TAMIL

Translated by KJ Krishna Kumar 2016-17 நிதி ஆண்டு அறிக்கையின் படி "டாஸ்மாக்" அரசு மது விற்பனை நிறுவனத்தின் மொத்த வரவு : 31,247 கோடி , நிகர லாபம் 25.23 கோடி ஆகும். இது 2016 டிசம்பர் உச்ச நீதி மன்றம் 220 மீட்டர் அருகாமையில் உள்ள மதுபான கடைகளை இடமாற்றம் செய்ய இட்ட ஆணையின் படி 3321 டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூடியதினால் வந்த இழப்பையும் தாண்டி. மது விற்பனையால் அரசுக்கு கொழுத்த லாபம் வந்த நேரத்திலும், மதுவால் பாதிக்கப் பட்டோர்களுக்கு திருத்தம் செய்ய என்ன செய்திருக்கிறது / போதுமான அளவு ஏற்பாடுகள் செய்திருக்கிறதா? சமூகநீதி மற்றும் தன்மேம்பாடு அமைச்சகம் நியமித்து AIIMS'சின் தேசிய போதைப்பொருள் மறுசீரமைப்பு மையம் செய்த ஆய்வின்படி மதுவினால் வரும் பிரச்சனைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது தமிழ்நாடு போதையடிமை மறுசீரமைப்பு மையங்கள் எல்லாம் ஒரு அரசு மருத்துவமனையோடோ, பொதுநல மையங்களோடோ இணைக்கப்பட்டு இருப்பதால்,…

Read more

காட்சி 1: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் "ரோடு சரியில்ல ;குடிதண்ணீருக்கு வழியில்ல ;சாக்கடை அடைச்சிருக்கு ;போக்குவரத்து நெரிசல்;பள்ளிக்கூடம் சரியில்ல;மருத்துவமனை ஒழுங்கில்லை; குப்பைத்தொட்டி பிரச்னை, குப்பைமேடு பிரச்னை…”   நாடாளுமன்றத் தேர்தல் களத்தில்  இருக்கும் எல்லா வேட்பாளர்களை நோக்கியும் மக்கள் வீசும் பிரச்னைப் பட்டியல் இது. காட்சி 2:கல்லூரியில் ஜனநாயக விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களை நோக்கிக் கேட்கிறேன் “நாடாளுமன்றத் தேர்தல் வருதே,இதுவரை உங்கள் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரின்(எம்.பி) செயல்பாடு எப்படி இருந்தது,இனிவரப்போகும் எம்.பி என்னென்ன செய்ய வேண்டும்?” "சார், கடுப்பா வருது. எம்.பி. எங்க ஏரியாப்பக்கமே வர்ல. வீட்ல இருந்து காலேஜ் போய்ட்டு வர்றதுக்கு பஸ் ரொம்பக் கம்மியா இருக்கு. கல்லூரி நேரத்திற்கு கூடுதல் பேருந்துகள் விடுங்கனு 4 வருஷமா கேட்கறோம். ஒன்னும் நடக்கல. இப்ப இருக்கற எம்.பி. வேஸ்ட். எங்க ஏரியாப் பிரச்னைய யார் தீர்த்துவைக்கப் போறாங்களோ அவங்களுக்குத்தான் இந்தமுறை ஓட்டுப்போடப் போகிறேன்” என்பது போன்ற பதில்கள் பல…

Read more

Translated by Sandhya Raju பொய்த்து போன மழையினாலும் வெகுவாக குறைந்து வரும்  நிலத்தடி நீராலும்  கோடை காலம் வரும் முன்னரே தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.  சென்னை குடிநீர் வாரியமமும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் தண்ணீர் விநியோகம் செய்யும் நிலையில் உள்ளது. சென்னையின் மேற்கு மற்றும் வடக்கு பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் ஏற்கனவே அவதி படுகின்றனர். இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க புது யுக்தியை கையாள வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 2000-ம் ஆண்டின் மத்தியில் மழை நீர் சேகரிப்பு திட்டம் சென்னையில் செயல் படுத்தப்பட்டாலும், பொய்த்து போன பருவ மழையால் இந்த திட்டத்தின் பலனை உணர முடியாமல் போனது.  உபயோகித்த தண்ணீரை மறுசுழற்சி செய்யும் முறை சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இந்த முறையால்  நீரின் தேவையும் குறைகிறது. அதிக முதலீடு இல்லாமல் இந்த மறுசுழற்சி முறையை எளிதாக செயலாக்க…

