கும்.

10 மணி முதல் 10.15 வரை அந்த மாதத்திற்கான, ‘பேசுபொருள்’ குறித்து உரையாடல்கள் நடக்கும். குழந்தைகள் அந்த பொருட்களை சரியான அடையாளம் கண்டு, நடைமுறை வாழ்வில் அவற்றின் உபயோகம் குறித்தும் தெரிந்துகொள்கிறார்கள்.

10.15 – 10.45 – அறிவாற்றல் அபிவிருத்தி, பின் சிற்றுண்டி / கழிவறை நேரம் முடிந்து, 11 மணிக்கு மொழி வளர்ச்சி, அதன் பின் சில உடற்பயிற்சி, சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சி முடிந்து 12 மணிக்கு மதிய உணவி இடைவேளை. 1 மணி முதல் 3 மணிவரை சிறு குழந்தைகளும், 1 முதல் 2 வரை வயதில் மூத்த குழந்தைகளும் உறங்க, 2 மணி முதல் அவர்களுக்கு ‘பள்ளி தயாராகும் செயல்பாடுகள் கற்பிக்கப்படும். 3 முதல் விளையாட்டு துவங்கி 3.30 மணிக்கு மையம் அன்றைய தினத்தை முடித்துக்கொள்ளும்.

ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு விதமான மதிய உணவு. வாரத்தில் 3 நாட்களில் முட்டை. வாரத்தில் 1 நாள் பயறு அல்லது சுண்டல்.

சில அங்கன்வாடி மையங்கள் அவர்களாகவே முன்வந்து குழந்தைகளோடு இணைந்து, பண்டிகைகள் கொண்டாடுவது. அவர்களுக்கான போட்டிகள் நடத்துவது என்றும் செய்கிறார்கள்.

அங்கன்வாடி – ஆதி முதல் அந்தம் வரை

குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் பார்வையிலிருந்து இவையாவும் ஒரு அங்கன்வாடி மையத்தில் நடக்கிறது. ஆனால் இத்தோடு முடிந்துவிடுவதில்லை என்கிறார் முகப்பேர் கிழக்கு அங்கன்வாடி பணியாளரான திருமதி.ராணி.  ‘ஒரு பகுதியில் தேர்வு செய்யப்பட்ட மையத்தில் சுற்றியிருக்கும் 1000 முதல் 2000 மக்கள் தொகை கணக்கு முதலில் எடுக்கப்பட வேண்டும். இந்த மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் நோக்கமாக 6 பிரிவுகள் உள்ளன –

  1. இணை உணவு வழங்குதல்
  2. தடுப்பூசி போடுதல்
  3. முறைசாரா முன்பருவ கல்வி அளித்தல்
  4. மருத்துவ பரிந்துரை
  5. மருத்துவ பரிசோதனை
  6. சத்துணவு மற்றும் சுகாதார ஊட்டச்சத்து கல்வி.

இந்த திட்டங்கள் யாவும் மக்களுக்கு சரியாக போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மையத்திலும் இருவர் பணியமர்த்தப்பட்டார்கள் – ஒரு பணியாளர் மற்றும் ஒரு உதவியாளர்.

எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதலில் கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சுகாதார கல்வி வழங்கப்படும். ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க தடுப்பூசி போடுதல், சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை, குழந்தையை மருத்துமனையில்தான் பெற்றெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வழங்கப்படும்.  அது மட்டுமில்லாது கர்ப்பம் தரித்த காலம்தொட்டே அவர்களுக்கான ‘இணை உணவும்’, குழந்தை பிறந்த பின், பாலூட்டும் சமயத்தில் 5 மாதம் வரை தாய்க்கும், அதன் பின் குழந்தையின் 5 வயது வரை இணை உணவு வழங்கப்படும்.

அடுத்ததாக குழந்தையின் எடை மாதாமாதம் கணக்கிடப்பட்டு, அது சரியான எடைதானா என உறுதிசெய்யப்படும். பின் 1 வயதான குழந்தை பெரியவர்கள் போல அனைத்து உணவுகளும் உண்ணலாம் என்ற விசயத்தை மாதாமாதம் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில் விளக்குவோம்.  குழந்தைக்கான தடுப்பூசிகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு, ஒரு குழந்தையின் ஆரம்பகட்ட ‘ஆரோக்ய’ வளர்ச்சி உறுதி செய்யப்படும். ஒரு சமயம் எடை குறைவாக இருந்தால் அதற்கான தீர்வுகளும் சொல்லப்படும்.

அடுத்ததாக 2 முதல் 5 வயது வரை முன்பருவக் கல்வி. நடைமுறை வாழ்வில் பெற்றோர்களின் ஓட்டத்தில் குழந்தைக்கான வளர்ச்சியை நாங்கள் செயல்படுத்துகிறோம். ஒவ்வொரு மையத்திலும் 25 குழந்தைகளோடு அவர்கள் விளையாடும்போது, பயிலும்போது, பகிர்ந்து உண்ணும்போது பல நல்ல விசயங்களை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். பகுதியில் இருக்கும் வளர் இளம் பெண்களுக்கான ‘ஆரோக்கியமான கல்வியும்’ அவர்களை அழைத்து வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அருகில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்றும் சொல்லிக்கொடுக்கிறோம். மாதா மாதம் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டமும் நடைபெறுகிறது.

