Translated by Sandhya Raju " கிண்டியிலிருந்து சென்ட்ரல் (12 கி.மீ. தூரம்) செல்ல ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே கிளம்பினேன், ஆனாலும் கொச்சின் செல்லும் ரயிலை தவறவிட்டேன். சென்ட்ரல் எதிரே உள்ள பாலத்தில் என் வண்டி இருபது நிமிடங்கள் மேலாக நெரிசலில் சிக்கியது. போர்டர் உதவி கொண்டு ரயிலை பிடிக்க வேகமாக ஓடினேன். வாகன நெரிசலால், இந்த சாலையை கடப்பதும் அவ்வளவு எளிதல்ல," என்கிறார் வர்த்தக ஆலோசகராக பணி புரியும் கிருத்திகா நாயர். இதுவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 50 நிமிடம் முன்னதாக கிளம்பியிருந்தாலே அவர் நேரத்திற்கு சென்றடைந்திருப்பார். கிருத்திகா போல் பலருக்கும், இந்த நெரிசல் இடர்பாடுகளையே தந்துள்ளது. பூந்தமல்லி சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையிலேயே உள்ளன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே உள்ள பகுதி தான் சென்னையிலேயே மிகவும் போக்குவரத்து நெரிசலான பகுதி; அரை கி.மீ தூரம்…
Read moreTAMIL
Translated by Sandhya Raju காலச் சக்கரம் வேகமாக சூழல, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக நம் நீராதரங்களை பாதுகாக்கும் முயற்சி முன் எப்பொழுதையும் விட மிகவும் தீவிரமாகியுள்ளது. கடந்த வருடங்களில் தண்ணீர் பிரச்சனை சென்னையை வாட்டி வதைக்க, இதை சமாளிக்க பல இடங்களிலிருந்து தண்ணீர் விநியோகிக்கும் நிலை உருவானது. இதே போல் ஒரு சூழல் மீண்டும் உருவாவதை தடுக்க, நீர் நிலைகளை காப்பதே ஆகச் சிறந்த ஒரே வழி. இதற்கு முரண்பாடாக, நம் நகரத்தில் உள்ள ஏரி மற்றும் ஆறுகளை காக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டுவதாக தெரியவில்லை. கொரட்டூர் ஏரியின் சோகமான கதையே இதற்கு சாட்சியாகும். சென்னையின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் இந்த 590 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி தற்போது மரணப்படுக்கையில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட ரசாயனம் கலந்த நீர் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இந்த ஏரிக்குள்…
Read moreTranslated by Krishna Kumar "கிணத்த காணோம், கிணத்த காணோம்!" - கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலு காவல்துறையிடம் ஒரு திறந்த கிணற்றை காணவில்லை என்று பொய் புகார் கொடுத்து நம்மையெல்லாம் வயிறுகுலுங்க சிரிக்கவைத்த நகைச்சுவை காட்சியை யாரால் மறக்க முடியும். கிணறு ஒன்றை காணோம் எனும்பொழுது அவ்வளவு சிரித்தோம், ஆனால் நிஜத்தில் ஒரு நீர்நிலையே காணாமல் போகும் சாத்தியமுண்டா? அதிர்ச்சியூட்டும் விஷயம் தான், அனால் நடக்கிறது. சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 7 குளங்கள் அப்படிதான் காணாமல் போயுள்ளன. பல வருடங்களாவே இந்த குளங்கள் பொது மக்களாலும், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் போன்ற பல்வேறு அரசு துறைகளாலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. ஒரு காலத்தில் [30 வருடங்களுக்கு முன்] குழந்தைகளும் பெரியோர்களும் அல்லி நிறைந்த இந்த குளங்களில் மீன்பிடித்து மகிழ்ந்தனர் ; பெண்கள் அங்கிருந்து தண்ணீர் எடுப்பது சகஜம். பண்டிகைகளுக்கு விளக்கேற்றி, கரையில் மக்கள் கூடிய காட்சிகள்…