Read more

Translated by Sandhya Raju தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்கும் ஏரிகள் சுரண்டப்பட்டதிற்கும் சம்மந்தம் இல்லாமல் இல்லை. நிலத்தடி நீரின் அளவை உயர்த்த உதவும் இந்த ஏரிகளை மக்களும் அதிகாரிகளும் முறையாக பராமரித்து இருந்தால், தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை உருவாகியிருக்காது என்பதே நிதர்சன உண்மை. நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரிகளின் நிலை என்ன என்று பார்ப்போம். நட்டேரி, அன்னேரி, ஜதேரி என இங்கிருக்கும் பல ஏரிகள் குடியிருப்பு பகுதியாக மாறிய நிலையில், பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரி போன்ற சில ஏரிகள் மட்டுமே இன்று இருக்கின்றன. இந்த ஏரிகளும் பரிதாபகரமான அழிவு நிலையில் தான் உள்ளன. வணிக ரீதியாக முன்னேறி இருக்கும் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இரண்டு ஏரிகளும் சந்திக்கும் சவால்கள் ஒன்று தான்: குறைந்து போன நிலத்தடி நீர் மற்றும் கழிவு நீர் குப்பைகளால்…

Read more

Translated by Krishna Kumar சென்னையில் கோடை காலம் இப்போது தான் ஆரம்பம், ஆனால் இப்போதுள்ள நிலைமையை பார்த்தால் கொடூரமாக இருக்கும் என்று தான் கணிக்க முடியும். சென்னையின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான 50% தண்ணீர் மட்டும் தான் நம்மிடம் உள்ளது.பல இடங்களில் தண்ணீர் சேவை வாரம் ஒருமுறை மட்டுமே என்று குறைக்க பட்டுள்ளது. நிலத்தடிநீர் நிலைமையோ கடந்த மூன்று வருடத்தில் குறைவாக உள்ளது மற்றும் ஏரி நீர்தேக்கங்கள் அதைவிட மோசமான நிலை. நிலத்தடி நீர் நிலைமை பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் உள்ள அளவுக்கு இப்போதே தள்ளப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சென்னை சேர்ந்த 24 கிணறுகளில் எடுத்த கணக்கின்படி நிலத்தடி நீர் நிலை வெகுவாக குறைந்துள்ளது - மூன்று ஆண்டுகளில் இதுதான் மோசம். பெரிய மழை வரும் வாய்ப்பு குறைவு என்பதால் இந்நிலை மேலும் மோசமாகத்தான் போகும் என்று எதிர்பார்க்கலாம். குறைந்துவரும் நீர்நிலை மழை மய்யம் (The…

Read more

Translated by Sandhya Raju "பல மாதங்களாக தனிமையில் வாடினேன். என் குடும்பத்தினரிடம் என்னால் மனம் விட்டு பேச முடியவில்லை. தற்கொலை எண்ணத்தை தூண்டக்கூடிய அளவில் கல்லூரி படிப்பு ரொம்பவே அழுத்தம் கொடுத்தது" என்கிறார் பிரபல கல்லூரியில் இறுதி ஆண்டு எஞ்சினீயரிங் பயிலும் ராம். வாழ்க்கையின் இக்கட்டான முடிவை எடுக்கும் முன், ஆன்லைனில் உதவி கிட்டுமா என்று தேடினார். "என்ன தேடுகிறேன் என்று தெரியாமல் என் பிரச்சனையை முன்வைத்து வலைதளத்தில் தேட ஆரம்பித்த பொழுது தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் நம்பர் கிடைத்தது. சும்மா முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தில் எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி தொடர்பு கொண்டேன், ஆனால் அந்த முயற்சி என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது" என்கிறார். WHO ஆய்வின் படி இந்தியாவின் சராசரியை விட தமிழ்நாட்டில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கைமூன்று மடங்கு அதிகம்.   National Crime Records Bureau (NCRB) படி.2015 ஆண்டில், 14,602 தற்கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. நாட்டிலேயே…

Read more

Translated by Sandhya Raju மரத்திலான சமையல் உபகரணங்கள், பேப்பர் மற்றும் துணியிலான பைகள், ஸ்டீல் பாத்திரங்கள் ஆகியவை பிளாஸ்டிக்கு மாற்றாக வலம் வரத் தொடங்கிவிட்டன. வணிகர்கள், உணவு விடுதிகள், மக்கள் என சென்னையில் எந்த மூலையில் பார்த்தாலும் அனைத்து தரப்பினரும் படிப்படியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு மாறத் தொடங்கிவிட்டனர். வணிகர்களை பொருத்த வரை, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள பல்வேறு கலவையான ஒரு வித குழப்பமான சூழலே நிலவுகிறது. அடையாறு ஆனந்த பவன், ஃபசோஸ், ப்லாக் பாக்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்கள் இந்த தடையை ஏற்று உடனடியாக துணி, காகித பை, அட்டை டப்பா, மர கரண்டி என மாறினாலும் சில நிறுவனங்கள் மாற்றத்திற்கு இன்னும் முழுதாக தயாராகவில்லை என்பது தான் நிதர்சனம். மாற்றம் இந்த தடை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு ஆபத்தாக முடியவில்லை. ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் அதிலும் காகித உற்பத்தி நிறுவனங்கள் நிறையவே வரத்…

