TAMIL

Translated by Sandhya Raju கண்ணகி நகரில் வாகன போக்குவரத்தற்ற குறுகிய தெருவில், ஐந்து வயது குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவனை விட வயதில் பெரிய சிறுவர்களின் குழுவுடன் கிரிக்கெட் விளையாடுகிறான். மதிய உணவுக்காக அனைவரும் கலைந்து செல்ல, குமார் மட்டும் தனியாக அங்கயே இருக்கிறான். தெரு ஓரத்தில் உள்ள பெஞ்சில் அமர்ந்து, அடுத்து விளையாட யாரேனும் வருவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கிறான். சாப்பிட போகவில்லையா என கேட்டால் "பசி இல்லை" என்கிறான். ஆனால், உண்மை அதுவல்ல - வீட்டில் நல்ல உணவு இல்லை என்பதே உண்மையான காரணம். சென்னையில் பொதுமுடக்கம் தொடங்கியது முதல் குமார் மதிய உணவு இல்லாமல் இருக்கிறான். பொதுமுடக்கத்திற்கு முன், 23ம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தான் அவன் மதிய உணவு உண்டான். அவனுக்க பிடித்த சாம்பார் சாதம் முட்டையுடன் அல்லது காயுடன் அங்கே பரிமாறப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஆசிரியர் இல்லாமல் மூடியே உள்ளது.…

Read more

Translated by Sandhya Raju கோவிட் 19 தொற்றால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. விற்பனையின்மை, இடம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால், தொழில்கள் மூடுநிலைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நெருக்கடியான தருணத்திலும் வாய்ப்புகள் உருவாகும் என்ற கூற்றின்படி இக்கட்டான இந்த சூழலில் கிருமிநாசினி தெளிப்பான் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் இதற்காக வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி. புதிய வழிகள் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கோவிட்-19 தொற்று உள்ள நபரின் வீடு, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். இது சென்னை மாநகராட்சியின் பொறுப்பு என்றாலும், பணியாளர்கள் தட்டுப்பாடால் இப்பணி தாமதமாகிறது. இதனால் தனியார் சேவையை மக்கள் நாடும் நிலை எழுந்துள்ளது. இதன் விளைவாக ஒரு புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது. பொது முடக்கத்தால், எம் கான் நடத்தி வந்த லெதர் தொழில் மூடும் நிலைக்கு வந்தது.…

Read more

Translated by Sandhya Raju கோவிட்-19 தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் தங்கள் குடும்பத்தினரை பிரிந்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அனைத்து போக்குரவரத்துகளும் நிறுத்தப்பட்டதால், வேலை நிமித்தம் வெளியூர் சென்றவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை. அவசர காரணங்களுக்காக மட்டுமே பயணம் அனுமதிக்கப்பட்டது அல்லது சொந்த வாகனம் வைத்திருந்தவர்கள் பயணிக்க முடிந்தது. ஒவ்வொரு ஊரடங்கு நீட்டிப்பின் போதும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. பல்லாயிரம் கி.மீ தூரம் உள்ள தங்கள் சொந்த ஊர் நோக்கி விருந்தினர் தொழிலாளர்கள் நடக்கத் தொடங்கியதும், மாநிலங்களுக்கிடையே ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழலில், மே மாதம் 25-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை மற்றும் இயக்க முறை குறித்து விரிவான நடைமுறையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விமானப் பயணம் மேற்கொள்ளும் முன் கடைப்பிடிக்க வேண்டியவை…

Read more

Translated by Sandhya Raju 60 வயதான அனிதா மற்றும் அவரின் 65 வயதான கணவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதும், இது அதிர்ச்சியளிக்கும் தகவலாக அவர்களுக்கு அமையவில்லை. "மார்ச் 15 அன்று நியூசிலாந்த்திலிருந்து நாங்கள் திரும்பினோம். எங்களுடன் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கும் தொற்று வரும் வாய்ப்பு உள்ளதை நாங்கள் அறிந்திருந்தோம்," என்கிறார் அனிதா. கோவிட் தொற்றை எதிர்கொண்டதை பற்றியும், தன் அனுபவத்தையும் அனிதா விவரிக்கிறார். தொற்றின் ஆரம்பம் “நியூசிலாந்த் நாட்டில் தொற்று எண்ணிக்கை அந்த நேரத்தில் அவ்வளவாக இல்லை என்பதால் நாங்கள் நாடு திரும்பிய போது சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனாலும், எங்களின் கோட்டூர்புர வீட்டில் நாங்களே எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். இரண்டு நாட்களுக்கு பிறகு எங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நாட்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது. எனக்கு வெகு குறைவான அறிகுறியே தென்பட்டது. முதல் நாள், 100*F வெப்பம் இருந்தது, அடுத்த நாள் 99*F…

