Translated by Sandhya Raju மிட்நைட் பிரியாணி என்ற தன் சிறிய உணவகத்தின் விரிவாக்கத்தால் மகிழ்ச்சியில் இருந்தார் எம் காதர் மொகிதீன். ஊரடங்கு உத்தரவுக்கு ஒரு வாரம் முன்பு தான் அரும்பாக்கத்தில் புதிய கிளையை திறந்திருந்தார். வியாபாரம் சூடு பிடிக்கும் என்ற நிலையில் ஊரடங்கு உத்தரவு அவரது அத்தனை கனவுகளையும் சிதைத்துள்ளது. சென்னையில் முதன் முறையாக தனது உணவு வர்த்தகத்தை தொடங்கிய அவர், நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என கவலையில் உள்ளார். நிச்சயமற்ற தன்மை காரணமாக டெலிவரி முகவர்களுடன் கூட்டாளராக அவர் விரும்பவில்லை, ஆனாலும் தன்னிடம் வேலை பார்க்கும் எவரும் பசியால் வாடக்கூடாது என்பதால், காய் கனி வியாபாரத்தை தொடங்கியுள்ளார். சமைக்கவும், பறிமாறவும் காதரிடம் நான்கு பேர் வேலை பார்க்கிறார்கள். உணவகம் மூடப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரும் கஷ்டத்தில் உள்ளனர். மாத சம்பளம் அளிக்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்துள்ளார். "என்னுடைய பகுதியில் தினமும் காய்கறிகள் விற்கிறேன்," எனக் கூறும் அவர்.…
Read moreWe need 2 min of your time!
Tell us what matters to you—and help make our stories, data, workshops, and civic resources more useful for you and your city—in this short survey.