Read more

Translated by Krishna Kumar வேலைக்கு இடம்பெயர்ந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ‘ரௌடிகள்’ என்றும், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களை பாலியல் ரீதியாக தாராளமானவர்கள் என்று ஏளனமாகவும், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் ‘அழுக்கு’ என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள். உள்ளூர் தேயிலைக்/காபி கடைகளில் இம்மாதிரியாக கோணங்களில் சர்வ சாதாரணமாக கிண்டல் கேலி செய்வது நாமெல்லாம் பார்க்க முடியும்,    சென்னை போன்ற நகரங்களுக்கு குடியேறியவர்கள், பொதுவாக இத்தகைய தவறான அபிப்ராயங்களுக்கு ஆட்படுகிறார்கள். ஜே ஜெயராஜனின் 2013 ஆராய்ச்சி கட்டுரையின் படி  சென்னைக்கு குடியேறுபவர்களில் அஸ்ஸாமில் இருந்து 23 சதவீதம், மேற்கு வங்கத்திலிருந்து 14 சதவீதம், பீகாரிலிருந்து  13.7 சதவிகிதம், ஒடிஷாவிலிருந்து 14.6 சதவிகிதம், ஆந்திராவில் இருந்து 9.5 சதவிகிதம் மற்றும் திரிபுராவிலிருந்து 0.3 சதவிகிதம்.ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களே அதிகரித்து வருகின்றனர். "சென்னையில் உணவு, உற்பத்தி மற்றும் ஆடை துறைகளில் மலிவான கூலிக்கு ஆட்கள் கிடைகாத பிரச்சனைக்கு, வடகிழக்கு…

Read more

Translated by Krishna Kumar தேன்மொழி (புனை) அவள் பெயர், பாந்தியன் சாலையில் ஒரு துப்புரவு பணியாளி.  ஒரு தேய்ந்து போன துடைப்பம், அலுமினிய கூடை மற்றும் கையுறைகள், அவளின் ஆயுதங்கள் . அவற்றின்  நிலை, அவள் சென்னையின் நெருக்கடியான சாலைகளை சுத்தம் செய்யும்போது எதிர்கொள்ளும் இன்னல்களின் பற்பல கதைகள் சொல்லும். அன்று, நவம்பர் 28ஆம் தேதி, ஒரு புதன் கிழமை சற்று தொய்வடைந்து பெருக்கிக்கொண்டிருக்கும்போது பேசுகையில் "அடுத்தமாதம் இந்த வேலையில் நான் இருப்பேனா? என்று சந்தேகம்" என்று கூறி  சலித்து பெருமூச்சு விட்டாள். சென்னை மாநகராட்சியால் நியமனம் செய்யப்பட்ட 8,246 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களில் ஒருவர் அவர். நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் வேலை  பார்த்தால் ரூ 362 கிடைக்கும். இதில் வார விடுமுறை கிடையாது, PF கிடையாது. தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு மண்டலங்களில் குப்பை மேலாண்மையை தனியார்மயப்படுத்தும் திட்டத்தால் தேன்மொழி போன்ற பலர் மனமுடைந்துள்ளனர்.…

Read more

வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல், தமிழ்நாடு அரசு, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீது போட்டிருக்கும் தடை விதிகளை அமல்படுத்தும். இது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், மாநிலத்தில் முன்னொருபோதும் எடுக்கப்படாத நடவடிக்கை. பிளாஸ்டிக் தடை பற்றி பல குடிமக்கள் மத்தியில் இன்னும் குழப்பம் மற்றும் கவலை உள்ளது. அதனை போக்க செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் மாநில அரசாங்கம் தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டிருக்கிறது, ஆனால் தடையை அமல்படுத்த அல்லது ஒரு மாற்று வழிமுறைகளை பின்பற்றுவதில் ஒரு உறுதியான வரைபடத்தை இதுவரை வழங்க தவறிவிட்டது. பல நிறுவனங்கள், குறிப்பாக தொண்டு நிறுவனங்கள், இந்த பிரச்சினையைப் பற்றி பொது மக்களின் உணர்தலை மேம்படுத்த பணியாற்றி வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை மற்றும் பல சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள நம்ம ஊரு பவுண்டேஷனின் நிறுவனர் பி. நடராஜனிடம் வரவிருக்கும் பிளாஸ்டிக் தடையைச் சந்திக்க வேண்டிய யுக்திகள் மற்றும் நம்ம ஊரு பவுண்டேஷனின்…

Read more