அரசாங்கத்தின் பங்கு எப்படி உள்ளது? ஒரு மையத்திற்கு தேவையான அனைத்து விசயங்களும் அரசாங்கம் கொடுத்துவிடும். கட்டிட குறைபாடுகள் உள்ள இடங்களில் ஓரளவிற்கு சரிசெய்தும் கொடுக்கிறார்கள். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் தங்களுடைய பங்களிப்பை செய்கிறார்கள். தமிழகத்தில் மொத்தம் இருக்கும் 54439 அங்கன்வாடிகளில் சென்னையில் மட்டும் 1173 முதன்மை மையங்கள், 163 சிறு மையங்கள் என மொத்தம் 1336 அங்கன்வாடிகள் செயல்படுகின்றன். சென்னை தலைநகரமாக இருப்பதால் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.” என்று விரிவான விளக்கம் கொடுத்தார் திருமதி.ராணி.

குழந்தைகளின் சுகாதாரத்தில் அங்கன்வாடியின் பங்கு

போலியோ சொட்டு மருந்து, குழந்தைகளுக்கான வைட்டமின் மருந்து என தமிழக சுகாதாரத்தில் அங்கன்வாடி மையங்கள் ஒரு முக்கிய பங்களிப்பை உண்டாக்குகிறது. பொருளாதாரத்தின் எந்த நிலையில் இருப்பவர்களும் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு, இந்த மையங்கள் ஒரு ஆரம்ப புள்ளியாகவும் செயல்படுகிறது.

குறைகளே இல்லையா என்ற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும். நிச்சயம் குறைகளும், சவால்களும் உண்டு. முதலில் பற்றாக்குறை. பல அங்கன்வாடியில் நிரப்பப்பட வேண்டிய இடங்கள் உண்டு. ஒரு பணியாளரே சில நேரங்களில் 2 மையங்களை பார்த்துக்கொள்ள வேண்டியதும் உள்ளது. பணியாளர் இல்லாது உதவியாளரே எல்லா பணிகளையும் செய்ய வேண்டிய மையங்கள் உண்டு. இருவரும் இருந்தாலும் சில நேரங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் வேலைகள் கூட கொடுக்கப்படுகிறது. சில இடங்களில் சில அரசியல்வாதிகள் அங்கன்வாடியின் இடத்தை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் மீறி குழந்தைகளுக்கு சரியான வளர்ச்சி வேண்டும் என்று அர்ப்பணிப்போடும், அன்போடும் கவனித்துக்கொள்ளும் மனிதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில தனியார் நிறுவனங்கள் செய்யும் பணியை பலர் செய்வதும் மிக தேவையானதும் கூட.

காய்கறிகள் குறைவாக உள்ள சமயம் பெற்றோர்களே தினம் தன் குழந்தையிடம் ஒரு காய் கொடுத்து அனுப்பும் ‘அட்சய பாத்திரம்’ போன்ற திட்டங்களை கூட ஒரு மையத்தில் காண முடிந்தது.அங்கு தன் குழந்தையை அழைக்க வந்த பெற்றோரிடம் பேசியபோது, ‘இங்கு வருவதற்குமுன் சில தனியார் பள்ளிகளையும் பார்த்தோம். தனியார் பள்ளியின் தரத்தை இங்கும் காணமுடிந்தது. மேலும் தனியார் பள்ளிகளில் மதியத்தில் பிள்ளைகளை அழைத்து செல்ல வேண்டும். இங்கு மதியம் 3.30 வரை கவனித்துக்கொள்கிறார்கள். பிள்ளைகள் அனைவருடனும் சேர்ந்து சாப்பிட்டு, விளையாடுவது அவர்களுக்கு மகிழ்சியாக உள்ளது. முடிந்தவரை எங்களின் பங்களிப்பையும் தருகிறோம்’ என்றார்.

3 வயது வரை அங்கன்வாடியில் இருந்தாலும், அரசாங்கத்தின் கொள்கையில் மழலையர் பள்ளி  (LKG, UKG) இல்லாத காரணத்தால், அதற்காக தனியார் பள்ளிகள் நோக்கி செல்லும் பெற்றோர்கள் உண்டு. 2 முதல் 3 வயது குழந்தைகளுக்கும், 3 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதில் அங்கன்வாடியில் வேறுபாடுகள் இருந்தாலும், அவை மழலையர் பள்ளி போல ஆவதில்லை. மழலையர் பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் விசயங்கள் அங்கன்வாடி மையத்திலேயே சொல்லிக்கொடுக்க அரசாங்கம் முனைப்பு காட்டலாம்.

