Translated by Sandhya Raju
“மரம் வளர்போம், மழை பெறுவோம்” – சுற்றுசூழலை பேணிக் காக்க மாநிலம் முழுவதும் இந்த வாசகத்தை காணலாம். கல்வி நிறுவனங்கள் முதல் தொண்டு நிறுவனங்கள் வரை, முக்கிய நாட்களை கொண்டாட, மரம் நடும் விழாவை தவறாமல் ஏற்பாடு செய்கின்றன. இந்த முயற்சிகள் உண்மையாகவே பலன் தருகிறதா? நடப்படும் மரக்கன்றுகள் எவ்வாறு உள்ளன? இவை நகரத்தை பசுமையாக மாற்றுகிறதா?
சுருங்கி வரும் பசுமை
கடந்த இருபது ஆண்டுகளில் சென்னையின் பசுமை போர்வை வெகுவாக குறைந்து உள்ளது. வர்தா புயலின் தாக்கத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்ததில், சென்னையில் பதினைந்து சதவிகித மரங்கள் குறைந்துள்ளதாக கேர் யெர்த் டிரஸ்ட் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. நகர்புறத்தில் முப்பத்திமூன்று சதவிகித பசுமை இருத்தல் வேண்டும் என கூறப்படுகிறது. சென்னை மெட்ரோ போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சி காரணமாகவும் சென்னை நகரின் பல பகுதிகளில் மரங்கள் சாய்க்கப்பட்டுள்ளன.
நகரமயமாக்கல் நகரத்தின் பசுமை போர்வைக்கு பெருத்த அடி கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவான 9 சதுர மீட்டர் என்ற அளவை விட மிகவும் குறைவாக 0.5 சதுர மீட்டர் அளவே உள்ளது. போதிய அளவு பசுமை இல்லாதது, இதனுடன் எங்கு பார்த்தாலும் கான்கிரீட் கொண்டு மூடப்பட்டதாலும், நகர வெப்பமயமாகிவிட்டது. வரும் காலத்தில் சராசரி வெப்பம் இரண்டு டிகிரி செல்சியஸ் கூடும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
மரம் நடுதல் தீர்வாக அமைகிறதா?
வளர்ச்சி மற்றும் இயற்கை பேரழிவால் நகரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சென்னை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். அதிகரித்து வரும் மரம் நடும் முயற்சிகள், எந்த அளவிற்கு தாக்கத்தை சரி செய்ய வேண்டும் என்ற அவசர நிலையை அரசுக்கும் மக்களுக்கும் உணர்த்தியுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
“பள்ளியின் என் எஸ் எஸ் மூலம் ஒவ்வொரு வருடமும் மரம் நடும் நிகழ்ச்சியை மேற்கொள்வோம். எங்களுக்கு மரக்கன்றுகள் தருவார்கள். இவற்றை எங்கள் பள்ளியிலும் அதை சுற்றியும் நடுவோம். சில மரக்கன்றுகளை வீட்டில் அருகில் நட எடுத்துச் செல்வோம். முடியும் வரை நாங்கள் நடும் மரக்கன்றுகளை பராமரிக்க ஊக்கப்படுத்தப்படுவோம்.” என்கிறார் கே நிரித்தியா. இவர் சென்னையில் உள்ள பிரபல பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.
நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மரம் நடும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஆனால், பலருக்கு எந்த மாதிரி மரங்கள் நட வேண்டும், எந்தெந்த மரங்கள் நட்டால் சுற்றுசூழலுக்கு ஏற்றது என்ற விழிப்புணர்வு இல்லை. மிக சில நிறுவனங்களே இவை பற்றிய புரிதலுடன் செயலாற்றுகிறது.