Read moreTranslated by Sandhya Raju ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் ஹிந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்ஸி, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பின், குடியுரிமை திருத்த சட்டம், 2019(CAA) படி இந்திய குடிமகனாக விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 1995 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் படி, இந்திய குடியுரிமை பெற குறைந்த பட்சம் பதினோரு ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் (அல்லது மத்திய அரசாங்கத்த்தில் பணி புரிந்திருக்க வேண்டும்). இப்போழுது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்ததின் படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்த மேற்கூறிய ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்த கால கட்டம் தற்போது ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி அரசு கூறுவது என்ன? இந்த மூன்று நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக தப்பித்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு…
Read moreTranslated by Sandhya Raju 58 வயதுக்கு பின் மாத ஒய்வூதியமாக ஆயிரம் ரூபாய் பெற முடியும் என எத்தனை வீட்டு பணியாளர்காளுக்கு தெரியும்? திருமணம், கல்வி போன்றவற்றிற்கு அரசு நலத்திட்டங்கள் பெற முடியும் என எத்தனை பேருக்கு தெரியும்? இவர்களை விடுங்கள், வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்களுக்கே இதை பற்றி தெரியாது. "மாநில அரசு இந்த திட்டங்களை போதுமான அளவுக்கு மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை, வீட்டு வேலை பார்க்கும் பல பணியாளர்களுக்கு இது பற்றி தெரியவில்லை," என்கிறார் பெண் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் எஸ் பழனிசாமி. இந்த அமைப்பில் முப்பதாயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களின் சமூக மற்றும் நிதி பாதுகாப்பு, அரசாங்கத் திட்டங்களைப் பற்றி அவர்களுக்கு உணர்த்துவது போன்ற செயலில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் வீட்டு வேலை பார்க்க பணியாளர்களை அமர்த்தினாலும், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் துறையில் இவர்கள் இல்லை. மத்திய அளவில் இவர்களின் மேம்பாடு, …
Read moreTranslated by Sandhya Raju மூன்று ஆண்டுகளுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகம் தயாராகி வரும் நிலையில், உள்ளாட்சி செயல்பாட்டில் அதிரடி மாற்றத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகின்றன தன்னார்வ அமைப்புகள். இந்த மாற்றம் நகர்புறம் மற்றும் கிராமப்புறத்தில் தேவை என மேலும் அவை தெரிவிக்கின்றன. என்ன மாற்றங்கள் தேவை என்பதையும், தன்னாட்சி இயக்கம் தலைமையிலான கூட்டணி அமைப்புகள் பட்டியலிட்டுள்ளன. வாய்ஸ் ஆப் பீப்பிள், சட்ட பஞ்சாயத்து இயக்கம், அறப்போர் இயக்கம், தோழன், இளைய தலைமுறை, எச் ஆர் ஆஃப் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, முக்கிய அம்சங்கள் அடங்கிய கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சீர்திருத்தங்களின் அவசியம் மற்றும் பொதுமக்களின் ஆதரவின் அவசியம் குறித்தும், வாய்ஸ் ஆப் பீப்பிள் இயக்கத்தின் உறுப்பினர் சாரு கோவிந்தன் பேசினார். "இந்த கொள்கை அறிவிப்பை எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்ப்பது நம் கையில் தான் உள்ளது. ஆட்சியாளர்கள் கவனத்திற்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் இதன் அவசியம் குறித்து…
Read moreTranslated by Sandhya Raju தமிழகத்தில் தற்போது பெண்கள் மேம்பாட்டை குறிக்கும் நிறம் பிங்க் என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பல்வேறு பகுதியில் பிங்க் நிற காவல் ரோந்து வாகனங்களை பார்த்திருப்பீர்கள். கடந்த ஜூன் மாதம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்களை தடுக்கும் முயற்சியாக தமிழக அரசால், அம்மா ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெண்கள் காவல் நிலையங்கள், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுகள், சிறார் போலீஸ் பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளையும் இந்த CWC (Crime against Women and Children) ஒருங்கிணைக்கிறது. இந்த அம்மா ரோந்து வாகனங்களின் பணி என்ன? இந்த வாகனங்களில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கேமரா மற்றும் ஜிபிஎஸ் வசதி பொருத்துப்பட்டுள்ளது. இக்கட்டான சூழலில் உள்ள பெண்கள் -1091 என்ற எண்ணையும், குழந்தைகள் 1098 என்ற எண்ணையும் அழைக்கலாம், இந்த தகவலை காவல் கட்டுப்பாட்டு மையம் அருகில் உள்ள அம்மா ரோந்து…
