Actor Revathi was the first speaker at the event. “It is the good deeds and good people around us who still keep our hopes intact for a better world,” she began, drawing reference to all the negativity around us. “As a mother I feel there has been a drastic change, change for the good. It has given me the inquisitiveness to delve deep and question every happening. I feel the urge to leave behind the best for the young generation,” added the actor. She insisted that the responsibility of transferring the knowledge that we gain in our lives and the goodness we see around us to the young generation lies with us.
Hear Revathi speak at Mandram on parenting, positivity and natural living.
தாய்மை குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தார் திரைப்பட நடிகை ரேவதி . நல்ல எண்ணங்களும் நல்ல மனிதர்களும் இந்த உலகை நம்பிக்கையான பாதையில் செல்ல உத்வேகமளிக்கின்றனர் என்று தொடங்கிய அவர் ஒரு தாயாக தன் சிந்தனையில் பெரும் மாற்றத்தை உணர்வதாக கூறினார். நம்மைச் சுற்றி நடப்பதை பற்றி வேறுபட்ட ஆழமான சிந்தனைகள் வருவதோடு குழந்தைகளுக்காக சரியானதை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்லுலகை விட்டுச் செல்லும் சிந்தனை மேலோங்குவதாகவும் பகிர்ந்து கொண்டார். ஒரு தாயாக நச்சில்லாத உணவை தன் குழந்தைக்கு தரும் பொருட்டு இயற்கையை ஒத்து வாழ ஆரம்பித்துள்ளதாகவும், அதே முக்கியத்துவத்தை நாம் அனைவரும் நல்லெண்ணங்களையும் இளம் தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும் என்று கூறினார்.