Articles by Poovulagin Nanbargal team

Poovulagin Nanbargal is an environment organisation working in Tamil Nadu for more than 30 years. It focusses on issues of environmental degradation, conservation and development.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டுருவாக்கம் செய்து 93 ஏக்கர் பரப்பளவில் 99 கோடி செலவில் பல்லுயிர்ப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  மீட்கப்பட்ட நிலத்தில் பூங்கா அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 05.02.2024 அன்று சென்னையில் நடந்தபோது இத்திட்டம் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. சென்னையின் மிக அதிகமாக மாசுபட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட ஈரநிலங்களில் ஒன்றான பள்ளிக்கரணையில் 65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள் வாழ்ந்து…

Read more