Read moreTranslated by Sandhya Raju கோட்டூர்புர வாசிகள் மேற்கொண்ட ஒரு மாற்றம் சென்னையின் பிற பகுதி மக்களுக்கு ஒரு ஊந்துகோலாக அமைந்துள்ளது. சுற்றுப்புறத்தை அழகாக மாற்ற உறுதி பூண்டு, அங்குள்ள சிறுவர்களும் இளைஞர்களும் தூய்மைபடுத்தியது மட்டுமில்லாமல் சுவர்களை வண்ண பூச்சுகளை கொண்டு அழகிய படங்கள் வரைந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு வாரம் முன்னர் வரை, கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரியத்தின் எச் ப்ளாக், ஒரு சிறிய குப்பை கிடங்கு போல் தான் இருந்தது. ஒவ்வொவொரு முறை அந்த இடத்தை கடக்கும் போது, மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அளவுக்கு துர்நாற்றம் வீசும். ஆனால் இன்று அந்த இடம் முற்றிலுமாக மாறியிருப்பதை காண மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வந்து செல்கின்றனர். நகரத்தின் பிற பகுதி மக்களும் இந்த மாற்றத்தை பின்பற்ற ஆர்வம் காட்டுகிறார்கள். "பிற ப்ளாக் மக்களும் இதை கடைப்பிடிக்க ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. மாற்றம்…
Read moreTranslated by Krishna Kumar கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஒரு இரு வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி சோகத்தில் ஆழ்த்தியது. அரசின் சார்பில் அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து திறந்த கிணறுகள், மற்றும் ஆழ்குழாய்களை ஆவண படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது. இதையொட்டி சென்னை குடிநீர் வாரியம், சென்னை வாசிகள் அனைவரையும் தங்கள் திறந்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்களை நவம்பர் மாத இறுதிக்குள் தங்களிடம் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது நவம்பர் 1 அன்று அறிவிக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு, மாநகரத்தில் எத்தனை ஆழ்குழாய்கள் தற்போது புழக்கத்தில் மற்றும் பழுது நிலையில் உள்ளன என்பதை பற்றிய அறிய உதவும். தற்போது இத்தகவல் அதிகாரிகளிடம் இல்லை. நீங்கள் திறந்த கிணறோ, அல்லது ஆழ்குழாயோ வைத்திருக்கும் சென்னை வாசியாக இருந்தால் சென்னை குடிநீர் வாரியத்தில் அதை பதிவிடுவது அவசியம். இதற்கான படிவம் இணையத்திலும், உங்கள் அருகில் உள்ள குடிநீர்…
Read moreTranslated by Sandhya Raju மாற்றம் என்பது இன்று தொடங்கி நாளை முடிவதல்ல. ஒரு நகரத்தில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிலுள்ள குடிமக்களின் பங்களிப்பு மிக அவசியம். கழிவு மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர்நிலைகளின் மறுசீரமைப்பு ஆகியவற்றில் பாரம்பரிய மற்றும் நவீன முறையை பயன்படுத்தி பல்வேறு முயற்சிகளை (தெற்கு) பிராந்திய துணை ஆணையர் பதவி வகிக்கும் ஐ ஏ எஸ் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு முயற்சிகள் குறித்தும், நடைமுறைபடுத்தும் பொழுது தான் சந்தித்த சவால்கள் பற்றியும் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்டார். ஆல்பி ஜான் வர்கீஸ், ஐ ஏ எஸ் சென்னையின் தெற்கு பகுதியில் ஜீரோ கழிவு முயற்சி எந்த கட்டத்தில் உள்ளது? அடையாறு, ஆல்ந்தூர், வளசரவாக்கம், பள்ளிக்கரணை, சோலிங்கநல்லூர் என தெற்கு பகுதியை ஐந்து மண்டலங்களாக பிரிக்கலாம். இங்குள்ள மொத்த மக்கள் தொகை 17,15,799…
Read more