KP பார்க்கில் உள்ள 13 மாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் தனது வீட்டிலிருந்து வெளியே செல்ல புறப்பட்டார் ச. கணேசன் (வயது 52). எப்போதும் போல மின் தூக்கியில் ஏறியவரை, உயிர் இல்லாத சடலமாகத்தான் மீட்கமுடிந்தது. ச. கணேசன் (வயது 52). Pic: Sakthi Vel N ஆறாவது மற்றும் ஏழாவது மாடியினிடையில் மின்தூக்கி செயலிழந்துவிட்ட நிலையில், அவரை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தபோது, கால் தவறி ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார் கணேசன். இம்மரணம் சம்பவித்து ஒரு மாதமான நிலையில், அங்கிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் TT பிளாக் குடியிருப்புவாசிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “போன மாசம் KP பார்க் ல நடந்த சம்பவம் எங்களுக்கும் நடக்கணுமா? 13 மாடி கட்டடம் எங்களுக்கு எதுக்கு?” என்று கேட்கிறார்கள் அம்மக்கள். Read more: Chennai’s decades-long policy failure to address housing issues of the…
Read more