முதல் பாகத்திலே, எனக்கு Bala Vidyalaya பள்ளியை நடத்திடும் அந்த மூன்று பெண்மணிகளைக் காண வேண்டும் என்று சொல்லி இருந்தது ஞாபகம் இருக்கிறதா? நான் கேட்டவுடனேயே பள்ளியை நடத்திடும் ஒருவரான திருமதி டாக்டர் வள்ளி அண்ணாமலை அவர்கள், என்னை அவர்கள் இல்லத்திற்க்கே அன்புடன் அழைத்து, திருமதி சரஸ்வதி நாராயணஸ்வாமி உடன் இருக்க , மிக பொறுமையாக, செவித் திறன் குறைபாடு உடையவர்களுக்காக அவர்கள் செய்து வரும் தொண்டினை பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். திருமதி சரஸ்வதி நாராயணஸ்வாமி, அவர்களுக்கு தெரிந்த மூன்று குழந்தைகளுக்கு இந்த குறை பாடு உள்ளதை பார்த்து , இவர்களுக்கும், இவர்களைப் போன்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று 48 வருடங்களுக்கு முன் நினைத்தார். USIS நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், இவற்றில் இது பற்றி வெளி வந்த புத்தகங்கள் அனைத்தையும் படித்து, இவர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றார்கள் . அவர்கள் நம்பிக்கை வீணாகவில்லை. அந்த முயற்சி இன்று ஆல மரமாக வளர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட…
Read moreWe need 2 min of your time!
Tell us what matters to you—and help make our stories, data, workshops, and civic resources more useful for you and your city—in this short survey.