Read more

Translated by Sandhya Raju “ஏன் காய் இல்லை, அம்மா? என தன் மகள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என எண்ணிக்கொண்டே கடைகள் மூடியுள்ளன, விரைவில் நல்ல சப்பாடு போடுவதாக கூறுகிறார் கே ஷென்பகம். மாயா, நாயகி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் 38 வயதாகும் ஷென்பகம். ஒரு வரி வசனம் பேசி செல்லும் நபர் அல்லது ஒரு காட்சியில் பின்னணியில் கூட்டத்தில் நடந்து செல்லும் நபர்களை நினைவுள்ளதா? பல பெரிய பட்ஜட் படங்களில் இது போன்ற காட்சிகளில் ஒரு நாளுக்க 300 ரூபாய் சம்பளத்திற்கு ஷென்பகம் நடித்துள்ளார். ஆனால், கோவிட்-19 தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தால் ஷென்பகம் இடிந்து போயுள்ளார். கடந்த சில வாரமாக வெறும் ரசம் சோறு மட்டுமே தன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சூழலை எண்ணி வேதனையில் உள்ளார். "காய்கறி வாங்க முடியாத நிலையை நான் எப்படி…

Read more

Translated by Vadivu Mahendran ஏப்ரல் 15 என்பது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மீன்பிடிப்புக்கு விதிக்கப்படும் 60 நாள் இழுவைத்தடையின் தொடக்கத்தைக் குறிக்கும் நாளாகும். இத்தடையானது இயந்திரவிசை கொண்ட படகுகளை வைத்துள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது. இத்தடையானது சென்னைக் கடற்கரையோரம் குறைந்த பட்ச படகுகளே கடலுக்குள் செல்வதை அனுமதிக்கும். ஆனால் இவ்வருடம் அப்படியல்ல! 15 ஆம் தேதி வங்காள விரிகுடா செயல்பாடுகளால் பரபரப்பாக இருந்தது. நாடு தழுவிய ஊரடங்கின் முதல் கட்டமான 21 நாள் அடைப்பிற்குப் பிறகு ஏராளமான மீனவர்கள் (விசைப்படகுகள் இன்னும் தடைசெய்யப்பட்ட நிலையில்தான் உள்ளன) கடலுக்குள் பயணம் செய்தனர். ஊரடங்கு மேலும் 18 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தபோதிலும் மீன்பிடித்தல் மற்றும் பிறகடல்சார் நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கை இந்த மூன்று வார உள்ளிருப்பில் திவாலான ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு ஒரு நம்பிக்கை கொண்டு வந்தது. "ஊரடங்கு சுனாமியை விட மோசமானது" எஸ். எத்திராஜ் என்கிற 32 வயதான மீனவர்,…

Read more

Translated by Sandhya Raju கோவிட் வைரஸ் தொற்று குறித்து மத்திய அரசு பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. எனினும் தொற்று பராவமல் தடுக்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டாயமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்த சில பொது கேள்விகளும் பதில்களும்: பாதுகாவலர்களும், வேலையாட்களும் கடைபிடிக்கவேண்டியவை? குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வெளியாட்களை இவர்கள் அதிகம் சந்திக்க நேரிடுவதால், இவர்களுக்கு முக கவசம், சோப், போதிய தண்ணீர் வசதி, கிருமி நாசினி ஆகியவற்றை வழங்க வேண்டும். லிஃப்ட் பட்டன்களை கிருமி நாசினியால் துடைப்பது கடினம் என்பதால் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டுமே இதை இயக்க வேண்டும். அவர் இல்லாத சமயத்தில், மக்கள் படிகளில் செல்வது நல்லது என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள். வெளியாட்களிடம் சுவாச சுகாதாரம் (இருமும் போதும், தும்மும் போதும் வாயையும் மூக்கையும் சட்டையாலும், கைக்குட்டையாலும் மூட அறிவுறுத்துதல்),  சோப்பால் கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வை இவர்கள் ஏற்படுத்தலாம். விழிப்புணர்வு…

