அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள், ஆற்றில் வெளியிடப்படும் சூடான நீர், எண்ணெய் நிறுவனங்களின் கழிவுகள் ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ள எண்ணூர் முதல் பழவேற்காடு வரையிலான மீனவ மக்களின் வாழ்வாதரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது ஒரு புதிய பிரச்சனை. செய்தி சேகரிப்பதற்காக 7 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கொசஸ்தலை ஆறு, முகத்துவாரம், பக்கிங்காம் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளேன். அங்குள்ள மீனவர்களுக்கு முக்கியமான பிரச்சனையே அனல்மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுதான். ஆனால், இந்த முறை முற்றிலும் வேறுபட்ட ஒரு பிரச்சனைக்காக அங்கு சென்றிருந்தேன். Read more: Oil spill in Chennai’s Manali area can cause irreparable damage to Ennore Creek wetland நாங்கள் படகில் சென்று கொண்டிருக்கையில் கொசஸ்தலை ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் கட்டிடக் கழிவுகளை கொட்டி வைத்ததுபோல மேடு மேடாகத் தெரிந்தது என்னை ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கியது. அப்போது என் படகிலிருந்த மீனவர் ஒருவர் அந்த மேட்டில்…
Read more