
Similar Story
ஈரநிலத்தில் சென்னை குப்பை எரிவுலை திட்டம்: வடசென்னைக்கு வெள்ள அபாயத்தை தீவிர படுத்தக்கூடிய மற்றொரு திட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சி, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் (Integrated Solid Waste Processing Facility (IWPF)) கீழ், 2100 மெட்ரிக் டன் கழிவுகளை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் எரிவுலையை கொடுங்கையூரில் நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் தளம் - 01 குப்பை எரிவுலை (Waste-to-Energy Facility) திட்டமிடப்பட்டுள்ள இடம், ஈரநிலமாக அறியப்படும் சர்க்கார் நஞ்சை பகுதியில் அமைந்துள்ளது, இது வெள்ள பாதிப்புக்குட்பட்ட ஒரு பகுதியாகும். அதே நேரத்தில், இந்த இடம் ஏல ஆவணங்களில் (Tender Documents) குறைந்த வெள்ள பாதிப்புள்ள பகுதியில் உள்ளதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் அதிக வெள்ளம் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கும். இயற்கையான ஈரநிலங்களின் முக்கியத்துவம் பெருநகர சென்னை மாநகராட்சி - ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மண்டலம் 1 முதல் 8 வரை உற்பத்தியாகும் திடக்கழிவுகள் மற்றும் மண்டலம் 9 முதல் 15 வரை பிரிக்கப்பட்ட…