“எங்கள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நிறுவனத்தின் சமூக நல துறை மூலம் இது செய்யப்படுகிறது. ஆனால் மரம் நட்ட பின் இவற்றை பாதுகாப்பது குறித்து எந்தவொரு அறிவுறுத்தலும் எங்களுக்கு வந்ததில்லை. எங்கள் அலுவலகத்திற்கு வெளிய இவ நடப்படுவதால், யார் இம்மரங்களை பேணுகின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது,” என்கிறார் மோகன் எஸ். இவர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
சரியான முறை
நகரத்தில் மரம் நடுவது குறித்து பசுமை வழிகாட்டியை நகர மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சுற்றுசூழலுக்கு உகந்த நேர்மறை முயற்சிகளை பெரிய அளவில் மேற்கொள்ளும் பொழுது கடைபிடிக்க வேண்டிய பரந்த கட்டமைப்பை இந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் சூழ்நிலைகேற்ப எந்த வகை மரங்களை நடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது: சாலையோரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் நடப்பட வேண்டியவை, உள்சாலைகாளில் நட வேண்டியவை, சதுப்பு நிலங்களில் நட வேண்டிய மரங்கள் எவை என பட்டியலிடப்பட்டுள்ளன.
மரம் நட்ட பின், இவற்றை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்படப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கேர் எர்த் டிரஸ்ட் நகரம் முழுவதும் விரிவான ஆய்வு நடத்தியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் எந்த வகை மரங்கள் நட வேண்டும், எந்த மரங்களை நடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
ஆய்வின் முடிவில் வரையுறுக்கப்பட்ட அட்டவணையை, கேர் எர்த் டிரஸ்ட் அமைப்பின் அணி தலைவர் கார்த்திக் என் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
1. வீதியில் உள்ள அசையா பொருட்கள், மேலே செல்லும் கம்பிகள், பூமிக்கு அடியில் உள்ள குழாய்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள் (நகராட்சி ஊழியர்களிடம் இந்த தகவல்களை பெறலாம்)
2. எந்த வகை மரங்களை நட வேண்டும் என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள். பூர்வீக மர இனங்களை நட வேண்டும், (பராம்பரிய வகைகளை சார்ந்த மரமாக இருந்தாலும்) ஒற்றை இன மரங்களை நடக்கூடாது.
3. எக்காரணத்தை கொண்டும் நம் மண்ணின் பாரம்பரியத்தை சாராத மரத்தை நடவே கூடாது. அதிவேக வளர்ச்சி, விரைவில் பூத்துக் குலுங்கும் என்பதால் விரைவில் மரம் நட்ட பலனை உணர்த்த முடியும் என்ற காரணத்திற்காக இத்தகைய மரங்களை மக்கள் தேர்ந்தெடுப்பர்.
4. அடுத்தெடுத்த வருடங்களில், முக்கியமாக வெயில் காலத்தில், பராமரிப்பு குறித்து திட்டமிட வேண்டும். மரம் நடும் முயற்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இதைப்பற்றி ஆலோசிக்க வேண்டும்” யார் தண்ணீர் ஊற்றுவது, உரம் போடுவது, பேணுவது, எவ்வாறு செய்யப்படும் என அனைத்தும் திட்டமிட வேண்டும்.
5. மரக் கன்றுகளை ஆடு மாடு, மனிதர்கள், சாலை வண்டிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும்; இதற்கு மரத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும்.
6. மரம் ஸ்திரமாக வளர தேவையான ஊன்றுகாலை நட வேண்டும்.
7. மழைக்காலம் வரும் முன் மரம் நடுவது ஏதுவான காலமாகும்; வெயில் காலத்தில் போதிய நீர் பாய்ச்சி குப்பை சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
8. உயரமான மரக் கன்றுகளை நட்டால் பயன் தரும்.
9. குறுகலான சந்துகள், போதிய இடம் இல்லாத இடங்களில், பனை மரத்தை நடலாம்.
சென்னைக்கு உகந்தவை | சென்னையில் நடக்கூடாதவை |
|
|
You can read the story in English here.