Read more

Translated by Sandhya Raju கடும் வெயில் கொளுத்தும் ஒரு மதிய நேரம், வெள்ளை, காக்கி உடையில் தன் வாகனத்தை ஜெமினி பாலம் அடியில் நிறுத்தி விட்டு, தலைக் கவசமின்றி வாகனம் ஓட்டிய ஒரு இரு சக்கர வண்டி ஓட்டுனரைபோக்குவரத்து காவலர் இடைமறிக்கிறார். தேனாம்பேட்டையில் பத்து கி.மீ தூரம் தொலைவில் வெவ்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 48 வயது சி.பழனி ஈ3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். தமிழக முதல்வரின் இல்லம் மற்றும் அஇஅதிமுக அலுவலகம் அருகே உள்ள இந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த SIET சந்திப்பு, தேனாம்பேட்டை சிக்னல், ஆள்வார்பேட்டை என கட்டுப்பாட்டு அறை சொல்லும் இடத்தில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் இவர் ஈடுபடுகிறார். இதற்கு முன்னர், ஐந்து ஆண்டுகள், பாண்டி பஜார் சிக்னல் அருகே இவர் பணி புரிந்துள்ளார். எட்டு மணி நேர பணி நேரத்தில்,பல குடும்ப விழாக்களுக்கு…

Read more

Translated by Sandhya Raju " கிண்டியிலிருந்து சென்ட்ரல் (12 கி.மீ. தூரம்) செல்ல ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே கிளம்பினேன், ஆனாலும் கொச்சின் செல்லும் ரயிலை தவறவிட்டேன். சென்ட்ரல் எதிரே உள்ள பாலத்தில் என் வண்டி இருபது நிமிடங்கள் மேலாக நெரிசலில் சிக்கியது. போர்டர் உதவி கொண்டு ரயிலை பிடிக்க வேகமாக ஓடினேன்.  வாகன நெரிசலால், இந்த சாலையை கடப்பதும் அவ்வளவு எளிதல்ல," என்கிறார் வர்த்தக ஆலோசகராக பணி புரியும் கிருத்திகா நாயர். இதுவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 50 நிமிடம் முன்னதாக கிளம்பியிருந்தாலே அவர் நேரத்திற்கு சென்றடைந்திருப்பார். கிருத்திகா போல் பலருக்கும், இந்த நெரிசல் இடர்பாடுகளையே தந்துள்ளது. பூந்தமல்லி சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையிலேயே உள்ளன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே உள்ள பகுதி தான் சென்னையிலேயே மிகவும் போக்குவரத்து நெரிசலான பகுதி; அரை கி.மீ தூரம்…

Read more

Translated by Sandhya Raju காலச் சக்கரம் வேகமாக சூழல, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக நம் நீராதரங்களை பாதுகாக்கும் முயற்சி முன் எப்பொழுதையும் விட மிகவும் தீவிரமாகியுள்ளது. கடந்த வருடங்களில் தண்ணீர் பிரச்சனை சென்னையை வாட்டி வதைக்க, இதை சமாளிக்க பல இடங்களிலிருந்து தண்ணீர் விநியோகிக்கும் நிலை உருவானது. இதே போல் ஒரு சூழல் மீண்டும் உருவாவதை தடுக்க, நீர் நிலைகளை காப்பதே ஆகச் சிறந்த ஒரே வழி. இதற்கு முரண்பாடாக, நம் நகரத்தில் உள்ள ஏரி மற்றும் ஆறுகளை காக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டுவதாக தெரியவில்லை. கொரட்டூர் ஏரியின் சோகமான கதையே இதற்கு சாட்சியாகும். சென்னையின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் இந்த 590 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி தற்போது மரணப்படுக்கையில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம்  இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட ரசாயனம் கலந்த நீர் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இந்த ஏரிக்குள்…

Read more