அங்கன்வாடியில் சேர்க்க நாங்கள் தயார். அதனை எப்படி இனம்காண்பது என்று கேட்பவர்களுக்கு – http://icds.tn.nic.in/Know_your_AWW_AWH_AWC.html

சென்று பார்வையிடுங்கள். ஒரு தனியார் Play Schoolல் கேட்கும் அத்தனை கேள்விகளையும் இங்கும் கேளுங்கள். உங்கள் குழந்தைக்கு அங்கன்வாடி சரியான தேர்வாக இருக்கும் சமயம், உங்கள் குழந்தையோடு, அந்த அங்கன்வாடியையும் வளர்க்கும் நோக்கம் கொள்ளுங்கள். ஒரு சரியான வளர்ச்சி அமையட்டும்.

பி.கு : இந்த கட்டுரையாளர் கல்வியை அரசாங்கம்தான் கொடுக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தை கொண்டவர் இல்லை. கல்வியை யார் வேண்டுமானாலும் – அரசோ தனியாரோ தரலாம் – அது அரசாங்கத்தின் நிதியின் மூலம் இலவசமாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை உடையவர்.

Comments:

  1. Lithersan says:

    அரசாங்கத்தின் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்காமல் மழலை குழந்தைகளுக்காக சீரிய முறையில் சிறப்பாக செயல்படும் அங்கன்வாடி மையங்கள் குறித்த செய்தியை ஆவணப்படுத்தி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ! அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த செய்தி பரவலாக சென்றடைய அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் , சமூக ஆர்வலர்கள் முயற்சி எடுக்க வேண்டும் !

  2. Prabu Muralikrishnan says:

    மகிழ்ச்சி…..இக்கட்டுரை பால்வாடியை பற்றி முழுதும் தெரியாமல் குறை கூறும் நபர்களுக்கு சமர்ப்பனம்…எனக்கும் பால்வாடிக்குமான தொடர்பு தாய்,மகனை போன்றது..இதில் பணிபுரிவோரின் கஷ்ட நஷ்டங்களை சொல்லி மாளாது.. தனியார் பள்ளிகளை போன்று பணியாளர்களுக்கு கூடுதல் சுமை இல்லாமலிருந்தால் இன்னும் அதிகப்படியான கவனம் குழந்தைகள் மீது திரும்பும்….பால்வாடியா?? என்ற அலட்சியம் செய்வோருக்கு இந்த கட்டுரை அவசியம் புரிதலை ஏற்படுத்தும்…இந்த கட்டுரை பெற்றோர்களின் ஐயங்களை களைந்து அங்கன்வாடியை நாடிச் செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை….சகோதரர் அவர்களுக்கு ஓர் சிறிய(பெறிய) வேண்டுகோள்…இதே போன்று ஒரு கட்டுரை அங்கன்வாடி பணியாளர்களின் துயரங்களையும்,போரட்டங்களையும் தோலுரித்து ஆட்சியாளர்களின் செவிகளை கிழிக்கும் படி எழுத வேண்டுகிறேன்…..நன்றி…மின்னல் மு.பிரபு

  3. Kabali Palamalai says:

    I have great respect for his views and service. And this article too so well written. This enthuses me to visit an anganwadi near my house.

  4. Mou_Lee says:

    Instead of attracting blames from public for poor infrastructure,all other institutions could learn from this branch on maintaining a resourceful and enabling environment. Preferring these government institutions will sow equality in their minds right from childhood… An eye opener

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Similar Story

Mumbai Buzz: Two die in a manhole accident | Metro 3 trials begin and more…

Other news in Mumbai: Two children suffocate to death in abandoned car; Bombay HC rap for demolishing galas; Leopard captured at Vasai.

Two die, third critical after falling into manhole Mumbai continues to see tragic accidents related to manual scavenging and deadly manholes. Two people died and a third is critical after falling into a 30-foot-deep manhole in Malad. The manhole was connected to a drain pipe on the site of a private under-construction building at Pimpripada in Malad east. Raju, who was a worker at the site, fell in and after that two nearby residents, Aqib and Javed jumped to save him. When none of them came out, the locals called the fire brigade to rescue them. According to the preliminary…

Similar Story

Chennai Buzz: RTE admissions begin | Anna Nagar to get new parking system… and more!

In other news from Chennai: GCC urges residents to pay property tax; Government plans to denotify a part of Pulicat bird sanctuary

TN government's plans to denotify a portion of Pulicat Bird Sanctuary raise concerns Thirteen revenue villages were included within Pulicat Bird Sanctuary boundary limits in 1980. The state government has now begun rationalising its boundaries raising concerns over the shrinking of the sanctuary’s eco-sensitive zone (ESZ). According to a news report, a proposal for the use of 215.83 hectares of non-forest land for the development of an industrial park inside the ESZ, and 5 km from the bird sanctuary was discussed during the 77th meeting of the Standing Committee of National Board for Wildlife held in January 2024. With the…